வியாழன், 20 அக்டோபர், 2016

அக்டோபர் 21 ( October 21)

அக்டோபர் 21 ( October 21)

கிரிகோரியன் ஆண்டின் 294 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 295
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 71 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1520 - பேர்டினண்ட் மகெலன்
சிலியில் புதிய நீரிணை
ஒன்றைக் கண்டுபிடித்தார். இது
பின்னர் மகலன் நீரிணை எனப்
பெயர்பெற்றது.
1805 - டிரபல்கார் என்ற இடத்தில்
பிரித்தானியப் படைகள்,
பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக்
கூட்டுப் படைகளின் கடற்படையை
வென்றன. இவ்வெற்றி
பிரித்தானியக் கடற்படையை 20ம்
நூற்றாண்டு வரை
இப்பிராந்தியத்தின் பெரும்
கடற்படை வல்லரசாக ஆக்கியது.
1805 - ஊல்ம் என்ற இடத்தில்
ஆஸ்திரியா நெப்போலியனின்
பெரும் இராணுவத்திடம்
சரணடைந்தது. நெப்போலியன்
30,000 பேரைச் சிறைப்பிடித்தான்.
1824 - ஜோசப் ஆஸ்ப்டின்
போர்ட்லண்ட் சிமெந்துக்கான
காப்புரிமம் பெற்றார்.
1837 - அமெரிக்கப் பழங்குடித்
தலைவன் ஒசியோலா கைது
செய்யப்பட்டான்.
1854 - புளோரன்ஸ் நைட்டிங்கேல்
மற்றும் 38 தாதிகள் கிரிமியன்
போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப்
போர் : அமெரிக்கப் படைகள்
கூட்டமைப்பினரிடம்
வேர்ஜீனியாவில் தோற்றனர்.
ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய
நண்பர் "எட்வேர்ட் பேக்கர்"
கொல்லப்பட்டார்.
1876 - யாழ்ப்பாணத்தில் காலரா
நோய் வேகமாகப் பரவியது.
1879 - தொமஸ் எடிசன் தனது
முதலாவது தொழில் ரீதியான
மின்குமிழைப் பரிசோதித்தார்.
இது 13 மணி நேரம் எரிந்தது.
1892 - உலக கொலம்பியக்
கண்காட்சி சிக்காகோவில்
அதிகாரபூர்வமாகத்
திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட
வேலைகள் பூர்த்தியடையாத
காரணத்தால் இக்கண்காட்சி 1893,
மே 1 ஆம் நாளிலேயே
பொதுமக்களின் பார்வைக்குத்
திறக்கப்பட்டது.
1895 - ஜப்பானியப் படைகளின்
முற்றுகையினால் போர்மோசா
குடியரசு வீழ்ந்தது.
1944 - கிறகுஜேவாச்
படுகொலைகள் : நாசி
ஜெர்மனியப் படைகள் 7000
சேர்பியரை படுகொலைச்
செய்தனர்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
முதலாவது கமிகசே ஜப்பானிய
விமானத் தற்கொலைத் தாக்குதல்,
அவுஸ்திரேலிய கப்பல் மீது
நடத்தப்பட்டது.
1945 - பிரான்சில்
முதற்தடவையாக பெண்களுக்கு
வாக்குரிமை வழங்கப்பட்டது.
1966 - வேல்சில் அபெர்ஃபான்
என்னும் கிராமத்தில் நிலக்கரி
கழிவுகள் அடங்கிய பாறை
வீழ்ந்ததில் 116 பாடசாலைச்
சிறுவர்கள் உட்பட 144 பேர்
கொல்லப்பட்டனர்.
1969 - சோமாலியாவில்
இடம்பெற்ற இராணுவப்
புரட்சியில் சியாட் பார்
பதவியைக் கைப்பற்றினார்.
1983 - நிறைகளுக்கும்
அளவைகளுக்குமான 17வது
அனைத்துலகக் கருத்தரங்கில்,
முழுமையான வெற்றிடத்தில்,
துல்லியமாக 1/299,792,458 வினாடி
நேரத்தில் ஒளி செல்லும்
பாதையின் நீளமாக ஒரு மீட்டர்
வரையறுக்கப்பட்டது.
1987 - ஈழப்போர் : யாழ்ப்பாணம்
மருத்துவமனையில் இந்திய
இராணுவத்தினர் சுட்டதில்
மருத்துவர்கள், ஊழியர்கள்,
நோயாளிகள் உட்பட 21 பேர்
கோல்லப்பட்டனர்.
1994 - சியோல் நகரில் பாலம்
ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர்
கொல்லப்பட்டனர்.
2003 - குறுங்கோள் ஏரிசின்
படங்கள் எடுக்கப்பட்டன.
பிறப்புகள்
1772 – சாமுவேல் டெய்லர்
கோல்ரிட்ஜ், ஆங்கிலேயக் கவிஞர்,
மெய்யியலாளர் (இ. 1834 )
1790 – அல்போன்சு டி
லாமார்ட்டின் , பிரான்சியக்
கவிஞர், அரசியல்வாதி (இ. 1869 )
1833 – ஆல்பிரட் நோபல் ,
டைனமைட்டு கண்டுபிடித்த
சுவீடிய வேதியியலாளர், நோபல்
பரிசை ஆரம்பித்தவர் (இ. 1896 )
1877 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-
அமெரிக்க மருத்துவர் (இ. 1955 )
1911 – மேரி பிளேர் , அமெரிக்க
ஓவியர் (இ. 1978 )
1925 – சுர்ஜித் சிங் பர்னாலா ,
இந்திய அரசியல்வாதி
1931 – சம்மி கபூர் , இந்திய நடிகர்
(இ. 2011 )
1937 – தேங்காய் சீனிவாசன் ,
தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ
1988 )
1940 – ஜெப்ரி போய்கொட் ,
ஆங்கிலேயத் துடுப்பாளர்
1943 – தாரிக் அலி , பாக்கித்தான்
வரலாற்றாளர், நூலாசிரியர்
1944 – இழான் பியர் சோவாழ்சு ,
பிரான்சிய வேதியியல் ஆய்வாளர்
1949 – பெஞ்சமின்
நெத்தனியாகு , இசுரேலின்
9வது பிரதமர்
1958 – ஆந்தரே கெய்ம், நோபல்
பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய
இயற்பியலாளர்
1980 – கிம் கர்தாசியன் ,
அமெரிக்க நடிகை
1982 – மாட் டல்லாஸ் , அமெரிக்க
நடிகர்
இறப்புகள்
1805 – ஹோரஷியோ நெல்சன் ,
ஆங்கிலேயத் தளபதி (பி. 1758 )
1835 – முத்துசுவாமி தீட்சிதர் ,
இந்தியப் புலவர், கருநாடக இசை
மும்மூர்த்திகளுள் ஒருவர் (பி.
1775 )
1949 – புனித சியன்னா நகர
கத்ரீனம்மாளின் லாரா , கொலம்பிய
கத்தோலிக்கப் புனிதர் (பி. 1874
2010 – அய்யப்பன் , இந்தியக் கவிஞர்
(பி. 1949 )
2012 – யஷ் சோப்ரா , இந்திய
இயக்குநர் (பி. 1932)
2014 – கஃப் விட்லம் ,
ஆத்திரேலியாவின் 21வது
பிரதமர் (பி. 1916)
2015 – வெங்கட் சாமிநாதன் ,
தமிழக எழுத்தாளர்,
திறனாய்வாளர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக