அக்டோபர் 2 ( October 2 )
கிரிகோரியன் ஆண்டின்
275 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 276 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
829 - தியோஃபிலோஸ் (813-842) தனது தந்தையை
தொடர்ந்து பைசாந்தியப் பேரரசர்
ஆனார்.
1187 - 88 ஆண்டுகள் சிலுவைப் போரின்
பின்னர் எகிப்திய சுல்தான் சலாதீன்
ஜெருசலேமைக் கைப்பற்றினான்.
1263 - நோர்வேக்கும்
ஸ்கொட்லாந்துக்கும் இடையே
லார்க்ஸ் என்ற இடத்தில் போர்
இடம்பெற்றது.
1535 - ஜாக் கார்ட்டியே
மொண்ட்றியாலைக்
கண்டுபிடித்தார்.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
ஐக்கிய அமெரிக்கப் படையினர்
வேர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத்
தாக்கினர். ஆனாலும் அவர்கள்
கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.
1870 - ரோம் மீண்டும் இத்தாலியுடன்
இணைவதற்கு ஆதரவாக மக்கள்
பெரும்பான்மையாக
வாக்களித்தனர்.
1903 - யாழ்ப்பாணத்தில் Jaffna Steam
Navigation Company என்ற நிறுவனத்துக்குச்
சொந்தமான "SS Jaffna" என்ற
பயணிகள் கப்பல் தனது
வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
1935 - இத்தாலி அபிசீனியாவைக்
கைப்பற்றியது.
1941 - இரண்டாம் உலகப் போர் : நாசி
ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு
எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை
ஆரம்பித்தனர்.
1946 - பல்கேரியா கம்யூனிஸ்டுகளின்
வசமாகியது.
1958 - கினி பிரான்சிடம் இருந்து விடுதலையை
அறிவித்தது.
1968 - மெக்சிகோவில் இடம்பெற்ற
மாணவர்களின் அமைதிப் போராட்டத்தின்
முடிவில் நூற்றக்கணக்கானோர்
கொல்லப்பட்டனர்.
1990 - சீனாவின் போயிங் விமானம்
கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ
விமானநிலையத்தில் தரையிறங்கும் போது
தரையில் நின்ற இரு விமானங்களுடன்
மோதியதில் 132 பேர்
கொல்லப்பட்டனர்.
1992 - பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம்
ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக்
கொல்லபட்டனர்.
1996 - பெருவில் விமானம் ஒன்று
பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் 70 பேர்
கொல்லப்பட்டனர்.
2005 - நியூயோர்க்கில் படகு ஒன்று
கவிழ்ந்ததில் 22 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - பென்சில்வேனியாவில்
பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள்
கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1452 – இங்கிலாந்தின் மூன்றாம்
ரிச்சர்டு (இ. 1485)
1538 – சார்லஸ்
பொரோமெயோ, இத்தாலியப்
புனிதர் (இ. 1584)
1800 – நாட் டர்னர், அமெரிக்க
அடிமை, கிளர்ச்சித் தலைவர் (இ. 1831)
1866 – சுவாமி அபேதானந்தர் , சுவாமி
இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1939 )
1869 – மோகன்தாசு கரம்சந்த் காந்தி,
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1948)
1904 – கிரஃகாம் கிரீன் , ஆங்கிலேய
எழுத்தாளர் (இ. 1991 )
1904 – லால் பகதூர் சாஸ்திரி,
இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1966 )
1904 – அ. சிவசுந்தரம் , இலங்கைத் தமிழ்
அரசியல்வாதி
1908 – டி. வி. இராமசுப்பையர் , தமிழகப்
பத்திரிகையாளர் (இ. 1984 )
1913 – எல். கே. பி. லகுமையா ,
காந்தியவாதி (இ. 2013 )
1916 – ப. நீலகண்டன் , தமிழ்த் திரைப்பட
இயக்குனர் (இ. 1992 )
1925 – ஆன் றணசிங்க, ஆங்கிலேய யூதப்
பெண் எழுத்தாளர்
1933 – சான் பி. குர்தோன் , நோபல் பரிசு
பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர்
1945 – மார்ட்டின் எல்மேன் ,
அமெரிக்க குறியாக்கவியலாளர்
1965 – டொம் மூடி , ஆத்திரேலியத்
துடுப்பாளர்
இறப்புகள்
1588 – பெர்னாடினோ
தெலெசியோ , இத்தாலிய
மெய்யியலாளர், இயற்கை
அறிவியலாளர் (பி. 1509 )
1906 – ராஜா ரவி வர்மா, இந்திய
ஓவியர் (பி. 1848 )
1927 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு
பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி.
1859 )
1975 – காமராசர், தமிழகத்தின்
முன்னாள் முதலமைச்சர் (பி. 1903 )
1980 – ஜோன் கொத்தலாவலை,
இலங்கைப் படைத்துறை அதிகாரி,
அரசியல்வாதி (பி. 1895 )
2014 – பொள்ளாச்சி நா.
மகாலிங்கம் , தமிழகத்
தொழிலதிபர், மக்கள் சேவையாளர்
(பி. 1923 )
சிறப்பு நாள்
காந்தி ஜெயந்தி (இந்தியா)
அனைத்துலக வன்முறையற்ற நாள்
விடுதலை நாள் ( கினி, 1958)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக