வியாழன், 8 டிசம்பர், 2016

டிசம்பர் 9 ( December 9)

டிசம்பர் 9 ( December 9)

கிரிகோரியன் ஆண்டின் 343 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 344 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 22 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1582 (ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) -
பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை ,
டிசம்பர் 20 ( கிரெகோரியன் ) ஆக்கியது.
1793 - நியூயோர்க் நகரின் முதலாவது
நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா"
வெளியிடப்பட்டது.
1856 - ஈரானிய நகரம் புஷேஹர்
பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம்
வீழ்ந்தது.
1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ
தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம்
கொண்டுவரப்பட்டது.
1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின்
ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1922 - போலந்தின் முதலாவது அதிபராக
"கப்ரியேல் நருட்டோவிச்" தெரிவு
செய்யப்பட்டார்.
1937 - ஜப்பானியப் படைகள் சீன
நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.
1940 - இரண்டாம் உலகப் போர் :
பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள்
இத்தாலியப் படையினரை எகிப்தில்
தாக்கினர்.
1941 - இரண்டாம் உலகப் போர் : சீனக்
குடியரசு , கியூபா , குவாத்தமாலா ,
பிலிப்பீன்ஸ் ஆகியன ஜெர்மனி மற்றும்
ஜப்பான் மீது போரை அறிவித்தன.
1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர
பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
1953 - ஜெனரல் எலெக்ட்றிக்
நிறுவனம் தனது நிறுவனத்தில்
பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும்
பணிநீக்கம் செய்தது.
1961 - பிரித்தானியாவிடம் இருந்து
தங்கனீக்கா விடுதலை பெற்றது.
1979 - பெரியம்மை நோய் முற்றாக
அழிக்கப்பட்டு விட்டதாக உலக
சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித
உயிர் கொல்லி நோயொன்று
முற்றாக அழிக்கப்பட்டது இதுவே
முதலாவதாகும்.
1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட
நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு.
கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம்
செய்யப்பட்டனர்.
1990 - லெக் வலேசா போலந்தின்
முதலாவது மக்களால் தெரிவு
செய்யப்பட்ட அதிபரானார்.
1992 - வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ் ,
இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை
அறிவிக்கப்பட்டது.
2003 - மாஸ்கோ நகர மத்தியில்
இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6
பேர் கொல்லப்பட்டனர்.
2006 - மாஸ்கோவின் மருத்துவமனை
ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி
45 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1579 – மார்டின் தெ போரஸ் ,
pஎருவின் புனிதர் (இ. 1639 )
1594 – சுவீடனின் கஸ்டாவஸ்
அடால்பஸ் (இ. 1632)
1608 – ஜான் மில்டன், ஆங்கிலேயக்
கவிஞர், மெய்யியலாளர் (இ. 1674 )
1868 – ஃபிரிட்ஸ் ஹேபர் , நோபல் பரிசு
பெற்ற போலந்து-செருமானிய
வேதியியலாளர் (இ. 1934)
1881 – ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல்,
இலங்கை மருத்துவர், எழுத்தாளர் (இ. 1969 )
1906 – கிரேசு ஹாப்பர் , அமெரிக்க
கணினியியலாளர் கோபால் நிரலாக்க
மொழியை உருவாக்கியவர் (இ.
1992 )
1913 – ஓமாயி வியாரவாலா,
இந்தியப் புகைப்படக் கலைஞர் (இ. 2012 )
1927 – பி. எஸ். மணிசுந்தரம் , 2013)
இந்தியக் கல்வியாளர், கணினி
அறிவியலாளர் (இ. 2013 )
1930 – சுப. சதாசிவம் , தமிழக
எழுத்தாளர்
1934 – சூடி டென்ச் , ஆங்கிலேய நடிகை
1936 – கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, இலங்கை
கத்தோலிக்க ஆயர்
1943 – நேசமணி ஜோன் , மலேசிய
எழுத்தாளர்
1946 – சோனியா காந்தி , இத்தாலிய-
இந்திய அரசியல்வாதி
1954 – ழான்-குளோடு சுன்கர், லக்ச்ம்பர்க்
பிரதமர்
1978 – ஜெசி மெட்காஃப் ,
அமெரிக்க நடிகர்
1981 – மார்டி ஃபிஷ், அமெரிக்க
டென்னிசு வீரர்
1981 – தியா மிர்சா, இந்திய நடிகை
இறப்புகள்
1669 – ஒன்பதாம் கிளமெண்ட்
(திருத்தந்தை) (பி. 1600 )
1937 – நில்சு குஸ்டாப் டேலன் , நோபல் பரிசு
பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (பி.
1869 )
1979 – ஃபுல்டன் ஜான் ஷீன் ,
அமெரிக்கப் பேராயர் (பி. 1895 )
1997 – சிவராம காரந்த், கன்னட
எழுத்தாளர் (பி. 1902 )
2006 – சு. வில்வரத்தினம் ஈழத்துக்
கவிஞர் (பி. 1950 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( தன்சானியா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக