திங்கள், 3 அக்டோபர், 2016

அக்டோபர் 5 ( October 5 )

அக்டோபர் 5 ( October 5 )

கிரிகோரியன் ஆண்டின்
278 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 279 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1582 - கிரெகொரியின்
நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை
அடுத்து இத்தாலி , போலந்து , போர்த்துக்கல்,
ஸ்பெயின் ஆகிய நாடுகளில்
இவ்வாண்டின் இந்நாள்
இடம்பெறவில்லை.
1780 - வேலு நாச்சியார் தலைமையில்
திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப்
படையெடுப்பு இடம்பெற்றது.
1789 - பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ்
பெண்கள் பதினாறாம் லூயி
மன்னனுக்கு எதிராக வேர்சாய்
அரண்மனை நோக்கி அணிதிரண்டு
சென்றனர்.
1793 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில்
கிறிஸ்தவம் தடைசெய்யப்பட்டது.
1795 - இலங்கையின் மன்னார்ப் பகுதியை
ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
1799 - ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட
கட்டபொம்மன் கயத்தாறு
கொண்டுவரப்பட்டு
சிறையிலடைக்கப்பட்டான்.
1864 - இந்தியாவின் கல்கத்தா
நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை
முற்றாக சேதப்படுத்தியது. 60,000 பேர்
கொல்லப்பட்டனர்.
1886 - தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை
அடுத்து தென்னாபிரிக்காவின்
ஜோகானஸ்பேர்க் நகரம் உருவாக்கப்பட்டது.
1903 - சாமுவேல் கிரிஃபித்
ஆஸ்திரேலியாவின் முதலாவது தலமை
நீதிபதியாக நிமனம் பெற்றார்.
1905 - வில்பர் ரைட் 24 மைல்களை 39
நிமிடங்களில் விமானத்தில் பறந்து
சாதனை படைத்தார்.
1910 - போர்த்துக்கலில் அரசாட்சி முடிவுக்கு
வந்து குடியரசு நாடாகியது.
1915 - முதலாம் உலகப் போர்: பல்கேரியா
போரில் இறங்கியது.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் ஜெட் விமானம்
ஒன்றை முதற் தடவையாக கனேடிய விமானப்
படையினர் பிரான்சில் சுட்டு வீழ்த்தினர்.
1944 - பிரான்சில் பெண்கள்
வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டனர்.
1948 - துருக்மெனிஸ்தான் தலைநகர்
அஷ்கபாத் நகரில் நிலநடுக்கம்
ஏற்பட்ட்டாதில் 110,000 பேர்
கொல்லப்பட்டனர்.
1962 - முதலாவது ஜேம்ஸ்
பொண்ட் திரைப்படமான
டொக்டர் நோ ஐக்கிய
இராச்சியத்தில் வெளிவந்தது.
1974 - இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு
இராணுவத்தினர் மதுபான சாலை
ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க
வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
65 பேஎர் காயமடைந்தனர்.
1978 - ஈழத்தமிழர்களின் பிரச்சனையை
ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில்
கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத்
தனிநாடாக அங்கீகரிக்குமாறு
கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா
பொதுச்சபைக் கூட்டத்தில்
உரையாற்றினார்.
1987 - விடுதலைப் புலிகளின் முக்கிய
தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின்
காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி
மரணமானார்கள்.
1991 - இந்தோனீசியாவின் இராணுவ
விமானம் ஒன்று ஜகார்த்தாவில்
விபத்துக்குள்ளாகியதில் 137 பேர்
கொல்லப்பட்டனர்.
1999 - மேற்கு லண்டனில் இடம்பெற்ற
தொடருந்து விபத்தில் 31 பேர்
கொல்லப்பட்டனர்.
2000 - சேர்பியாவில் சிலோபதான்
மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும்
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பிறப்புக்கள்
1823 - இராமலிங்க அடிகளார்
(வள்ளலார்) , இந்தியாவின்
சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)
1911 - கண்ணாம்பா, தமிழ்த் திரைப்பட
நடிகை.
1934 - சோ, பத்திரிகை ஆசிரியர், நாடக
ஆசிரியர், நடிகர்
1957 - பெர்னி மாக் ,
அமெரிக்க நடிகர் (இ. 2008 )
இறப்புகள்
1565 - லியூஜி ஃபெறாரி,
இத்தாலிய கணித ஆய்வாளர் (பி. 1522 )
1976 - லார்ஸ் ஒன்சாகர் , நோபல் பரிசு
பெற்றவர் (பி. 1903)
1996 - யாழ்வாணன், ஈழத்து
எழுத்தாளர் (பி. 1933 )
2009 - இசுரேல் கெல்ஃபாண்ட் ,
சோவியத் கணிதவியலர் (பி. 1913 )
சிறப்பு நாள்
போர்த்துக்கல் - குடியரசு நாள் ( 1910 )
அனைத்துலக ஆசிரியர் நாள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக