செவ்வாய், 13 டிசம்பர், 2016

டிசம்பர் 14 ( December 14 )

டிசம்பர் 14 ( December 14 )

கிரிகோரியன்
ஆண்டின் 348 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 349 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 17 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1287 - நெதர்லாந்தில்
இடம்பெற்ற பெரும்
வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு
சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில்
கொல்லப்பட்டனர்.
1542 - இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம்
மேரி என்ற பெயரில்
ஸ்கொட்லாந்தின்
அரசியானாள்.
1819 - அலபாமா ஐக்கிய
அமெரிக்காவின் 22வது
மாநிலமானது.
1884 - இலங்கையில் இடம்பெற்ற
பெரும் சூறாவளி காரணமாக
யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும்
உயிர்ச் சேதமும் பொருட்சேதமும்
ஏற்பட்டன.
1899 - யாழ்ப்பாணம் பொது
மருத்துவமனையை தனியாரிடம் இருந்து
இலங்கை அரசாங்கம்
பொறுப்பெடுத்துக்
கொண்டது.
1900 - மாக்ஸ் பிளாங்க் தனது
கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய
கொள்கையை நிறுவினார்.
1911 - ரோல்ட் அமுண்ட்சென்
தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென்
முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற
பெயரைப் பெற்றனர்.
1918 - பின்லாந்தின் மன்னனாக
ஜெர்மனியின் இளவரசன் பிறீட்ரிக்
கார்ல் வொன்
ஹெஸ்சென்
தெரிவுசெய்யப்பட்டான்.
1939 - நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து
சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.
1941 - உக்ரேனின் கார்க்கிவ் நகரின்
நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள்
அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில்
வெளியேற உத்தரவிட்டான். அடுத்த
இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள்
சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு
ஒப்பந்தம் செய்து கொண்டது.
1946 - ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க்
நகரில் அமைக்க முடிவாகியது.
1962 - நாசாவின் மரைனர் 2 விண்கலம்
வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே
வெள்ளியை அண்மித்த முதலாவது
விண்கலமாகும்.
1971 - வங்காளதேச விடுதலைப் போர் :
கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200
இற்கும் அதிகமான அறிவாளிகள்
பாக்கித்தான் இராணுவத்தினரால்
படுகொலை செய்யப்பட்டனர் .
1972 - அப்பல்லோ 17: யூஜின் சேர்னன்
சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.
2003 - சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட
செய்தியை ஐக்கிய
அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ்
டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக
றிவித்தார்.
2003 - பாகிஸ்தான் அதிபர்
பெர்வேஸ் முஷாரப் கொலை
முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
2004 - தென் பிரான்சில் வான்
வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற
உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.
பிறப்புகள்
1503 – நோஸ்ராடாமஸ் , சிறந்த குறி
சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)
1546 – டைக்கோ பிராகி, தென்மார்க்கு
வானியலாளர், வேதியியலாளர் (இ.
1601 )
1895 – ஐக்கிய இராச்சியத்தின்
ஆறாம் ஜோர்ஜ் (இ. 1952)
1895 – போல் எல்யூவார் , பிரான்சியக்
கவிஞர் (இ. 1952 )
1896 – எம். அழகப்ப மாணிக்கவேலு ,
தமிழக அரசியல்வாதி (இ. 1996 )
1908 – பாலூர் து. கண்ணப்பர்,
தமிழறிஞர், எழுத்தாளர்; உரையாசிரியர்
(இ. 1971 )
1918 – பி. கே. எஸ். அய்யங்கார், இந்திய
யோகா பயிற்சியாளர், எழுத்தாளர் (இ.
2014 )
1924 – ராஜ்கபூர், பாக்கித்தானிய-
இந்திய நடிகர், இயக்குநர்,
தயாரிப்பாளர் (இ. 1988 )
1934 – சியாம் பெனகல் , இந்திய
இயக்குநர்
1934 – ரெ. சண்முகம், 2010)
மலேசியக் கலைஞர், கவிஞர் (இ. 2010 )
1946 – சஞ்சய் காந்தி, இந்திய
அரசியல்வாதி (இ. 1980 )
1947 – டில்மா ரூசெஃப் , பிரேசிலின்
36வது அரசுத்தலைவர்
1953 – விஜய் அமிர்தராஜ் , இந்திய
தென்னிசு வீரர்
1966 – எல் தோர்னிங் இசுமிட்,
தென்மார்க்கின் 41வது பிரதமர்
1984 – ரானா தக்குபாடி , இந்திய
நடிகர், தயாரிப்பாளர்
1988 – வனேசா ஹட்ஜன்ஸ் ,
அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
1591 – சிலுவையின் புனித யோவான்,
எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. 1542 )
1799 – சியார்ச் வாசிங்டன்,
அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவர்
(பி. 1732 )
1953 – வி. ஐ. முனுசாமி பிள்ளை , தமிழக
அரசியல்வாதி (பி. 1889 )
1959 – சோமசுந்தர பாரதியார்,
தமிழறிஞர் (பி. 1879 )
1989 – ஆந்திரே சாகரவ் , அமைதிக்கான
நோபல் பரிசு பெற்ற உருசிய
இயற்பியலாளர் (பி. 1921 )
2006 – அன்ரன் பாலசிங்கம் , தமிழீழ
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (பி.
1938 )
2013 – பீட்டர் ஓ டூல் , ப்ரித்தானிய-ஐரிய
நடிகர் (பி. 1932)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக