புதன், 7 டிசம்பர், 2016

டிசம்பர் 8 ( December 8)

டிசம்பர் 8 ( December 8)

கிரிகோரியன்
ஆண்டின் 342 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 343 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 23 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1609 - இத்தாலியின் மிலான் நகரில்
அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது.
இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது
பொது நூலகம் ஆகும்.
1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன்
தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
1881 - ஆஸ்திரியாவில்
வியென்னா நகரில் றிங் தியேட்டரில்
இடம்பெற்ற தீயினால் 620 பேர்
கொல்லப்பட்டனர்.
1912 - அல்பேனியாவின் "கோர்சே" நகரை
ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள்
கைப்பற்றினர்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஜப்பானியர்கள்
ஹொங்கொங் ,
மலாயா ஆகியவற்றைத் தாக்கினர்.
1941 - பசிபிக் போர் : பேர்ள் துறைமுகத்தை
ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய
அமெரிக்கா ஜப்பான் மீது போரை
அறிவித்தது.
1941 - பசிபிக் போர் : சீனக் குடியரசு
ஜப்பான் மீது போரை அறிவித்தது.
1941 - பசிபிக் போர் : சீனாவில்
அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு
ஜப்பான் மற்றும் ஜெர்மனி மீது 1910
இல் இருந்து ஜப்பான் வசமிருந்த
கொரிய மக்கள் சார்பாக போரை
அறிவித்தது.
1941 - இரண்டாம் உலகப் போர் : வேக் தீவு
மீது ஜப்பான் முதற்தடவையாக போர்
தொடுத்தது.
1941 - பெரும் இன அழிப்பு :
போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக்
கொல்லுவதற்கு நாசிகள் முதன்
முதலாக நச்சு வாயுப் பேருந்தைப்
பயன்படுத்தினர்.
1942 - பெரும் இன அழிப்பு :
உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில்
நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400
ப்பெரடங்கிய கடைசித் தொகுதி
யூதர்களை பெல்செக் வதை
முகாமிற்கு அனுப்பினர்.
1949 - சீனக் குடியரசின் தலைநகர்
நான்சிங்கில் இருந்து தாய்பெய்
நகருக்கு மாற்றப்பட்டது.
1953 - அணு அமைதிக்கே என்று
அமெரிக்க அதிபர் டுவைட் டி.
ஐசனாவர் அறிவித்தார்.
1963 - மேரிலாதில் அமெரிக்க
விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர்
கொல்லப்பட்டனர்.
1966 - கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய
தரைக் கடலில் உள்ள ஆயிஜியன் கடலில்
மூழ்கியதில் 200 பேர்
கொல்லப்பட்டனர்.
1969 - கிரேக்கத்தில் விமானம் ஒன்று
வீழ்ந்ததில் 93 பேர்
கொல்லப்பட்டனர்.
1972 - சிக்காகோவில் விமானம்
விபத்துக்குள்ளாகியதில் 45 பேர்
கொல்லப்பட்டனர்.
1980 - பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த
ஜான் லெனன் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
1982 - சுரினாமில் இராணுவ
ஆட்சிக்கெதிரான பலர்
கொல்லப்பட்டனர்.
1982 - சூரினாமில் இராணுவ
ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில்
ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.
1985 - சார்க் அமைப்பு இந்தியா ,
பாகிஸ்தான், வங்காள தேசம் , இலங்கை,
நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான்
ஆகிய நாடுகளினால்
உருவாக்கப்பட்டது.
1987 - பெருவின் தலைநகர்
லீமாவுக்கருகில் சென்று
கொண்டிருந்த விமானம் கடலில்
வீழ்ந்து மூழ்கியதில் அதில்
பயணஞ்செய்த பெருவின்
உதைபந்தாட்ட அணியொன்றின்
அனைத்து வீரர்களும்
கொல்லப்பட்டனர்.
1991 - சோவியத் ஒன்றியத்தைக்
கலைப்பதென ரஷ்யா,
பெலாரஸ் , உக்ரேன் ஆகிய
நாடுகளின் தலைவர்கள் கூடி
முடிவெடுத்தனர்.
1998 - அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக்
குழுவொன்றினால்
படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புகள்
கிமு 65 – ஓராசு , உரோமைப் போர்வீரர்,
கவிஞர் (இ. கிமு 8 )
1542 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி
(இ. 1587 )
1883 – ஆத்மானந்தர் , வேதாந்தி, யோகி
(இ. 1959 )
1943 – ஜிம் மோரிசன் , அமெரிக்கப்
பாடகர், கவிஞர் (இ. 1971 )
1946 – ஷர்மிளா தாகூர், இந்தியத்
திரைப்பட நடிகை
1950 – செ. பெருமாள், தமிழக
அரசியல்வாதி (இ. 2013 )
1959 – ஜிம் யோங் கிம், கொரிய
அமெரிக்க மருத்துவர்
1960 – லிம் குவான் எங் , மலேசிய
அரசியல்வாதி
1966 – டைலர் மானே , கனடிய நடிகர்
1976 – நிருபமா வைத்தியநாதன் , இந்திய
டென்னிசு வீராங்கனை
1978 – இயன் சோமர்ஹால்டர்,
அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1818 – யோகான் கோட்லீப் கான் , சுவீடன்
வேதியியலாளர் (பி. 1745 )
1864 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக்
கணிதவியலாளர் (பி. 1815 )
1978 – கோல்டா மேயர் , இசுரேலின் 4வது
பிரதமர் (பி. 1898)
1980 – ஜான் லெனன் ,
ஆங்கிலேயப் பாடகர் (பி. 1940 )
1995 – எஸ். அகஸ்தியர் , ஈழத்து
எழுத்தாளர் (பி. 1926 )
2002 – கு. இராமலிங்கம் , தமிழகக்
கவிஞர், எழுத்தாளர் (பி. 1922 )
2014 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி ,
தென்னிந்திய கருநாடக இசைப்
பாடகர், (பி. 1927)
2014 – மாங்கோ, இத்தாலிய பாடகர்,
இசைக் கலைஞர் (பி. 1954 )
சிறப்பு நாள்
மரியாவின் அமல உற்பவம் விழா
அன்னையர் நாள் ( பனாமா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக