டிசம்பர் 10 ( December 10 )
கிரிகோரியன்
ஆண்டின் 344 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 345 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 21 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1041 - பைசண்டைன் பேரரசி சோயி தனது
வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற
பெயரில் பேரரசனாக்கினாள்.
1541 - இங்கிலாந்தின் எட்டாம்
ஹென்றியின் மனைவியும் அரசியுமான
கத்தரீனுடன் தகாத உறவு
வைத்திருந்தமைக்காக தொமஸ்
கல்பெப்பர்ம் பிரான்சிஸ்
டெரெகம் ஆகியோர்
தூக்கிலிடப்பட்டனர்.
1655 - யாழ்ப்பாண ஆளுநர்
"அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில்
இருந்து கொழும்பு செல்லும்
வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில்
சிறை பிடிக்கப்பட்டார்.
1684 - ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு
விதிகளின் கொள்கைகளில் எழுதிய
கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல்
சபையில் படிக்கப்பட்டது.
1807 - சென்னையில் நிலநடுக்கம்
எற்பட்டது.
1817 - மிசிசிப்பி ஐக்கிய
அமெரிக்காவின் 20வது
மாநிலமாக இணைந்தது.
1868 - உலகின் முதலாவது சமிக்கை
விளக்குகள் லண்டனில்
நாடாளுமன்றுக்கு வெளியே
நிறுவப்பட்டது.
1898 - ஸ்பெயின்-அமெரிக்கா
போர் நிறுத்த உடன்பாடு பாரிசில்
கைச்சாத்திடப்பட்டது.
1901 - முதலாவது நோபல் பரிசுகள்
வழங்கப்பட்டன.
1902 - அஸ்வான் அணை திறக்கப்பட்டது.
1902 - தாஸ்மேனியாவில்
பெண்களுக்கு வாக்குரிமை
வழக்கப்பட்டது.
1906 - அமெரிக்க அதிபர்
தியொடோர் ரோசவெல்ட்
அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
இது ஒரு அமெரிக்கர் பெற்ற
முதலாவது நோபல் பரிசாகும்.
1936 - இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட்
மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
மலாயாவுக்குக் கிட்டவாக ஐக்கிய
இராச்சியத்தின் இரண்டு கடற்படைக்
கப்பல்கள் ஜப்பானியர்களால்
மூழ்கடிக்கப்பட்டது.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஜப்பானியப் படைகள் பிலிப்பீன்சை
அடைந்தனர்.
1948 - மனித உரிமைகள் குறித்த
அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா
பொதுச் சபை அறிவித்தது. இந்நாள்
உலக மனித உரிமைகள் நாள் ஆக
அறிவிக்கப்பட்டது.
1975 - ரஷ்யரான அந்திரேய்
சாகரொவ் அமைதிக்கான நோபல்
பரிசு பெற்றார்.
1981 - தெற்காசியாவை
அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க
பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா
பொது அவை ஏற்றுக்
கொண்டது.
1984 - தென்னாபிரிக்க கருப்பின
மதகுரு டெஸ்மண்ட் டூட்டு
சமாதானத்துக்கான நோபல் பரிசு
பெற்றார்.
1989 - மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து
மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம்
பெற்றது.
2006 - ஈழப்போர் : வாகரை , மாங்கேணியில்
இலங்கைப் படையினரின் எறிகணைத்
தாக்குதலில் 17 பொதுமக்கள்
கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1815 – அடா லவ்லேஸ் , ஆங்கிலேய
கணிதவியலாளர் (இ. 1852 )
1830 – எமிலி டிக்கின்சன் ,
அமெரிக்கக் கவிஞர் (இ. 1886)
1851 – மெல்வில் தூவி ,
அமெரிக்க நூலகவியலாளர், தூவி
வகைப்படுத்தலை உருவாக்கியவர் (இ. 1931 )
1878 – ராஜாஜி , இந்திய
அரசியல்வாதி, இந்தியாவின் 45வது
ஆளுநர், எழுத்தாளர் (இ. 1972 )
1891 – நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு
பெற்ற செருமானிய-சுவீடிய
எழுத்தாளர் (இ. 1970 )
1902 – எஸ். நிஜலிங்கப்பா , இந்திய
அரசியல்வாதி (இ. 2000 )
1952 – சுஜாதா , தென்னிந்தியத்
திரைப்பட நடிகை (இ. 2011 )
1960 – கென்னத் பிரனா,
ஆங்கிலேய நடிகர், இயக்குநர்
1960 – ரதி அக்னிகோத்ரி , இந்தியத் திரைப்பட
நடிகை
1969 – ஸ்டீபன் பில்லிங்டன் , ஆங்கிலேய
நடிகர்
1983 – சேவியர் சாமுவேல், ஆத்திரேலிய
நடிகர்
இறப்புகள்
1198 – இப்னு றுஷ்து , எசுப்பானிய
வானியலாளர், இயற்பியலாளர்,
மெய்யியலாளர் (பி. 1126 )
1896 – ஆல்பிரட் நோபல் , சுவீடிய
வேதியியலாளர், டைனமைட்டு கண்டுபிடித்தவர்,
நோபல் பரிசை தோற்றுவித்தவர் (பி. 1833)
1909 – சிகப்பு மேகம் , அமெரிக்க
பழங்குடித் தலைவர் (பி. 1822 )
1960 – சிற்றம்பலம் கார்டினர் ,
இலங்கைத் தொழிலதிபர்,
தயாரிப்பாளர் (பி. 1899 )
1995 – எஸ். டீ. சௌலா , இந்திய
அமெரிக்கக் கணிதவியலாளர் (பி.
1907 )
2001 – அசோக் குமார் , இந்திய நடிகர்,
பாடகர், தயாரிப்பாளர் (பி. 1911 )
2006 – அகஸ்தோ பினோசெட், சிலியின்
30வது அரசுத்தலைவர் (பி. 1915 )
2013 – ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ
உடையார் , இந்திய அரசியல்வாதி (பி.
1946 )
சிறப்பு நாள்
மனித உரிமைகள் நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக