டிசம்பர் 13 ( December 13 )
கிரிகோரியன் ஆண்டின் 347 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில்
348 ஆம் நாள். ஆண்டு
முடிவிற்கு மேலும் 18
நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1577 - சேர் பிரான்சிஸ் டிரேக்
இங்கிலாந்தின் பிளைமவுத்தில்
இருந்து தனது உலகத்தைச்
சுற்றிவரும் பயணத்தை
ஆரம்பித்தார்.
1642 - ஏபெல் டாஸ்மான்
நியூசிலாந்தை அடைந்தார்.
1888 - யாழ்ப்பாணத்தில்
இடம்பெற்ற சூறாவளியில் பலத்த
சேதம் ஏற்பட்டது.
1937 - சீனாவின் நான்கிங் நகரம்
சப்பானியரிடம் வீழ்ந்ததை
அடுத்து அங்கு பல
பொதுமக்கள் கொல்லப்பட்டும்,
பாலியல் வதைக்கும்
உள்ளாக்கப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஹங்கேரி , ருமேனியா ஆகியன
ஐக்கிய அமெரிக்கா மீது
போரை அறிவித்தன.
1943 - இரண்டாம் உலகப் போர் :
ஐக்கிய அமெரிக்காவின் 710
போர் விமானங்கள் ஜெர்மனியின்
"கீல் நகர் மீது தாக்குதலை
நடத்தின.
1949 - இஸ்ரேலின் சட்டசபை
நாட்டின் தலைநகரை
ஜெருசலேம் நகருக்கு மாற்ற
முடிவெடுத்தது.
1959 - மக்காரியோஸ்
சைப்பிரசின் முதலாவது
ஜனாதிபதியானார்.
1972 - அப்பல்லோ 17 விண்வெளி
வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன்
ஸ்மித் ஆகியோர் சந்திரனில்
இறங்கினர். 20ம் நூற்றாண்டில்
சந்திரனில் இறங்கிய கடைசி
மனிதர்கள் இவர்களே.
1974 - மோல்ட்டா
குடியரசானது .
1981 - போலந்தில் இராணுவ
ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1996 - ஐக்கிய நாடுகள்
சபையின் பொதுச்
செயலாளராக கோஃபி
அன்னான் தெரிவு
செய்யப்பட்டார்.
2001 - இந்திய
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற
தீவிரவாதிகளின் தாக்குதலில்
தீவிரவாதிகள் உட்பட 15 பேர்
கொல்லப்பட்டனர்.
2003 - முன்னாள் ஈராக் அரசுத்
தலைவர் சதாம் உசேன் அவரது
சொந்த ஊரான திக்ரித்துக்கு
அருகே அமெரிக்கப்
படையினரால் கைது
செய்யப்பட்டார்.
2004 - முன்னாள் சிலி
சர்வாதிகாரி ஆகுஸ்டோ
பினோச்சே வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டார்.
2006 - பாய்ஜீ என்ற சீன ஆற்று
டால்ஃபின் அருகிய இனமாக
அறிவிக்கப்பட்டது.
பிறப்புகள்
1780 – ஜோகன் தோபரீனர்,
செருமானிய வேதியியலாளர்
(இ. 1849 )
1816 – வெர்னர் வொன் சீமன்சு,
செருமானிய பொறியியலாலர்,
தொழிலதிபர் (இ. 1892 )
1903 – எல்லா பேக்கர் , அமெரிக்க
செயற்பாட்டாளர் (இ. 1986 )
1926 – செ. குப்புசாமி ,
தொழிற்சங்கத் தலைவர் (இ). 2013
1928 – ஈழத்துப் பூராடனார் ,
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் (இ.
2010 )
1954 – ஹர்ஷ் வர்தன் , இந்திய
மருத்துவர், அரசியல்வாதி
1981 – ஏமி லீ, அமெரிக்கப்
பாடகர்
1989 – டேலர் ஸ்விஃப்ட் ,
அமெரிக்கப் பாடகி, நடிகை
2009 – பவுல் சாமுவேல்சன் ,
நோபல் பரிசு பெற்ற
அமெரிக்கப் பொருளியலாளர்
(பி. 1915 )
இறப்புகள்
1048 – அல்-பிருனி , பாரசீகக்
கணிதவியலாளர் (பி. 973)
1557 – டார்ட்டாக்ளியா ,
இத்தாலியக் கணிதவியலாளர்
(பி. 1499 )
1784 – சாமுவேல் ஜோன்சன்,
ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1709 )
1849 – ஒப்மான்செக் ,
செருமானிய தாவரவியலாளர்
(பி. 1766 )
1935 – விக்டர் கிரிக்னார்டு ,
நோபல் பரிசு பெற்ற பிரான்சிய
வேதியியலாளர் (பி. 1871 )
1944 – வசீலி கண்டீன்ஸ்கி ,
உருசிய-பிரான்சிய ஓவியர் (பி.
1866 )
1984 – ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் ,
இலங்கைத் தமிழ் மனித உரிமை
ஆர்வலர்
1986 – எல்லா பேக்கர் , அமெரிக்க
செயற்பாட்டாளர் (பி. 1903)
1987 – நா. பார்த்தசாரதி , தமிழக
எழுத்தாளர், இதழாசிரியர் (பி.
1932 )
2010 – திமிலை மகாலிங்கம் ,
ஈழத்து எழுத்தாளர் (பி. 1938 )
2010 – ரிச்சர்ட் ஆல்புரூக்,
அமெரிக்க ஊடகவியலாளர் (பி.
1941 )
2010 – என்ரீக்கே மொறேந்தே,
எசுப்பானிய பாடகர் (பி. 1942 )
2012 – கர்ணன் , தமிழகத்
திரைப்பட ஒளிப்பதிவாளர்,
இயக்குநர்
2015 – அருண் விஜயராணி ,
ஈழத்து எழுத்தாளர் (பி. 1954 )
சிறப்பு நாள்
குடியரசு நாள் ( மோல்ட்டா ,
1974)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக