அக்டோபர் 17 ( October 17)
கிரிகோரியன்
ஆண்டின் 290 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1091 - லண்டனில் பெரும் சூறாவளி
இடம்பெற்றது.
1346 - இங்கிலாந்தின் மூன்றாம்
எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின்
இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து
பதினோராண்டுகள் லண்டன் கோபுரத்தில்
அடைத்து வைத்தான்.
1448 - கொசோவோவில் ஹங்கேரிய
இராணுவம் ஒட்டோமான் படைகளினால்
தோற்கடிக்கப்பட்டனர்.
1604 - ஜெர்மனிய வானிலையாளர்
ஜொகான்னஸ் கெப்லர்
வானில் திடீரென மிக ஒளிர்வுள்ள
விண்மீன் ( எஸ்.என். 1604 ) தோன்றுவதைக்
கண்டார்.
1610 - பதின்மூன்றாம் லூயி பிரான்சின்
மன்னனாக முடி சூடினான்.
1660 - இங்கிலாந்தின் முதலாம்
சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை
அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1662 - இங்கிலாந்தின் இரண்டாம்
சார்ல்ஸ் டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு
பிரான்சுக்கு விற்றான்.
1800 - டச்சு குடியேற்ற நாடான
குரக்காவோ இங்கிலாந்தின்
கட்டுப்பாட்டில் வந்தது.
1805 - நெப்போலியனின் போர்கள்:
ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில்
ஆஸ்திரியப் படையினர் நெப்போலியன்
பொனபார்ட்டின் படைகளிடம்
வீழ்ந்தன.
1806 - எயிட்டியின் மன்னன் முதலாம்
ஜாக் படுகொலை
செய்யப்பட்டான்.
1907 - மார்க்கோனி அட்லாண்டிக்
நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது
கம்பியில்லாத் தொடர்பை
கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும் ,
அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.
1912 - முதலாம் பால்க்கன் போர்:
பல்கேரியா , கிரேக்கம் , சேர்பியா ஆகியன
ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.
1917 - முதலாம் உலகப் போரில்
ஜெர்மனி பிரித்தானியா மீதான
தனது முதலாவது குண்டுத்தாக்குதலை
நிகழ்த்தியது.
1933 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன் நாசி
ஜெர்மனியில் இருந்து வெளியேறி
ஐக்கிய அமெரிக்காவில்
குடியேறினார்.
1941 - இரண்டாம் உலகப் போரில் முதற்
தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக்
கப்பல் அமெரிக்கக் கப்பலைத்
தாக்கியது.
1961 - பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட
நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள்
காவல்துறையினரால் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
1965 - 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி
இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது.
மொத்தமாக 51 மில்லியன்
மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு
களித்தனர்.
1966 - நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில்
இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப்
படையினர் சிக்கி இறந்தனர்.
1979 - அன்னை தெரேசா
அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1995 - யாழ்ப்பாணத்தை விடுதலைப்
புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை
இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை
ஆரம்பித்தது.
1998 - நைஜீரியாவில் பெற்றோலியம்
குழாய் வெடித்ததில் 1200
கிராமத்தவர்கள்
கொல்லப்பட்ட்னர்.
2003 - தாய்ப்பே 101 உலகின் மிக
உயரமான வானளாவி ஆனது.
2006 - ஐக்கிய அமெரிக்காவின்
மக்கள் தொகை 300 மில்லியனை
எட்டியது.
2006 - ஈழப்போர் : புலிகளின் குரல்
வானொலி ஒலிபரப்பு நிலையம்,
இலங்கை அரசின் வான்குண்டுத்
தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
பிறப்புக்கள்
1817 – சையது அகமது கான் , இந்திய
மெய்யியலாளர் (இ. 1898)
1906 – கே. பி. ஹரன் , இந்திய-ஈழப்
பத்திரிகையாளர் (இ. 1981 )
1912 – முதலாம் ஜான் பால்
(திருத்தந்தை) (இ. 1978)
1913 – பூரணி, தமிழக எழுத்தாளர் (இ.
2013 )
1915 – ஆர்தர் மில்லர் , அமெரிக்க
எழுத்தாளர் (இ. 2005 )
1940 – சுவ்ரா முகர்ஜி , இந்திய
எழுத்தாளர், ஓவியர் (இ. 2015 )
1948 – ராபர்ட் ஜோர்டான்,
அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007 )
1959 – அமீனா குரிப் ,
மொரிசியசின் குடியரசுத் தலைவர்,
உயிரியற் பல்வகைமையாளர்
1965 – அரவிந்த டி சில்வா , இலங்கைத்
துடுப்பாளர்
1970 – அனில் கும்ப்ளே , இந்தியத்
துடுப்பாளர்
1972 – எமினெம்ரமெரிக்க
ராப் இசைக்கலைஞர்
1983 – பெலிசிட்டி ஜோன்ஸ் , ஆங்கிலேய
நடிகை
இறப்புகள்
532 – இரண்டாம் போனிஃபாஸ்
(திருத்தந்தை)
1849 – பிரடெரிக் சொப்பின் ,
போலந்து செவ்விசைக் கலைஞர் (பி. 1810 )
1887 – குசுத்தாவ் கிர்க்காஃப் ,
செருமானிய இயற்பியலாளர் (பி.
1824 )
1920 – ஜான் ரீட், அமெரிக்கப்
பத்திரிகையாளர், கவிஞர் (பி. 1887)
1981 – கண்ணதாசன் கவிஞர் (பி.
1927 )
2014 – மசாரு இமோடோ , சப்பானிய
எழுத்தாளர் (பி. 1943 )
சிறப்பு நாள்
உலக வறுமை ஒழிப்பு நாள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக