புதன், 19 அக்டோபர், 2016

அக்டோபர் 19 ( October 19)

அக்டோபர் 19 ( October 19)

கிரிகோரியன்
ஆண்டின் 292 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 293 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 73 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1216 - இங்கிலாந்தின் ஜோன் மன்னன்
இறக்க, அவனது ஒன்பது வயது மகன்
மூன்றாம் ஹென்றி ஆட்சிக்கு
வந்தான்.
1453 - பிரெஞ்சு போர்டோ நகரைக்
கைப்பற்றியதுடன் நூறாண்டுகள் போர் முடிவுக்கு
வந்தது.
1469 - அரகன் நாட்டு இளவரசன்
இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில்
நாட்டின் இளவரசி
இசபெல்லாவுக்கும் திருமணம்
நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516
இல் ஸ்பெயின் நாடு
ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.
1655 - சுவீடனின் காரெல்
பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின்
கிராக்கோவ் நகரைப் பிடித்தான்.
1806 - எயிட்டியின் மன்னன் முதலாம்
ஜாக் படுகொலை
செய்யப்பட்டான்.
1812 - பிரான்சின் நெப்போலியன்
பொனபார்ட் மாஸ்கோவில்
இருந்து பின்வாங்கினான்.
1813 - ஜெர்மனியின் லைப்சிக் நகரில்
நெப்போலியன் பொனபார்ட்
பெரும் தோல்வியடைந்தான். ரைன்
கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
கூட்டமைப்புப் படையினர் கனடாவில் இருந்து
வேர்மொண்ட் மாநிலத்தின்
சென் அல்பான்ஸ் நகரைத்
தாக்கினர்.
1912 - லிபியாவின் திரிப்பொலி
நகரை இத்தாலியப் படைகள் ஒட்டோமான்
பேரரசிடம் இருந்து கைப்பற்றினர்.
1921 - லிஸ்பன் நகரில் இடம்பெற்ற
புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர்
அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல
அரசியல்வாதிகள்
கொல்லப்பட்டனர்.
1935 - எதியோப்பியாவை இத்தாலி
கைப்பற்றியதை அடுத்து நாடுகளின் கூட்டணி
இத்தாலி மீது பொருளாதாரத்
தடைகளை அறிவித்தது.
1943- காச நோய்க்கான Streptomycin
என்ற தீநுண்மஎதிரி மருந்து றட்கஸ்
பல்கலைக்கழகத்தில்
பிரித்தெடுக்கப்பட்டது.
1944 - இரண்டாம் உலகப் போர் : ஐக்கிய
அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில்
தரையிறங்கின.
1950 - சீன இராணுவம் திபெத்தின்
காம்டோ நகரைக் கைப்பற்றினர்.
1954 - சோ ஓயு மலையின் உச்சி முதன்
முறையாக எட்டப்பட்டது.
1960 - ஐக்கிய அமெரிக்க நாடுகள்
கம்யூனிசக் கியூபா மீது
பொருளாதார தடைகளை விதித்தது.
1974 - நியுயே நியூசிலாந்திடமிருந்து
விடுதலைப் பெற்று சுயாட்சி
மண்டலமாகியது.
1976 - சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக
இனமாக அறிவிக்கப்பட்டது.
1983 - கிரெனாடாவில்
இடம்பெற்ற இராணுவப் புரட்சியை
அடுத்து அதன் பிரதமர் மோரிஸ்
பிஷொப் படுகொலை
செய்யப்பட்டார்.
1986 - மொசாம்பிக் அதிபர்
சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான
விபத்தொன்றில்
கொல்லப்பட்டனர்.
1991 - வட இத்தாலியில் ஏற்பட்ட 7.0
ரிக்டர் அளவான நிலநடுக்கம்
காரணமாக 2000 பேர்வரை இறந்தனர்.
2000 - பிபிசியின் யாழ்ப்பாண நிருபர்
நிமலராஜன் துணை இராணுவக்
குழுவினரால் படுகொலை
செய்யப்பட்டார்.
2001 - 400 அகதிகளை ஏற்றிச் சென்ற
இந்தோனீசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில்
கவிழ்ந்ததில் 353 பேர்
கொல்லப்பட்டனர்.
2003 - திருத்தந்தை இரண்டாம் அருள்
சின்னப்பர் அன்னை தெரேசாவை
முத்திப்பேறு பெற்றவராக
அறிவித்தார்.
2005 - மானிடத்துக்கு எதிரான
குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு
எதிரான வழக்குத் தொடங்கியது.
2009 - தமிழ்நாதம், புதினம் ஆகிய
ஈழச்சார்பு இணையத்தளங்கள்
நிறுத்தப்பட்டன.
பிறப்புகள்
1862 – லூமியேர சகோதரர்கள் , பிரான்சிய
இயக்குநர் (இ. 1954 )
1888 – நாமக்கல் கவிஞர்
இராமலிங்கம் பிள்ளை (இ. 1972 )
1895 – லூயிசு மம்ஃபோர்டு , அமெரிக்க
வரலாற்றாளர், மெய்யியலாளர்
(இ. 1990 )
1910 – சுப்பிரமணியன் சந்திரசேகர் , நோபல்
பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க
இயற்பியலாளர் (இ. 1995 )
1913 – வினிசியசு டி மோரேசு , பிரேசில் கவிஞர்
(இ. 1980 )
1931 – ஜான் லே காரே , ஆங்கிலேய
எழுத்தாளர்
1945 – ஆங்கசு டீட்டன் , நோபல் பரிசு
பெற்ற இசுக்கொட்டிய-
அமெரிக்க பொருளியலாளர்
1946 – ரா. தாமரைக்கனி , தமிழக
அரசியல்வாதி (இ. 2005 )
1961 – சன்னி தியோல் , இந்திய நடிகர்
1976 – கோ சன், தென்
கொரிய விண்வெளி வீரர்
இறப்புகள்
1745 – ஜோனதன் ஸ்விப்ட் , அயர்லாந்து
எழுத்தாளர் (பி. 1667 )
1936 – லு ஹ்சுன் , சீன எழுத்தாளர் (பி.
1881 )
1937 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு
பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய
வேதியியலாளர் (பி. 1871 )
1950 – எட்னா செயிண்ட்.
வின்சென்ட் மில்லாய்,
அமெரிக்கக் கவிஞர் (பி. 1892 )
2000 – நிமலராஜன், யாழ்ப்பாண
ஊடகவியலாளர்
2001 – தர்மா குமார் , இந்திய
பொருளியல் வரலாற்றாசிரியர்,
நூலாசிரியர் (பி. 1928)
2006 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத்
திரைப்பட நடிகை (பி 1953 )
2011 – காக்கநாடன் , இந்திய
எழுத்தாளர் (பி. 1935 )
சிறப்பு நாள்
அன்னை தெரேசா நாள்
(அல்பேனியா)
நியுயே : அரசியலமைப்பு நாள் (1974இல்
நியூசிலாந்திடமிருந்து விடுதலை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக