டிசம்பர் 23 ( December 23 )
கிரிகோரியன்
ஆண்டின் 357 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 358 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் எட்டு நாட்கள்
உள்ளன
நிகழ்வுகள்
1783 - ஜோர்ஜ் வாஷிங்டன்
இராணுவத்தளபதி பதவியில் இருந்து
விலகினார்.
1914 - முதலாம் உலகப் போர்:
அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப்
படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
1916 - முதலாம் உலகப் போர்: எகிப்தின்
சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள்
துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற
சமரில் வெற்றி பெற்றனர்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஜப்பானிய இராணுவம் வேக் தீவைக்
கைப்பற்றியது.
1947 - முதலாவது டிரான்சிஸ்டர்
பெல் ஆய்வுகூடத்தில்
வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1948 - பிரதமர் டோஜோ உட்பட ஏழு
ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு
டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டது.
1954 - முதலாவது மனித சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சை
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில்
மேற்கொள்ளப்பட்டது.
1958 - டோக்கியோ கோபுரம் , உலகின்
மிகப்பெரிய இரும்பினாலான
கோபுரம், திறக்கப்பட்டது.
1972 - நிக்கராகுவா நாட்டின் தலைநகர்
மனாகுவாவில் இடம்பெற்ற
நிலநடுக்கத்தில் 10,000க்கு மேற்பட்டோர்
இறந்தனர்.
1972 - தென்னமெரிக்காவில்
ஆண்டீஸ் மலைத்தொடரில்
இடம்பெற்ற விமான விபத்தில் உயிர்
தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர்
காப்பாற்றப்பட்டனர்.
1979 - சோவியத் படையினர்
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக்
கைப்பற்றினர்.
1986 - எங்கும் தரையிறங்காமல் முதன்
முதலில் உலகைச் சுற்றி வந்த
வொயேஜர் விமானம், டிக் ரூட்டன்,
ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன்
கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
1990 - 88% சிலொவேனிய மக்கள்
யூகொஸ்லாவியாவில் இருந்து
பிரிந்து செல்வதற்கு ஆதரவாக
வாக்களித்தனர்.
2004 - தெற்குப் பெருங்கடலில்
உள்ள மக்குவாரி தீவில் 8.1 அளவு
நிலநடுக்கம் ஏற்பட்டது.
2005 - அசர்பைஜான் விமானம்
புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில்
வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர்
கொல்லப்பட்டனர்.
2005 - சாட் சூடானுடன் போரை அறிவித்தது.
பிறப்புகள்
1805 – இரண்டாம் யோசப்பு இசுமித்து ,
அமெரிக்க மதத் தலைவர் (இ. 1844 )
1807 – அந்தோனி மரிய கிளாரட் ,
ஸ்பானிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர்
(இ. 1870 )
1867 – மேடம் சி. ஜே. வாக்கர் ,
அமெரிக்கத் தொழிலதிபர் (இ.
1919 )
1902 – சரண் சிங் , 5வது இந்தியப்
பிரதமர் (இ. 1987 )
1912 – அன்னா ஜேன் ஆரிசன் ,
அமெரிக்க வேதியியலாளர் (இ. 1998 )
1933 – அக்கிகித்தோ, சப்பானியப் பேரரசர்
1938 – பாபு கான் , அமெரிக்கக்
கணினி அறிவியலாளர், பரப்புகை
கட்டுப்பாடு நெறிமுறையைக்
கண்டுபிடித்தவர்
1962 – இசுடீபன் எல், நோபல் பரிசு
பெற்ற உருமேனிய-அமெரிக்க
வேதியியலாளர்
1967 – கார்லா புரூனி, இத்தாலிய-
பிரான்சிய பாடகி
1981 – ராதிகா சிற்சபையீசன் , இலங்கை-
கனடிய அரசியல்வாதி
இறப்புகள்
1834 – தோமஸ் மால்தஸ் , ஆங்கிலேய
பொருளியலாளர் (பி. 1766 )
1907 – பியேர் ஜான்சென்,
பிரான்சிய வானியலாளர் (பி. 1824 )
1952 – சா. தர்மராசு சற்குணர் ,
தமிழகத் தமிழறிஞர் (பி. 1877 )
1959 – இர்வின் பிரபு, பிரித்தானிய
அரசியல்வாதி (பி. 1881 )
1973 – ஜெரார்டு குயூப்பர், டச்சு-
அமெரிக்க வானியலாளர், கோள்
அறிவியலாளர் (பி. 1905 )
1981 – பி. கக்கன், இந்திய விடுதலை
போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1908 )
2004 – பி. வி. நரசிம்ம ராவ் , 9வது
இந்தியப் பிரதமர் (பி. 1921 )
2010 – கே. கருணாகரன் , கேரளாவின்
7வது முதலமைச்சர் (பி. 1918 )
2013 – மிக்கைல் கலாசுனிக்கோவ் , ஏகே-47
துப்பாக்கியை வடிவமைத்த உருசியப்
பொறியாளர் (பி. 1919 )
2014 – கே. பாலச்சந்தர் , தமிழகத்
திரைப்பட இயக்குனர் (பி. 1930 )
2014 – கூத்தபிரான், தமிழக நாடகக்
கலைஞர் (பி. 1932 )
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் ( தெற்கு சூடான்,
சூடான்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக