அக்டோபர் 22 ( October 22)
கிரிகோரியன்
ஆண்டின் 295 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 296 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 70 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
362 - அந்தியோக்கியாவின் "அப்பலோ"
ஆலயம் தீப்பற்றி எரிந்தது.
794 - கன்மு பேரரசர் ஜப்பானிய தலைநகரை
எய்யன்கியோவுக்கு (தற்போது கியோட்டோ )
மாற்றினார்.
1383 - போர்த்துக்கல் மன்னன் முதலாம்
பேர்டினண்ட்டின் இறப்பின் பின்னர் ஆண்
வாரிசு அற்ற நிலையில் நாட்டில்
உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1633 - மிங் வம்சம் டச்சு கிழக்கிந்தியக்
கம்பனியுடன் சீனாவின் தெற்கு
பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு மெரும்
வெற்றி பெற்றது.
1692 - மந்திரம் செய்ததற்காக
ஐக்கிய அமெரிக்காவில்
வழங்கப்பட்ட கடைசி தூக்கு தண்டனை.
1707 - நான்கு பிரித்தானிய கடற்படைக்
கப்பல்கள் சிலி தீவுகளில் மூழ்கியதில்
ஆயிரக்கணக்கான மாலுமிகள்
கொல்லப்பட்டனர்.
1784 - இரசியா அலாஸ்காவின்
கோடியாக் தீவில் குடியேற்றமொன்றை
அமைத்தது.
1935ம் ஆண்டு சோவியத் புரட்சி
நாட்காட்டி ஒன்றின் ஆறு-நாள்
வாரமொன்றின் அக்டோபர்
22 பக்கம்
1797 - பதிவுச் செய்யப்பட்ட
முதலாவது பரசூட் பாய்ச்சல் அன்ட்ரே
ஜக்கியுஸ் கர்னெரின் என்பவரால்
பாரிஸ் நகருக்கு 3200 அடி மேலாக
நிகழ்த்தப்பட்டது.
1844 - பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம்
மில்லரின் படிப்பினைகளைக் பின்பற்றிய
மில்லரிய கிறிஸ்தவர்கள் இயேசுவின்
இரண்டாம் வருகையும் உலக முடிவையும்
எதிர்பார்த்திருந்தனர்.
1866 - பிரேசில், ஆர்ஜென்டீனா ,
உருகுவேக்கு எதிராக பராகுவே போரில்
ஈடுபட்டது.
1875 - ஆர்ஜென்டீனாவுக்கான
முதலாவது
தொலைத்தொடர்பு
இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
1877 - ஸ்கொட்லாந்தில்
பிளான்டையர் சுரங்க விபத்து, 207 சுரங்கத்
தொழிலாளர்கள் இறந்தனர்.
1878 - செயற்கை ஒளிக்கு கீழ்
நடைப்பெற்ற முதலாவது ரக்பி போட்டி
இங்கிலாந்தின் சால்போட் நகரில்
நடைப்பெற்றது.
1924 - பன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ்
நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் காசெல் நகரம்
மீது பிரித்தானிய விமானப்படை குண்டுவீச்சு
நடத்தியதில் 10,000 பேர்
கொல்லப்பட்டு 150,000 பேர் வீடுகளை
இழந்தனர்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் ஆச்சென் நகரம்
நட்பு நாடுகளிடம் வீழ்ந்தது. நட்பு
நாடுகளிடம் வீழ்ந்த முதலாவது
ஜெர்மன் நகாரம் இதுவாகும்.
1946 - அல்பேனியாவின் கரைக்கு
அப்பால் பிரித்தானிய போர்க் கப்பல்
கண்ணிவெடியில் சிக்கியதால் 40
பிரித்தானிய கடற்படையினர்
கொல்லப்பட்டனர்.
1949 - சோவியத் ஒன்றியம் அதன்
முதலாவது அணுகுண்டை வெடிக்கச்
செய்தது.
1953 - லாவோஸ் , பிரான்சிடம் இருந்து
விடுதலை அடைந்தது.
1956 - பாகிஸ்தான், கராச்சியில்
கான்கிரீட் கூரைப் பாகம் வீழ்ந்ததில் 48 பேர்
பலி.
1957 - வியட்நாம் போர்: ஐக்கிய
அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு.
1960 - மாலி, பிரான்சிடம் இருந்து
விடுதலை அடைந்தது.
1964 - பல்கட்சிக் குழு கனடாவின்
கொடிக்கான வடிவமைப்பை முடிவுச்
செய்தது.
1964 - சான்-போல் சார்ட்ரேக்கு
அமைதிக்கான நோபல் பரிசு
அறிவிக்காப்பட்டது, எனினும் அவர்
அதனைப் பெற்றுக் கொள்ள
மறுத்து விட்டார்.
1965 - இந்தியா- பாகிஸ்தான்
இடையான இரண்டாம் காஷ்மீர் போர்
முடிவுக்கு வந்தது.
1968 - நாசாவின் அப்பல்லோ 7
விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய
பின்னர் அட்லாண்டிக் கடலில்
பாதுகாப்பாக இறங்கியது.
1970 - துங்கு அப்துல் ரகுமான்
மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து
விலகினார்.
1987 - ஈழப்போர் : யாழ்ப்பாணம்
அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின்
உலங்குவானூர்தி தாக்கியதில் பல
பயணிகள் கொல்லப்பட்டனர்.
2001 - PSLV C-மூன்று விண்கலத்தை
இந்தியா வெற்றிகரமாக விண்ணில்
செலுத்தியது.
2007 - எல்லாளன் நடவடிக்கை :
இலங்கையின் அனுராதபுரம் இலங்கை
வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின்
கரும்புலிகள் நடத்திய தாக்குதலில்
கரும்புலிகள் 21 பேரும், இலங்கை படையினர் 14
பேரும் கொல்லப்பட்டு பல
வானூர்திகள் அழிக்கப்பட்டன.
பிறப்புகள்
1811 – பிரான்சு லிசித்து , அங்கேரிய
இசைக்கலைஞர் (இ. 1886 )
1844 – சாரா பேர்ண்ஹார்ட் ,
பிரான்சிய நடிகை (இ. 1923 )
1881 – கிளிண்டன் ஜோசப் டேவிசன், நோபல்
பரிசு பெற்ற அமெரிக்க இயற்
[பியலாளர் (இ. 1958 )
1887 – ஜான் ரீட், அமெரிக்க
ஊடகவியலாளர் (இ. 1920 )
1900 – அஷ்பகுல்லா கான் , இந்திய
விடுதலைப் போராளி (இ. 1927 )
1907 – எஸ். டீ. சௌலா , இந்திய-
அமெரிக்கக் கணிதவியலாளர் (பி.
1995 )
1919 – எச். வேங்கடராமன், தமிழறிஞர்
(இ. 1991 )
1919 – டோரிஸ் லெசிங், நோபல் பரிசு
பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (இ.
2013 )
1922 – அ. துரையரசன், இந்திய
அரசியல்வாதி (இ. 1988 )
1936 – நிவ்விலி அலெக்சாண்டர் ,
தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட
வீரர்
1938 – கா. இந்திரபாலா , இலங்கை
வரலாற்றாளர்
1946 – தீபக் சோப்ரா, இந்திய-
அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர்
1967 – கார்லோசு மென்சியா ,
ஒந்துராசு-அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1906 – பால் செசான்,
பிரான்சிய ஓவியர் (பி. 1839 )
1925 – அ. மாதவையா, தமிழக புதின
எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (பி. 1872)
1964 – கவாஜா நசிமுத்தீன்,
பாக்கித்தானின் 2வது பிரதமர் (பி. 1894 )
1975 – அர்னால்ட் ஜோசப் டாயின்பீ,
பிரித்தானிய நூலாசிரியர்,
வரலாற்றாசிரியர் (பி. 1889)
1986 – ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி ,
நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-
அமெரிக்க மருத்துவர் (பி. 1893)
1990 – லூயி அல்தூசர் , அல்சீரிய-
பிரான்சிய மெய்யியலாளர் (பி.
1918 )
2011 – சொ. கருப்பசாமி,
தமிழக அரசியல்வாதி, முன்னாள்
அமைச்சர் (பி. 1955 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக