டிசம்பர் 7 ( December 7 )
கிரிகோரியன்
ஆண்டின் 341 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 43 - ரோம அரசியல்வாதி
மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ
படுகொலை செய்யப்பட்டான்.
1724 - போலந்தின் டொரூன் என்ற
இடத்தில் ஒன்பது புரட்டஸ்தாந்து
மதத்தினருக்கு மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு
கலவரம் மூண்டது.
1787 - டெலவெயர் 1வது மாநிலமாக
ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
1815 - நெப்போலியனுக்கு ஆதரவாக
இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல்
நேய் என்பவனுக்கு மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டது.
1900 - மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின்
இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற
கரும்பொருள் வெளியேற்ற விதியைக்
கண்டுபிடித்தார்.
1910 - யாழ்ப்பாணம் , மானிப்பாய்
இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம்
திறக்கப்பட்டது.
1917 - முதலாம் உலகப் போர்:
ஆஸ்திரியா- ஹங்கேரி மீது ஐக்கிய
அமெரிக்கா போரை அறிவித்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்:
பின்லாந்து , ஹங்கேரி, போலந்து ,
ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா
போரை அறிவித்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்:
ஜப்பானியர் ஹவாயின் பேர்ள்
துறைமுகத்தைத் தாக்கினர்.
1946 - ஜோர்ஜியாவின்
அட்லாண்டாவில் உணவுச்சாலை
ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர்
கொல்லப்பட்டனர்.
1949 - சீனக் குடியரசின் அரசு
நான்கிங் நகரில் இருந்து
தாய்வானுக்கு மாறியது.
1966 - துருக்கியில் இராணுவ
முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில்
68 பேர் கொல்லப்பட்டனர்.
1971 - பாகிஸ்தானில் நூருல் அமீன்
பிரதமராகவும் சுல்பிக்கார் அலி
பூட்டோவை உதவிப் பிரதமராகவும்
கொண்ட கூட்டணி அரசை அதிபர்
யாகியா கான் அறிவித்தார்.
1972 - அப்போலோ திட்டத்தின் கடைசி
விண்கலம் "அப்போலோ 17" சந்திரனை
நோக்கி ஏவப்பட்டது.
1975 - கிழக்குத் தீமோரை
இந்தோனீசியா முற்றுகையிட்டது.
1983 - ஸ்பெயின் மாட்ரிட் நகரில்
இரண்டு விமானங்கள் மோதியதில் 93
பேர் கொல்லப்பட்டனர்.
1987 - கலிபோர்னியாவில் பறந்து
கொண்டிருந்த விமானத்தில் பயணி
ஒருவர் தனது முன்னாள்
முதலாளியையும் விமான
ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின்
தன்னைத் தானே சுட்டுக் கொன்றான்.
இதனால் விமானம் தரையில் மோதியதில்
அதில் பயணம் செய்த அனைத்து 43
பேரும் கொல்லப்பட்டனர்.
1988 - ஆர்மீனியாவில் இடம்பெற்ற 6.9
ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர்
கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை
இழந்தனர்.
1988 - யாசர் அரபாத் இஸ்ரேலை
தனிநாடாக அங்கீகரித்தார்.
1995 - கலிலியோ விண்கலம்
விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின்
பின்னர் வியாழனை அடைந்தது.
பிறப்புகள்
903 – அல் சுஃபி, பாரசீக
வானியலாளர் (இ. 986 )
1542 – ஸ்காட்லாந்தின் முதலாம்
மேரி (இ. 1587 )
1849 – பொன்னம்பலம் குமாரசுவாமி,
இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்,
அரசியல்வாதி (இ. 1906 )
1905 – ஜெரார்டு குயூப்பர், டச்சு-
அமெரிக்க வானியலாளர் (இ. 1973 )
1926 – கே. ஏ. மதியழகன் , தமிழக
அரசியல்வாதி (இ. 1983 )
1928 – நோம் சோம்சுக்கி , அமெரிக்க
மொழியியலாளர்
1929 – ந. பாலேஸ்வரி , ஈழத்துப்
புதின எழுத்தாளர் (இ. 2014 )
இறப்புகள்
கிமு 43 – சிசெரோ , உரோமை
மெய்யியலாளர், அரசியல்வாதி (பி.
கிமு 106)
283 – யுட்டீக்கியன் (திருத்தந்தை)
1782 – ஐதர் அலி , மைசூர் மன்னர் (பி.
1720 )
1985 – றொபேட் கிறேவ்ஸ்,
ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (பி.
1895 )
2006 – பத்மநாதன் இராமநாதன்,
இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி (பி.
1932 )
2009 – வை. அநவரத விநாயகமூர்த்தி,
ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி.
1923 )
2010 – பான் இயூ தெங் , மலேசிய
மனித உரிமை போராட்டவாதி (பி.
1942 )
சிறப்பு நாள்
கொடி நாள் (இந்தியா)
மரியாவின் அமல உற்பவம் விழா
பேர்ள் துறைமுக நினைவு நாள்
(ஐக்கிய அமெரிக்கா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக