டிசம்பர் 12 ( December 12 )
கிரிகோரியன்
ஆண்டின் 346 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
627 - பைசண்டைன் பேரரசு இராணுவம்
ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப்
படைகளைத் தோற்கடித்தன.
1098 - சிரியாவின் மாரட்-அல்-நூமன்
நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின்
படைகள் தாக்கி 20,000
பொதுமக்களைக்
கொன்றனர்.
1787 - பென்சில்வேனியா ஐக்கிய
அமெரிக்காவின் இரண்டாவது
மாநிலமானது.
1812 - ரஷ்யாவின் மீதான
பிரெஞ்சுப் படையெடுப்பு
முடிவடைந்தது.
1817 - நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர்
லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா
என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு
பரிந்துரைத்தார்.
1862 - யாசூ ஆற்றில் ஐக்கிய
அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ்.கைரோ
என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல்
கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
1871 - யாழ்ப்பாணத்தில் முழுமையான
சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன்
லொக்கியர் தலைமையில் ஒரு
அறிவியலாளர் குழு இதனைப்
பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம்
வந்தது.
1901 - அட்லாண்டிக் கடலூடாக முதன்
முதலாக இங்கிலாந்தில் இருந்து
கனடாவின் நியூபின்லாந்தில்
வானொலி சமிக்கைகளை
மார்க்கோனி பெற்றார்.
1911 - இந்தியாவின் தலைநகரம்
கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு
மாற்றப்பட்டது.
1923 - இத்தாலியில் போ ஆற்றின்
அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர்
கொல்லப்பட்டனர்.
1939 - குளிர்காலப் போர்: பின்லாந்துப்
படைகள் சோவியத் படைகளை
டொல்வஜார்வி என்ற இடத்தில்
இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
1940 - இங்கிலாந்தின் ஷெஃபீல்ட்
நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய
விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர்
கொல்லப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
பிரித்தானியா பல்கேரியாவின் மீதும்,
ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய
அமெரிக்கா மீதும், இந்தியா ,
ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.
1941 - அமெரிக்கப் போர்க் கப்பல் வேக்
தீவுக் கரைக்கப்பால் நான்கு
ஜப்பானியக் கப்பல்களைத் தாக்கி
மூழகடித்தது.
1941 - யூதர்களை வெளியேற்றும்
திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர்
அறிவித்தார்.
1942 - நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில்
இடம்பெற்ற தீயில் 100 பேர்
கொல்லப்பட்டனர்.
1948 - மலேசியாவில் நிலை
கொண்டிருந்த
ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14
பேர் பட்டாங் காலி என்ற இடத்தில்
உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக்
கொன்று கிராமத்தைத் தீ வைத்து
எரித்தனர்.
1963 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
கென்யா விடுதலை பெற்றது.
1979 - ரொடீசியாவின்
பெயர் சிம்பாப்வேயாக
மாற்றப்பட்டது.
1984 - மவுரித்தேனியாவில்
இடம்பெற்ற இராணுவப் புரட்சியில்
அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி
அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அஹமது
டாயா புதிய அதிபரானார்.
1985 - கனடாவின் நியூபின்லாந்தில்
ஐக்கிய அமெரிக்காவின் 248
இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற
விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில்
பயணஞ்செய்த அனைத்து 256 பேரும்
கொல்லப்பட்டனர்.
1988 - லண்டனில் இரண்டு
தொடருந்துகள் மோதியதில் 35 பேர்
கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல்
காயமடைந்தனர்.
1991 - ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம்
இருந்து விடுதலை பெற்றது.
1997 - களுத்துறை சிறைச்சாலைப்
படுகொலைகள் : இலங்கையின்
களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ்
அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால்
வெட்டிக் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1621 – ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட்,
டச்சு இராணுவத் தளபதி (இ. 1656 )
1803 – ஜேம்ஸ் சால்லிஸ் , ஆங்கிலேய
வானியலாளர் (இ. 1882 )
1863 – எட்வர்ட் மண்ச் , நோர்வே ஓவியர் (இ.
1944 )
1922 – ராஜா செல்லையா ,
இந்தியப் பொருளாதார நிபுணர்
(இ. 2009 )
1927 – ராபர்ட் நாய்சு ,
அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்,
இன்டெல் நிறுவனத்தை ஆரம்பித்தவர்
(இ. 1990 )
1928 – சிங்கிஸ் ஐத்மாத்தவ் ,
கிர்கித்தான் எழுத்தாளர் (இ. 2008 )
1931 – சௌகார் ஜானகி,
தென்னிந்திய நடிகை
1940 – சரத் பவார் , இந்திய
அரசியல்வாதி
1949 – கோபிநாத் முண்டே , இந்திய
அரசியல்வாதி (இ. 2014 )
1949 – பில் நை , ஆங்கிலேய நடிகர்
1950 – ரசினிகாந்த், தென்னிந்திய
நடிகர், தயாரிப்பாளர்
1950 – எரிக் மாஸ்க்கின் , நோபல் பரிசு
பெற்ற அமெரிக்கப்
பொருளியலாளர்
1962 – டிரேசி ஆஸ்டின், அமெரிக்க
தென்னிசு ஆட்ட வீரர்
1969 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன்,
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் (இ.
2006 )
1970 – ஜெனிஃபர் கானலி,
அமெரிக்க நடிகை
1981 – யுவராஜ் சிங் , இந்தியத்
துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1921 – ஹென்ரியேட்டா லீவிட்,
அமெரிக்க வானியலாளர் (பி. 1868 )
1939 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ்,
அமெரிக்க நடிகர் (பி. 1883 )
1940 – தியாகி விஸ்வநாததாஸ்
நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886 )
1964 – மைதிலி சரண் குப்த் , இந்தியக்
கவிஞர் (பி. 1866 )
2004 – ஜேம்ஸ் ராம்ஸ்போதம் ,
யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச்
சீடர் (பி. 1915 )
2006 – இ. இரத்தினசபாபதி,
ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான
ஈரோசு என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938 )
2013 – அப்துல் காதிர் முல்லா ,
வங்காளதேச அரசியல்வாதி (பி. 1948 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( கென்யா , 1963)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக