திங்கள், 31 அக்டோபர், 2016

நவம்பர் 1 ( November 1)

நவம்பர் 1 ( November 1)

கிரிகோரியன்
ஆண்டின் 305 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 306 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 60
நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1520 - தென் அமெரிக்காவில்
மகலன் நீரிணை மகலனால்
கண்டுபிடிக்கப்பட்டது.
1592 - கொரியக் கடற்படையினர்
பூசான் என்ற இடத்தில்
மிகப்பெரும் ஜப்பானியப்
படைகளைத் தோற்கடித்தனர்.
1604 - ஷேக்ஸ்பியரின்
ஓத்தெல்லோ நாடகம்
முதற்தடவையாக லண்டனில்
அரங்கேறியது.
1611 - ஷேக்ஸ்பியரின் த
டெம்பெஸ்ட் நாடகம்
முதற்தடவையாக லண்டனில்
அரங்கேறியது.
1755 - போர்த்துக்கல் , லிஸ்பன்
நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம்
மற்றும் ஆழிப்பேரலை காரணமாக
60,000-90,000 பேர் வரை
கொல்லப்பட்டனர்.
1805 - முதலாம் நெப்போலியன்
ஆஸ்திரியாவை
முற்றுகையிட்டான்.
1814 - நெப்போலியனின்
பிரான்ஸ் தோல்வியடைந்ததைத்
தொடர்ந்து ஐரோப்பாவின்
எல்லைகளை மீளவரையும்
பொருட்டு வியென்னா
காங்கிரஸ் கூடியது.
1876 - நியூசிலாந்தின் மாகாண
சபைகள் கலைக்கப்பட்டன.
1894 - ரஷ்யாவின் மூன்றாம்
அலெக்சாண்டர் இறந்ததை
அடுத்து இரண்டாம் நிக்கலாஸ்
மன்னனானான்.
1904 - இலங்கையின் வட
மாகாணத்துக்கான தொடருந்து
சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது
அநுராதபுரம் வரை சேவையில்
ஈடுபட்டது.
1911 - இத்தாலிக்கும்
துருக்கிக்கும் இடையில்
இடம்பெற்ற போரில்
முதற்தடவையாக விமானத்தில்
இருந்து குண்டுகள் வீசப்பட்டன.
1914 - முதலாம் உலகப் போர்:
சிலியில் ஜெர்மனியக்
கடற்படையுடன் நடந்த மோதலில்
பிரித்தானியக் கடற்படையினர்
முதன் முதலில்
தோல்வியடைந்தனர்.
1918 - மேற்கு உக்ரேன்
ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசிடம்
இருந்து விடுதலை பெற்றது.
1922 - ஒட்டோமான் பேரரசின்
கடைசி சுல்தான் ஆறாம்
மெகமெட் பதவியிழந்தான்.
1928 - துருக்கிய மொழி
சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு
எழுத்துக்கள் புதிய துருக்கிய
எழுத்துக்களாக மாற்றப்பட்டன.
1948 - சீனாவின் மஞ்சூரியா
என்ற இடத்தில் சீனக் கப்பல்
வெடித்து மூழ்கியதில் 6,000 பேர்
கொல்லப்பட்டனர்.
1950 - புவேர்ட்டோ ரிக்கோ
தேசியவாதிகள் அமெரிக்கத்
தலைவர் ஹரி ட்ரூமனை கொலை
செய்ய எடுத்த முயற்சி
தோல்வியடைந்தது.
1951 - நெவாடாவில்
அணுகுண்டு வெடிப்புச்
சோதனையில் அமெரிக்கப்
படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
1954 - புதுச்சேரி பிரெஞ்சு
ஆதிக்கத்திலிருந்து விடுதலை
பெற்று இந்தியாவுடன்
இணைந்தது.
1956 - நிசாம் என அழைக்கப்பட்ட
பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற
மாநிலமாக்கப்பட்டது.
1956 - இந்தியாவில் மைசூர்,
கேரளம் , மதராஸ் ஆகிய
மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1956 - இந்தியாவில்
கன்னியாகுமரி பிரதேசம் கேரள
மாநிலத்தில் இருந்து பிரிந்து
தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய
மாவட்டமாக இணைந்தது.
1957 - அக்காலத்தில் உலகின் மிக
நீளமான தொங்கு பாலமான
மக்கினா பாலம் மிச்சிகன்
மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1970 - பிரான்சில் நடன மாளிகை
ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 144
பேர் கொல்லப்பட்டனர்.
1973 - மைசூர் மாநிலம்
கர்நாடகா என மாற்றப்பட்டது.
1981 - ஐக்கிய இராச்சியத்திடம்
இருந்து அன்டிகுவா பர்புடா
விடுதலை பெற்றது.
1993 - ஐரோப்பிய ஒன்றியம்
அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட்
ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1998 - மனித உரிமைகளுக்கான
ஐரோப்பிய நீதிமன்றம்
அமைக்கப்பட்டது.
1999 - ஓயாத அலைகள் மூன்று
இராணுவ நடவடிக்கையின்
முதலாவது கட்டம் புலிகளால்
தொடங்கப்பட்டது.
2006 - பெங்களூர் நகரின் பெயர்
பெங்களூரு என மாற்றப்பட்டது.
பிறப்புகள்
1762 – ஸ்பென்சர் பேர்சிவல்,
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ.
1812 )
1858 – உலூத்விக் சுத்ரூவ ,
உருசிய வானியலாளர் (இ. 1920 )
1871 – ஸ்டீபன் கிரேன் , அமெரிக்கக்
கவிஞர் (இ. 1900 )
1916 – மோகன் குமாரமங்கலம்
இந்திய அரசியல்வாதி (இ. 1973
1935 – எட்வர்டு செயித் , பாலத்தீன-
அமெரிக்க எழுத்தாளர்,
கல்வியாளர் (இ. 2003)
1945 – நரேந்திர தபோல்கர் ,
இந்திய எழுத்தாளர்,
செயற்பாட்டாளர் (இ. 2013 )
1970 – கப்டன் மயூரன் ,
விடுதலைப் புலிப் போராளி (இ.
1993 )
1973 – ஐசுவரியா ராய் , இந்திய
நடிகை
1974 – வி. வி. எஸ். லக்சுமண்,
இந்தியத் துடுப்பாளர்
1978 – மஞ்சு வாரியர், இந்திய
நடிகை
1986 – பென் பாக்ட்லெ , அமெரிக்க
நடிகர்
1987 – இலியானா டி குரூசு,
இந்திய நடிகை
இறப்புகள்
1700 – எசுப்பானியாவின்
இரண்டாம் சார்லசு (பி. 1661 )
1894 – உருசியாவின் மூன்றாம்
அலெக்சாந்தர் (பி. 1845 )
1955 – டேல் கார்னெகி,
அமெரிக்க எழுத்தாளர் (பி. 1888 )
1959 – தியாகராஜ பாகவதர் ,
தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்
(பி. 1910 ).
1996 – [[ஜூனியஸ் ரிச்சட்
ஜயவர்தனா]|ஜே. ஆர்.
ஜெயவர்தனா], இலங்கையின் 1வது
நிறைவேற்றதிகாரம் கொண்ட
சனாதிபதி (பி. 1906 )
2015 – ஆ. வேலுப்பிள்ளை ,
ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்
(பி. 1936 )
சிறப்பு நாள்
புனிதர் அனைவர் பெருவிழா
( கத்தோலிக்கம் )
மாசில்லா குழந்தைகள்
படுகொலை , ( இறந்தோர் நாளின்
முதல் நாள்
விடுதலை நாள் ( அன்டிகுவா
பர்புடா , 1981)
கர்நாடக மாநில நாள்
( கருநாடகம்

அக்டோபர் 31 ( October 31)

அக்டோபர் 31 ( October 31)

கிரிகோரியன்
ஆண்டின் 304 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 61 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
475 – ரோமுலசு ஆகுஸ்டலசு ரோமப்
பேரராசன் ஆனான்.
1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் :
மார்ட்டின் லூதர் தனது 95
கொள்கைகளை ஜெர்மனியின்
விட்டன்பேர்க் தேவாலய வாசலில்
வெளியிட்டார்.
1803 - கப்டன் ட்றைட்பேர்க் தலைமையில்
ஆங்கிலேயப் படைகள்
பண்டாரவன்னியனின் படைகளைத்
தாக்கினர். பலர்
கொல்லப்ப்பட்டனர் [1]
1863 - நியூசிலாந்தில் நிலை
கொண்ட பிரித்தானியப் படைகள்
"வைக்காட்டொ" என்ற இடத்தில்
தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து
மவோரி போர்கள் மீண்டும் ஆரம்பமானது.
1864 – நெவாடா ஐக்கிய
அமெரிக்காவின் 36வது
மாநிலமாக இணைந்தது.
1876 - இந்தியாவின் கிழக்குக் கரையில்
இடம்பெற்ற மிகப்பெரும்
சூறாவளி காரணமாக 200,000 பேர் வரை
இறந்தனர்.
1913 - ஐக்கிய அமெரிக்காவின்
முதலாவது நெடுஞ்சாலை லிங்கன்
நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1924 – உலக சேமிப்பு நாள்
இத்தாலியின் மிலன் நகரில் சேமிப்பு
வங்கிகளின் உலக அமைப்பினால்
அறிவிக்கப்பட்டது.
1931 - தமிழின் முதல் பேசும் படம்
காளிதாஸ் வெளியானது.
1941 – இரண்டாம் உலகப் போர் :
ஐஸ்லாந்துக்கு அருகில் அமெரிக்கக்
கப்பல் ஒன்றை ஜெர்மனியின் படகு
தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக்
கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1941 – இங்கிலாந்தில்
தொழிற்சாலை ஒன்று
தீப்பற்றியதில் 49 பேர்
கொல்லப்பட்டனர்.
1954 - அல்ஜீரியாவில் பிரெஞ்சு
ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய
தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை
ஆரம்பித்தது.
1956 - ஐக்கிய இராச்சியம் மற்றும்
பிரான்ஸ் சூயஸ் கால்வா யைத் திறக்க
வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
1961 - ஸ்டாலினின் உடல்
மொஸ்கோவில் உள்ள
லெனினின் நினைவகத்தில் இருந்து
அகற்றப்பட்டது.
1963 - இண்டியானாவில் பனிக்கட்டி
சறுக்கல் களியாட்ட விழா ஒன்றின் போது
இடம்பெற்ற வெடி விபத்தில் 74
பேர் கொல்லப்பட்டு 400 பேர்
காயமடைந்தனர்.
1968 – வியட்நாம் போர்: பாரிஸ் அமைதிப்
பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத்
தொடர்ந்து வட வியட்நாம்
மீதான அனைத்துத் தாக்குதல்களையும்
நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக
அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன்
ஜோன்சன் அறிவித்தார்.
1969 - வோல் மார்ட்
தொடங்கப்பட்டது.
1973 – அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை
ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு
இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய
கடத்தப்பட்ட உலங்கு வானூர்தி ஒன்றில்
தப்பி வெளியேறினர்.
1984 - இந்தியப் பிரதமர் இந்திரா
காந்தி இரண்டு சீக்கியப்
பாதுகாவலர்களால்
சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்
பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற
கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள்
கொல்லப்பட்டனர்.
1994 - அமெரிக்க விமானம் ஒன்று
கடும் பனி காரணமாக
இண்டியானாவில்
விபத்துக்குள்ளாகியதில் 68 பேர்
கொல்லப்பட்டனர்.
1996 - விமானம் ஒன்று பிரேசிலில் வீழ்ந்து
நொருங்கியதில் அதில் பயணஞ்
செய்த அனைத்து 98 பேரும் தரையில் 2 பேரும்
கொல்லப்பட்டனர்.
1999 - எகிப்திய விமானம் ஒன்று
மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில்
பயணஞ் செய்த 217 பேரும்
கொல்லப்பட்டனர்.
2000 - சிங்கப்பூர் போயிங் 747-400
விமானம் தாய்வானில்
விபத்துக்குள்ளாகியதில் 83 பேர்
கொல்லப்பட்டனர்.
2000 - வடக்கு அங்கோலாவில் தனியார்
அண்டோனொவ் விமானம்
வெடித்துச் சிதறியதில் 50 பேர்
கொல்லப்பட்டனர்.
2003 - 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர்
மலேசியப் பிரதம மந்திரி மகதிர் பின் முகமது
தமது பதவியைத் துறந்தார்.
பிறப்புகள்
1632 - யொஹான்னெஸ்
வெர்மீர் , டச்சு ஓவியர் (இ. 1675)
1795 - ஜோன் கீற்ஸ் , ஆங்கிலேய-
இத்தாலியக் கவிஞர் (இ. 1821 )
1815 - கார்ல் வியர்ஸ்ட்ராஸ் ,
செருமானியக் கணிதவியலாளர்
(இ. 1897 )
1875 - வல்லபாய் பட்டேல் , இந்திய
அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர்
(இ. 1950 )
1887 - சங் கை செக், சீனக் குடியரசின்
1வது அரசுத்தலைவர் (இ. 1975)
1918 - இயான் ஸ்டீவன்சன் ,
அமெரிக்க உளவியலாளர் (இ. 2007 )
1922 - நொரடோம் சீயனூக் ,
கம்போடியாவின் 1வது பிரதமர் (இ. 2012 )
1930 - மைக்கேல் கொலின்ஸ்,
அமெரிக்க விண்வெளிவீரர்
1933 - துரை இராஜாராம் , தமிழக
எழுத்தாளர்
1961 - பீட்டர் ஜாக்சன், நியூசிலாந்து
நடிகர், இயக்குனர்
இறப்புகள்
1811 - பண்டார வன்னியன் , வன்னி
மன்னன்.
1926 - ஆரி உடீனி , அங்கேரிய-
அமெரிக்க மாயவித்தைக் காரர் (பி.
1874 )
1975 - எஸ். டி. பர்மன் , இந்திய
இசையமைப்பாளர் (பி. 1906 )
1984 - இந்திரா காந்தி , இந்தியாவின்
3வது பிரதமர் (பி. 1917 ).
1990 - எம். எல். வசந்தகுமாரி,
கருநாடக இசைப்பாடகர் (பி, 1928 )
1993 - பெடெரிக்கோ
ஃபெலினி , இத்தாலிய இயக்குனர் (பி.
1920 )
2003 - செம்மாங்குடி சிறிநிவாச
ஐயர் , இந்திய கர்நாடக இசைப் பாடகர்,
(பி. 1908 ).
2005 - அம்ரிதா பிரீதம் , பஞ்சாபி
எழுத்தாளர் (பி. 1919 )
2005 - பி. லீலா , பின்னணிப் பாடகி (பி.
1934 )
சிறப்பு நாள்
ஆலோவீன்
தேசிய ஒற்றுமை நாள் ( இந்தியா )
உலக சேமிப்பு நாள்.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

அக்டோபர் 30 ( October 30)

அக்டோபர் 30 ( October 30)

கிரிகோரியன்
ஆண்டின் 303 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1485 - ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின்
மன்னனாக முடிசூடினான்.
1502 - வாஸ்கோ ட காமா
இரண்டாவது தடவையாக கோழிக்கோடு
வந்தார்.
1831 - ஐக்கிய அமெரிக்காவில்
அடிமை கிளர்ச்சி செய்த நாட் டர்னர்
வேர்ஜீனியாவில் கைது
செய்யப்பட்டான்.
1905 - ரஷ்ய மன்னன் இரண்டாம்
நிக்கலாஸ் ரஷ்யாவின் முதலாவது
அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை
நிறுவினான்.
1918 - ஒட்டோமான் பேரரசு கூட்டுப்
படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில்
மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர்
முடிவுக்கு வந்தது.
1920 - அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி
சிட்னியில் அமைக்கப்பட்டது.
1922 - முசோலினி இத்தாலியின் பிரதமர்
ஆனார்.
1925 - ஜோன் லோகி பயர்ட்
பிரித்தானியாவின் முதலாவது
தொலைக்காட்சி ஒளிபரப்பியை
அமைத்தார்.
1941 - மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள்
நாசிகளினால் பெல்செக்
வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
1945 - இந்தியா ஐநாவில் இணைந்தது.
1961 - சோவியத் ஒன்றியம் 50
மெகாதொன் அளவுள்ள
"சார் பொம்பா" என்ற
அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே
இந்நாள் வரை வெடிக்கப்பட்ட
மிகப்பெரிய அணுகுண்டாகும்.
1961 - ஜோசப் ஸ்டாலினின் உடல்
மாஸ்கோவின் கிரெம்லினில்
லெனின் நினைவகத்தில் இருந்து
அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
1964 - இலங்கையின் மலையகத் தமிழர்களை
நாடு கடத்த உதவிய சிறிமா-சாஸ்திரி
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
1970 - வியட்நாமில் இடம்பெற்ற
பெரும் வெள்ளம் காரணமாக
293 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர்
வீடுகளை இழந்தனர்.
1972 - சிக்காகோவில் இரண்டு பயணிகள்
தொடருந்துகள் மோதியதில் 45 பேர்
கொல்லப்பட்டனர்.
1973 - ஐரோப்பாவையும் ஆசியாவையும்
இணைக்கும் பொஸ்பரஸ் பாலம்
துருக்கியின் இஸ்தான்புல் நகரில்
அமைக்கப்பட்டது.
1985 - சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி
வெற்றிகரமான பயணத்தை
ஆரம்பித்தது.
1991 - மத்திய கிழக்கு அமைதி மாநாடு
மாட்ரிட் நகரில் ஆரம்பமானது.
1995 - கனடாவில் இருந்து பிரிந்து
செல்ல கியூபெக் மாநிலத்தில்
எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு
50.6% to 49.4% என்ற கணக்கில்
தோற்கடிக்கப்பட்டது.
2001 - இலங்கைப் பிரதமர் பேசவிருந்த
தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே
வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர்
இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
2006 - ஜெனீவாவில் விடுதலைப்
புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில்
இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள்
முறிவடைந்தன.
2006 - பாகிஸ்தானின் எல்லையோரத்தில்
கார் பகுதியில் உள்ள மதரசா மீது
இராணுவம் நடத்திய தாக்குதலில் 80
தீவிரவாதிகள்
கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1735 - ஜான் ஆடம்ஸ் , ஐக்கிய
அமெரிக்காவின் இரண்டாவது
குடியரசுத் தலைவர் (இ. 1826 )
1821 - ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி , ரஷ்ய
எழுத்தாளர் (இ. 1881 )
1908 - முத்துராமலிங்கத் தேவர் , இந்திய
விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963 )
1909 - ஹோமி பாபா, இந்திய
அணிவியல் , இயற்பியல்
ஆராய்ச்சியாளர் (இ. 1966 )
1962 - கொட்னி வோல்ஷ் ,
மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட பந்து
வீச்சாளர்
1977- டிமிட்ரி மாஸ்கரேஞாஸ்,
இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்
இறப்புகள்
1910 - ஹென்றி டியூனாண்ட்,
செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர்,
நோபல் பரிசு பெற்றவர் (பி. 1828 )
1963 - முத்துராமலிங்கத் தேவர் , இந்திய
விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908 )
1973 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு,
தமிழக அரசியல்வாதி (பி. 1902 )
1975 - குஸ்டாவ் லுட்வீக் ஹேர்ட்ஸ்,
ஜேர்மனிய இயற்பியலாளர், நோபல் பரிசு
பெற்றவர் (பி. 1887)
1979 - சுபத்திரன் , இலங்கையின் முற்போக்கு
இலக்கிய கவிஞர் (பி. 1935 )
1999 - சௌமியமூர்த்தி
தொண்டமான் , இலங்கையின்
மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் (பி.
1913 ).

வியாழன், 27 அக்டோபர், 2016

அக்டோபர் 29 ( October 29)

அக்டோபர் 29 ( October 29)

கிரிகோரியன் ஆண்டின் 302 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 303
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 63 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
969 - பைசண்டைன் படைகள்
சிரியாவின் அண்டியோக் நகரைக்
கைப்பற்றின.
1422 - ஏழாம் சார்ல்ஸ் பிரான்சின்
மன்னனாக முடிசூடினான்.
1618 - ஆங்கிலேய எழுத்தாளரும்
நாடுகாண் பயணியுமான சேர்
வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின்
முதலாம் ஜேம்சிற்கு எதிராக
சூழ்ச்சி செய்ததாகக் குற்றம்
சாட்டப்பட்டு தலை
துண்டிக்கப்பட்டு
மரனதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.
1665 - போர்த்துக்கல் படையினர்
கொங்கோ பேரரசைத்
தோற்கடித்து அதன் மன்னன்
முதலாம் அண்டோனியாவைக்
கொன்றனர்.
1859 - ஸ்பெயின் மொரோக்கோ
மீது போரை அறிவித்தது.
1863 - சுவிட்சர்லாந்தில் கூடிய
16 நாடுகளின் பிரதிநிதிகள்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
அமைக்கத் தீர்மானித்தனர்.
1886 - அன்றைய பிரித்தானிய
இந்திய அரசுக்கும்,
திருவாங்கூர் மன்னருக்கும்
இடையே முல்லைப் பெரியாறு
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1901 - ஐக்கிய அமெரிக்கக்
குடியரசுத் தலைவர் வில்லியம்
மக்கின்லியைக் கொலை செய்த
குற்றத்திற்காக லியோன்
சொல்கோஸ் என்பவனுக்கு
மரணதண்டனை
நிறைவேற்றப்பட்டது.
1913 - எல் சல்வடோரில் பெரும்
வெள்ளம் காரணமாக
ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
1922 - முசோலினி
இத்தாலியின் பிரதம
மந்திரியானார்.
1923 - ஓட்டோமான் பேரரசு
முறிவடைந்ததைத் தொடர்ந்து
துருக்கி குடியரசானது.
1929 - "கருப்பு செவ்வாய்" என
அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ
யோர்க் பங்குச் சந்தை
வீழ்ச்சியடைந்தது. பெரும்
பொருளியல் வீழ்ச்சி
ஆரம்பமானது.
1948 - "சாஃப்சாஃப்" என்ற
பாலஸ்தீனக் கிராமமொன்றில்
புகுந்த இஸ்ரேலியர்கள் 70
பாலஸ்தீனர்களைச் சுட்டுக்
கொன்றனர்.
1950 - அமரர் கல்கியின்
பொன்னியின் செல்வன் தொடர்
வரலாற்றுப் புதினம் முதற்
தடவையாக கல்கி இதழில்
வெளிவர ஆரம்பித்தது.
1956 - இஸ்ரேலியப் படைகள்
சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி
எகிப்தியப் படைகளை சூயஸ்
கால்வாய் நோக்கி விரட்டினர்.
1961 - ஐக்கிய அரபுக் குடியரசில்
இருந்து சிரியா
வெளியேறியது.
1964 - தங்கனிக்கா மற்றும்
சன்சிபார் இரண்டும் இணைந்து
தன்சானியாக் குடியரசு
ஆகியது.
1964 - 565 கரட் (113 கிராம்) "ஸ்டார்
ஒஃப் இந்தியா" உட்படப் பல
பெறுமதி மிக்க வைரங்கள் நியூ
யோர்க் நகரில் உள்ள அமெரிக்க
அருங்காட்சியகத்தில் இருந்து
திருடப்பட்டன.
1967 - மொண்ட்ரியால் நகரில் 50
மில்லியன் மக்கள் கண்டு களித்த
எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி
முடிவடைந்தது.
1969 - உலகின் முதலாவது ஒரு
கணினியில் இருந்து வேறொரு
கணினிக்கான தொடுப்பு
ARPANET மூலம் இணைக்கப்பட்டது.
1983 - துருக்கியில் இடம்பெற்ற
நிலநடுக்கத்தில் 1,300 பேர்
கொல்லப்பட்டனர்.
1991 - நாசாவின் கலிலியோ
விண்கலம் 951 காஸ்ராவுக்குக்
கிட்டவாகச் சென்று சிறுகோள்
ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற
முதலாவது விண்கலம் ஆனது.
1998 - டிஸ்கவரி விண்ணோடம்
STS-95 என்ற விண்கப்பலுடன்
விண்ணுக்கு ஏவப்பட்டது.
1998 - 39 பேருடன் சென்ற
துருக்கிய விமானம் ஒன்று
குர்தியத் தீவிரவாதிகளால்
கடத்தப்பட்டது.
1998 - சூறாவளி மிட்ச்
ஹொண்ட்டூராசைத் தாக்கியது.
1999 - ஒரிஸாவில் இடம்பெற்ற
பெரும் சூறாவளியினால் 10,000
பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன்
மக்கள் வீடுகளை இழந்தனர்.
2002 - வியட்நாமின் ஹோ ஷி
மின் நகரில் பல்பொருள் அங்காடி
ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60
பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2005 - டில்லியில் இடம்பெற்ற
குண்டுவெடிப்பில் 60பேர் வரை
கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1931 - வாலி , தமிழகக் கவிஞர் (இ.
2013 )
1971 - மதிவ் எய்டன் ,
அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட
வீரர்
1981 - ரீமா சென் , இந்திய
திரைப்பட நடிகை
1985 - விஜேந்தர் குமார் , இந்தியக்
குத்துச்சண்டை மெய்வல்லுனர்
இறப்புகள்
2001 - சுந்தா சுந்தரலிங்கம்,
இலங்கை வானொலி , மற்றும்
பிபிசி தமிழோசை
அறிவிப்பாளர்
2007 - லா. சா. ராமாமிர்தம், தமிழ்
எழுத்தாளர் (பி. 1916 )
சிறப்பு நாள்
துருக்கி - குடியரசு நாள் ( 1923 )

அக்டோபர் 28 ( October 28)

அக்டோபர் 28 ( October 28)

கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 302
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 64 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
97 – உரோமைப் பேரரசர் நேர்வா
தளபதி மார்க்கசு திராயானை
தனது முடிக்குரிய வாரிசாக
அறிவிக்க பிரடோரியன்
காவலர்களால்
கட்டாயப்படுத்தப்பட்டார்.
312 – மில்வியன் பாலத்தில்
இடம்பெற்ற போரில் முதலாம்
கான்ஸ்டன்டைன் உரோமைப்
பேரரசர் மாக்சென்டியசைத்
தோற்கடித்து மேற்குலகின்
தனித்த உரோமைப் பேரரசரானார்.
1420 – பெய்ஜிங்
அதிகாரபூர்வமாக மிங் அரசின்
தலைநகரானது.
1449 – முதலாம் கிறித்தியான்
டென்மார்க்கின் அரசராக
முடிசூடினார்.
1492 – கொலம்பசு புதிய
உலகத்திற்கான தனது
முதலாவது பயணத்தின்போது
கியூபாவைக் கண்டுபிடித்தார்.
1636 – மாசச்சூசெட்சு
குடியேற்றத்தில் முதலாவது
கல்லூரியை நிறுவுவதற்கான
வாக்கெடுப்பை அடுத்து
அமெரிக்காவின் ஹார்வர்டு
பல்கலைக்கழகம் என இன்று
அழைக்கப்படும் கல்லூரி
நிறுவப்பட்டது.
1707 – சப்பானில் இடம்பெற்ற
நிலநடுக்கத்தில் ஒன்சூ ,
சிகொக்கு, கியூஷூ ஆகிய
இடங்களில் 5,000 இற்கும்
அதிகமானோர் உயிரிழந்தனர்.
1775 – அமெரிக்கப் புரட்சிப்
போர் : பாஸ்டனில் இருந்து மக்கள்
வெளியேறுவதைத் தடுக்கும்
பிரித்தானியச் சட்டம்
கொண்டுவரப்பட்டது.
1834 – மேற்கு
ஆஸ்திரேலியாவின் பிஞ்சாரா
என்ற இடத்தில் பிரித்தானியக்
குடியேறிகளினால் 30 நூங்கார்
பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
1886 – நியூயார்க்
துறைமுகத்தில் விடுதலைச்
சிலையை அரசுத்தலைவர்
குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து
வைத்தார்.
1891 – சப்பானில் நோபி
சமவெளியில் இடம்பெற்ற
நிலநடுக்கத்தில் 7,000 இற்கும்
அதிகமானோர் உயிரிழ்ந்தனர்.
1918 – முதல் உலகப் போர்:
ஆத்திரியா-அங்கேரியில்
இருந்து
செக்கோசிலோவாக்கியா
விடுதலையை அறிவித்தது. 300
ஆண்டுகளுக்குப் பின்னர்
செக்கோசிலவாக்கியா
விடுதலை அடைந்தது.
1918 – புதிய போலந்து அரசு
மேற்கு கலீசியாவில்
உருவானதை அடுத்து,
போலந்து-உக்ரைனியப் போர்
ஆரம்பமானது.
1922 – பெனிட்டோ முசோலினி
தலைமையில் இத்தாலிய
பாசிஸ்டுகள் இத்தாலிய அரசைக்
கைப்பற்றினர்.
1940 – இரண்டாம் உலகப் போர் :
இத்தாலியின் காலக்கெடுவை
கிரேக்கம் ஏற்க மறுத்ததை
அடுத்து, கிரேக்க-இத்தாலியப்
போர் ஆரம்பமானது. இத்தாலி
கிரேக்கத்தை அல்பேனியா ஊடாக
ஊடுருவியது.
1942 – கனடா ஊடான அலாஸ்கா
வரையான அலாஸ்கா
நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
1956 – எல்விஸ் பிரெஸ்லி
தேசியத் தொலைக்காட்சியில்
போலியோ தடுப்பூசியை
ஏற்றிக் கொண்டார்.
1958 – 23-ம் யோவான்
திருத்தந்தையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1962 – கியூபா ஏவுகணை
நெருக்கடி முடிவுக்கு வந்தது.
சோவியத் பிரதமர் நிக்கிட்டா
குருசேவ் சோவியத்
ஏவுகணைகளை கியூபாவில்
இருந்து அகற்ற உத்தரவிட்டார்.
1990 – ஜோர்ஜியாவில்
வரலாற்றில் முதற்தடவையாக பல-
கட்சி நாடாளுமன்றத் தேர்தல்
இடம்பெற்றது.
1995 – அசர்பைஜான் தலைநகர்
பக்கூவில் சுரங்க தொடருந்துப்
பாதையில் ஏற்பட்ட தீவிபத்தில் 229
பேர் கொல்லப்பட்டனர். 265 பேர்
காயமடைந்தனர்.
2006 – தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கும் சிறிலங்கா
அரசுக்கும் இடையே 8
மாதங்களாகத் தடைப்பட்டிருந்த
அமைதிப் பேச்சுக்கள்
ஜெனீவாவில் மீண்டும்
ஆரம்பமாயின.
2006 – 1930களில் உருசியக்
கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின்
பிகீவ்னியா காட்டில் கொலை
செய்யப்பட்ட 817
உக்ரேனியர்களினது இறுதிக்
கிரியைகள் அவர்கள் கொலை
செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.
2014 – நாசாவின் சிக்னசு
ஆளில்லா விண்கலம்
வர்ஜீனியாவில் இருந்து
புறப்பட்டு சில நிமிட நேரத்தில்
வெடித்துச் சிதறியது.
பிறப்புகள்
1845 – சிக்முந்த்
வுரூபிளேவ்ஸ்கி, போலந்து
இயற்பியலாளர் (இ. 1888 )
1867 – சகோதரி நிவேதிதை ,
அயர்லாந்து-இந்திய சமூக
சேவையாளர், நூலாசிரியர் (இ.
1911 )
1892 – மணிலால் காந்தி,
மகாத்மா காந்தியின் 2வது மகன்,
சமூக செயற்பாட்டாளர் (இ. 1956 )
1897 – எடித் எட் , அ,ம்மெரிக்க
ஆடை வடிவமைப்பாளர் (இ. 1981 )
1914 – யோனாசு சால்க் ,
அமெரிக்க உயிரியலாளர்,
மருத்துவர் (இ. 1995 )
1933 – கரிஞ்சா , பிரேசில்
கால்பந்து வீரர் (இ. 1983 )
1955 – பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட்
நிறுவனர்
1955 – இந்திரா நூயி , இந்திய-
அமெரிக்கத் தொழிலதிபர்
1956 – மகுமூத் அகமதிநெச்சாத் ,
ஈரானின் 6வது அரசுத்தலைவர்
1958 – அசோக் சவான்,
மகாராட்டிராவின் 16வது
முதல்வர்
1967 – ஜூலியா ராபர்ட்ஸ் ,
அமெரிக்க நடிகை
1978 – ஹரின் பெர்னான்டோ ,
இலங்கை அரசியல்வாதி
1984 – பின் விட்டுரோக் ,
அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1627 – ஜஹாங்கீர், முகலாயப்
பேரரசர் (பி. 1569 )
1704 – ஜான் லாக், ஆங்கிலேய
மெய்யியலாளர், மருத்துவர் (பி.
1632 )
1900 – மாக்ஸ் முல்லர்,
செருமானிய மொழியியலாளர்
(பி. 1823 )
1978 – ருக்மணிதேவி, இலங்கை
நடிகை, பாடகி (பி. 1923 )
1981 – பி.ஸ்ரீ , தமிழக எழுத்தாளர்,
உரையாசிரியர், பதிப்பாசிரியர்
(பி. 1886 )
1982 – இராபெர்ட் தெ’ஸ்கோர்ட்
அட்கின்சன் , பிரித்தானிய
வானியலாளர், இயற்பியலாளர் (பி.
1898 )
1997 – மைசூர் வீ.
துரைசுவாமி ஐயங்கார் ,
கருநாடக, வீணை இசைக்கலைஞர்
(பி: 1920 )
2013 – ராஜேந்திர யாதவ் , இந்திய
எழுத்தாளர் (பி. 1929 )
2014 – மைக்கேல் சாட்டா,
சாம்பியாவின் 5வது
அரசுத்தலைவர் (பி. 1937 )
சிறப்பு நாள்
தேசிய நாள் ( செக் குடியரசு ,
சிலவாக்கியா )