சனி, 22 அக்டோபர், 2016

அக்டோபர் 23 ( October 23)

அக்டோபர் 23 ( October 23)

கிரிகோரியன்
ஆண்டின் 296 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 297 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 69 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 4004 - அங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ்
உச்சரின் கணிப்பின் படி அகிலம்
படைக்கப்பட்டது.
கிமு 42 - மார்க் அந்தோனி , ஆகுஸ்டஸ்
ரோமப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை
தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டஸ்
தற்கொலை செய்து
கொண்டான்.
425 - மூன்றாம் வலன்டீனியன்
ஆறாவது அகவையில் ரோமப் பேரரசன்
ஆனான்.
1157 - டென்மார்க்கில்
உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன்
மூன்றாம் சுவெயின்
கொல்லப்பட்டு முதலாம்
வால்டிமார் அரசனானான்.
1707 - பெரிய பிரித்தானியாவின்
முதல் நாடாளுமன்றம் கூடியது.
1739 - பிரித்தானியப் பிரதமர்
ரொபேர்ட் வால்போல்
ஸ்பெயின் மீது போரை அறிவித்தார்.
1870 - பிரான்சின் மெட்ஸ் என்ற
இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில்
பிரஷ்யா வெற்றியடைந்தது.
1906 - அல்பேர்ட்டோ சாண்டோஸ்-
டூமொண்ட் பாரிஸ் நகரில்
ஐரோப்பாவின் முதலாவது காற்றை விடப்
பாரமான வானூர்தியைப் பறக்க
விட்டார்.
1911 - முதற்தடவையாக வானூர்தி ஒன்று
போரில் பாவிக்கப்பட்டது: இத்தாலிய
வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு
துருக்கிய இராணுவ நிலைகளை
அவதானித்தான்.
1912 - முதலாம் பால்க்கன் போர்:
சேர்பியாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும்
இடையில் போர் ஆரம்பமானது.
1915 - நியூயோர்க் நகரில் 25,000-33,000
பெண்கள் வாக்குரிமை கோரி
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு
அழைப்பு விடுத்தார்.
1941 - உக்ரேனின் ஒடேசா நகரில் 19,000
யூதர்கள் , ருமேனிய இராணுவ அதிகாரி
நிக்கலாய் டெலியானு தலைமையில்
ருமேனியா மற்றும் ஜெர்மன்
படையினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
அடுத்த நாள் மேலும் 10,000 பேர்
கொல்லப்பட்டனர்.
1942 - ஐக்கிய அமெரிக்க
வான்படையின் தாக்குதலுக்கு
அமெரிக்கப் பயணிகள் விமானம்
ஒன்று இலக்கானதில் அதில் பயணம்
செய்த அனைத்துப் 12 பேரும்
கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் ரால்ஃப் ரைஞ்சர்என்ற
பிரபலமான இசை மேதையும் அடங்குவார்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில்
ஆரம்பமாயிற்று.
1944 - இரண்டாம் உலகப் போர் :
சோவியத்தின் செம்படைகள் ஹங்கேரியை
அடைந்தன.
1946 - ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையின் முதலாவது கூட்டத்தொடர்
நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.
1956 - ஹங்கேரியப் புரட்சி, 1956 :
ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர்
அரசுக்கு எதிராகவும் சோவியத்
ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம்
நடத்தினர். ஹங்கேரியப் புரட்சி நவம்பர்
4இல் நசுக்கப்பட்டது.
1958 - நோவா ஸ்கோசியாவில் சுரங்கம்
ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில்
174 நிலக்கரிச் சுரங்கத்
தொழிலாளர்கள் சிக்கினர்.
இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1
வரையில் மீட்கப்பட்டனர்.
1966 - ஐக்கிய நாடுகள் சபை மைய
மண்டபத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின்
இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.
1973 - சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும்
இடையில் இடம்பெற்ற யோம் கிப்பூர் போர்
ஐநாவின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு
வந்தது.
1983 - லெபனானில் பெய்ரூட்
நகரில் அமெரிக்க கடற்படைத் தளத்தில்
இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241
அமெரிக்கக் கடற்படையினர்
கொல்லப்பட்டனர். அதே நாளில்
இடம்பெற்ற மற்றொரு
தாக்குதலில் பிரெஞ்சு
இராணுவத்தினர் 58 பேர்
கொல்லப்பட்டனர்.
1989 - கம்யூனிச ஹங்கேரியன் மக்கள்
குடியரசு, ஹங்கேரியன் குடியரசு எனப்
பெயர் மாற்றப்பட்டது.
1991 - ஈழப்போர் : தமிழீழப் போரில்
அனாதைகளான பெண் பிள்ளைகளின்
மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர்
இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.
1998 - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெட்டனியாகு மற்றும் பாலஸ்தீன
தலைவர் யாசர் அரபாத்துக்கும் இடையில்
"அமைதிக்காக நிலம்" என்ற உடன்பாடு
எட்டப்பட்டது.
2001 - வட அயர்லாந்தில்
இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின்
பின்னர் ஐரிஷ் குடியரசு இராணுவம்
ஆயுதக் களைவில் ஈடுபட்டது.
2001 - அப்பிள் நிறுவனத்தின்
ஐப்பொட் வெளியிடப்பட்டது.
2001 - காஷ்மீர் விமானத் தளத்தைப்
தகர்க்கும் தீவிரவாதிகளின்
தற்கொலைப் படைமுயற்சி
முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள்
மற்றும் ஒரு ராணுவ வீரர்
கொல்லப்பட்டனர்.
2002 - மொஸ்கோவில் நாடக
அரங்கு ஒன்றில் செச்னிய
தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக்
கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
2004 - பிரேசில் VSB-30 என்ற தனது
முதலாவது விண்கப்பலை விண்ணுக்கு
ஏவியது.
2004 - வடக்கு ஜப்பானில் நிலநடுக்கம்
தாக்கியதில் 35 பேர்
கொல்லப்பட்டு 2,200 பேர்
படுகாயமடைந்தனர்.
2006 - இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய
தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட்டன.
பிறப்புகள்
1873 – வில்லியம் டி. கூலிட்ச்,
அமெரிக்க இயற்பியலாளர் (இ.
1975 )
1920 – புச்சியித்தா தெத்துசுயா ,
சப்பானிய-அமெரிக்க
அறிவியலாளர் (இ. 1998 )
1939 – க. வி. விக்னேஸ்வரன், இலங்கை
நீதிபதி, 1வது வட மாகாண முதலமைச்சர்
1940 – பெலே, பிரேசில் கால்பந்து
வீரர்
1942 – மைக்கேல் கிரைட்டன் , அமெரிக்க
இயக்குநர் (இ. 2008 )
1948 – எம். எச். எம். அஷ்ரப், இலங்கை
அரசியல்வாதி (இ. 2000 )
1954 – ஆங் லீ , தாய்வான்-
அமெரிக்க இயக்குநர்
1960 – ராண்டி பௌஷ் , அமெரிக்க
எழுத்தாளர் (இ. 2008 )
1974 – அரவிந்த் அடிகா, இந்திய
ஊடகவியலாளர், எழுத்தாளர்
1976 – ரியான் ரெனால்ட்ஸ் ,
கனடிய-அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1921 – ஜான் பாய்டு டன்லப் ,
இசுக்கொட்டிய
தொழிலதிபர் (பி. 1840 )
1986 – டபிள்யூ. எம். எஸ். தம்பு,
இலங்கைத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்,
இயக்குனர் (பி. 1902 )
2011 – ஜோன் மெக்கார்த்தி ,
அமெரிக்க கணினியியலாளர் (பி.
1927 )
2012 – சுனில் கங்கோபாத்யாயா ,
வங்காளக் கவிஞர் (பி. 1934 )
சிறப்பு நாள்
தேசிய நாள் ( அங்கேரி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக