டிசம்பர் 11 ( December 11 )
கிரிகோரியன்
ஆண்டின் 345 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 346 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 20 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1282 - வேல்சின் கடைசி பழங்குடி இளவரசர்
கடைசி லெவெலின்
கொல்லப்பட்டார்.
1789 - ஐக்கிய அமெரிக்காவின்
மிகப் பழமையான பொதுப்
பல்கலைக்கழகம் வட கரொலைனா
பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்)
அமைக்கப்படட்து.
1792 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின்
பதினாறாம் லூயி மன்னன்
நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டு
விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.
1816 - இந்தியானா ஐக்கிய
அமெரிக்காவின் 19வது
மாநிலமானது.
1907 - நியூசிலாந்தின் நாடாளுமன்றக்
கட்டடம் தீயில் எரிந்து சாம்பரானது.
1917 - பிரித்தானியப் படைகள்
ஓட்டோமான் பேரரசிடம் இருந்து
ஜெருசலேமை மீட்டன.
1927 - சீனாவின் குவாங்சூ நகரை
கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி அதனை குவாங்சூ
சோவியத் என மாற்றியிருப்பதாக
அறிவித்தனர்.
1931 - ஆஸ்திரேலியா , கனடா ,
அயர்லாந்து , நியூசிலாந்து , மற்றும்
தென்னாபிரிக்கா ஆகியவற்றுக்கு
தமது முழுமையான அரசியலமைப்புகளைப்
பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர்
சட்டம் 1931 பிரித்தானிய
நாடாளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டது.
1936 - ஐக்கிய இராச்சியத்தின் மன்னன்
எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தார்.
1937 - எஸ்தோனியாத் தலைவர் ஜான்
ஆன்வெல்ட் ஸ்டாலின்
ஆட்சியாளர்களால் கைது
செய்யப்பட்டுக் கொலை
செய்யப்பட்டார்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஜேர்மனியும் இத்தாலியும் ஐக்கிய
அமெரிக்காமீது போரை அறிவித்தன.
1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
(யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.
1958 - அப்பர் வோல்ட்டா பிரான்சிடம்
இருந்து விடுதலையை அறிவித்தது.
1964 - நியூயோர்க் நகரில் ஐநா
பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா
உரையாற்றினார். இவர் உரையாற்றிக்
கொண்டிருந்தபோது ஐநா
கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல்
இடம்பெற்றது.
1972 - அப்பல்லோ 17 சந்திரனில்
இறங்கியது.
1981 - எல் சல்வடோரில் இராணுவத்தினர்
நாட்டின் உள்நாட்டுப் போரின் ஒரு
கட்டமாக கிட்டத்தட்ட 900
பொதுமக்களை
கொன்றனர்.
1993 - மலேசியாவின் தலைநகர்
கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம்
ஒன்று வீழ்ந்ததில் 48 பேர்
கொல்லப்பட்டனர்.
1994 - உருசியவின் அரசுத்தலைவர் போரிஸ்
யெல்ட்சின் உருசியப் படைகளை
செச்சினியாவுக்கு அனுப்பினார்.
1998 - தாய்லாந்தைச் சேர்ந்த விமானம்
வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1781 – டேவிட் புரூஸ்டர்,
இசுக்கொட்டிய இயற்பியலாளர்,
கணிதவியலாளர், வானியலாளர் (இ.
1868 )
1789 – மிரோன் வின்சுலோ , அமெரிக்க
மதப்பரப்புனர் (இ. 1864 )
1803 – ஹெக்டர் பேர்லியோஸ் ,
பிரான்சிய இசையமைப்பாளர் (இ. 1869)
1843 – ராபர்ட் கோக், நோபல் பரிசு
பெற்ற செருமானிய மருத்துவர்
(இ. 1910 )
1863 – ஆன்னி ஜம்ப் கெனான் ,
அமெரிக்க வானியலாளர் (இ.
1941 )
1882 – சுப்பிரமணிய பாரதி, தமிழகக்
கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1921 )
1882 – மாக்ஸ் போர்ன் , நோபல் பரிசு
பெற்ற செருமானிய
இயற்பியலாளர் (இ. 1970 )
1890 – மார்க் டோபே , அமெரிக்க-சுவிசு
ஓவியர் (இ. 1976 )
1911 – நகிப் மஹ்ஃபூஸ் , நோபல் பரிசு
பெற்ற எகிப்திய எழுத்தாளர் (இ.
2006 )
1918 – அலெக்சாண்டர்
சோல்செனிட்சின் , நோபல் பரிசு பெற்ற
உருசிய எழுத்தாளர் (இ. 2008 )
1922 – திலிப் குமார் , பாக்கித்தானிய-
இந்திய நடிகர்
1931 – ஓஷோ , இந்திய
மெய்யியலாளர் (இ. 1990)
1935 – பிரணப் முகர்ஜி , 13வது இந்தியக்
குடியரசுத் தலைவர்
1943 – ஜான் கெர்ரி ,
அமெரிக்க அரசியல்வாதி
1951 – பீட்டர் டி. டேனியல்ஸ் ,
மொழியியல் அறிஞர்
1954 – பிரசந்தா , நேபாளப் பிரதமர்
1958 – ரகுவரன், தமிழக நடிகர் (இ. 2008)
1966 – பெனடிக்டா
பொக்கொலி ,
இத்தாலிய நாடக, திரைப்பட நடிகர்
1969 – விசுவநாதன் ஆனந்த், இந்திய
சதுரங்க வீரர்
1969 – மாக்ஸ் மார்டினி,
அமெரிக்க நடிகர், இயக்குநர்
1980 – ஆர்யா , தமிழ்த் திரைப்பட நடிகர்
1987 – பீட்டர் ஷோல்ஸ் , செருமனியக்
கணிதவியலாளர்
1996 – ஹைலி ஸ்டெயின்பீல்ட்,
அமெரிக்க நடிகை
இறப்புகள்
384 – முதலாம் தாமசுஸ் (திருத்தந்தை)
(பி. 305 )
1241 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர்
(பி. 1186 )
1937 – ஜான் ஆன்வெல்ட் ,
எசுத்தோனிய அரசியல்வாதி (பி. 1884 )
1977 – ஹன்டி பேரின்பநாயகம் ,
இலங்கைத் தமிழ்க் கல்விமான், சமூக
சேவையாளர், அரசியல்வாதி (பி. 1899 )
2002 – நானி பல்கிவாலா, இந்திய
அரசியல்சட்ட நிபுணர், பொருளியல்
அறிஞர் (பி. 1920 )
2004 – எம். எஸ். சுப்புலட்சுமி , கருநாடக
இசைப் பாடகி (பி. 1916)
சிறப்பு நாள்
குடியரசு நாள் ( புர்க்கினா பாசோ, 1958)
சர்வதேச மலைகள் நாள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக