அக்டோபர் 20 ( October 20)
கிரிகோரியன்ஆண்டின் 293 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 294 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1803 - ஐக்கிய அமெரிக்கா
லூசியானாவை பிரான்சிடம் இருந்து
கொள்வனவு செய்யும்
ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது.
1827 - ஒட்டோமான், எகிப்தியப் படைகள்
பிரித்தானீய, பிரெஞ்சு , ரஷ்யக் கூட்டுப்
படைகள் நவாரினோ என்ற இடத்தில்
இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது
கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக்
கொண்டுவந்தது.
1941 - கிறகுஜேவாச்
படுகொலைகள் : சேர்பியாவின்
கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான
மக்கள் நாசி ஜேர்மனியர்களினால்
கொல்லப்பட்டனர்.
1944 - இரண்டாம் உலகப் போர் : சோவியத்
இராணுவம் யுகோசுலாவியத் தலைநகர்
பெல்கிரேட்டை ஜெர்மனியிடமிருந்து
மீட்டது.
1944 - கிளீவ்லன்ட் நகரில் இயற்கை
வாயுக் குழாய் வெடிப்பினால் 130
பெர் கொல்லப்பட்டனர்.
1955 - த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப்
பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங்
வெளியிடப்பட்டது.
1946 - புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி
ஆரம்பிக்கப்பட்டது.
1973 - சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து
வைக்கப்பட்டது.
1976 - மிசிசிப்பி ஆற்றில் பயணிகள்
கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில்
78 ப்பயணிகள் கொல்லப்பட்டனர்.
18 பேர் மட்டும் தப்பினர்.
1982 - இலங்கையில் முதன் முதலில்
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
1982 - மாஸ்கோவில் இடம்பெற்ற
பன்னாட்டு உதைப்பந்தாட்டப் போட்டி
ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில்
சிக்கி 66 பேர் இறந்தனர்.
2001 - இலங்கையில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி
தொடங்கப்பட்டது.
2004 - முதலாவது உபுண்டு லினக்ஸ்
வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
1632 – கிறிஸ்டோபர் ரென் , ஆங்கிலேய
கட்டிடக்கலைஞர் (இ. 1723 )
1822 – தோமஸ் ஹியூக்ஸ், ஆங்கிலேய
நீதிபதி (இ. 1896 )
1854 – ஆர்தர் ராம்போ , பிரான்சியக்
கவிஞர் (இ. 1891 )
1884 – டி. எஸ். சேனநாயக்கா,
இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி (இ.
1952 )
1891 – ஜேம்ஸ் சாட்விக் , நோபல் பரிசு
பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர்
(இ. 1974 )
1894 – ஆலிவ் தோமசு , அமெரிக்க நடிகை
(இ. 1920 )
1904 – புபேசு குப்தா, 1981) இந்திய
அரசியல்வாதி (இ. 1981 )
1913 – கந்தையா திருஞானசம்பந்தன் ,
ஈழத்து எழுத்தாளர் (இ. 1995 )
1917 – சே. மா. செல்லத்தம்பு,
இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1920 – வீராசாமி ரிங்காடு,
மொரிசியசு நாட்டின் ஆளுனர் (இ.
2000 )
1923 – தொ. மு. சி. ரகுநாதன்,
எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2001 )
1923 – வி. எஸ். அச்சுதானந்தன் , கேரள
முதல்வர்
1925 – ஆர்ட் புச்வால்ட் , அமெரிக்க
ஊடகவியலாளர் (இ. 2007 )
1938 – க. சின்னத்தம்பி , ஈழத்துக்
கல்வியியலாளர்
1946 – எல்ஃபிரெட் எலினெக் ,
நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய
எழுத்தாளர்
1951 – கிளாடியோ ரனெய்ரி ,
இத்தாலியக் கால்பந்து வீரர்
1954 – ந. செல்வராஜா , இலங்கை
நூலகவியலாளர், ஆய்வாளர்
1956 – டேனி பாயில் , ஆங்கிலேய
இயக்குநர்
1958 – விக்கோ மோர்டென்சென் ,
அமெரிக்க நடிகர்
1963 – நவ்ஜோத் சிங் சித்து, இந்தியத்
துடுப்பாட்டக்காரர்
1964 – கமலா ஆரிசு, அமெரிக்க
அரசியல்வாதி
1971 – ஸ்னூப் டாக் , அமெரிக்க
ராப் கலைஞர்
1978 – வீரேந்தர் சேவாக் , இந்தியத்
துடுப்பாளர்
இறப்புகள்
1570 – யாவோ டி பாரோசு, போர்த்துக்கீச
வரலாற்றாளர் (பி. 1496 )
1631 – மைக்கேல் மாயிஸ்ட்லின் ,
செருமானிய வானியலாளர் (பி.
1550 )
1936 – ஆனி சலிவன், அமெரிக்கக்
கல்வியாளர் (பி. 1866 )
1984 – கார்ல் பெர்டினான்ட் கோரி ,
நோபல் பரிசு பெற்ற செக்-
அமெரிக்க உயிரியலாளர் (பி. 1896 )
1984 – பால் டிராக் , நோபல் பரிசு
பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க
இயற்பியலாளர் (பி. 1902 )
1997 – ஜீவா ஜீவரத்தினம், ஈழத்துக்
கவிஞர், எழுத்தாளர் (பி. 1939 )
2008 – ஸ்ரீதர், தமிழ்த் திரைப்பட
இயக்குனர் (பி. 1933 )
2011 – முஅம்மர் அல் கதாஃபி , லிபியத்
தலைவர் (பி. 1942 )
2014 – ராஜம் கிருஷ்ணன் , தமிழக
எழுத்தாளர் (பி. 1925 )
சிறப்பு நாள்
புரட்சி நாள் ( குவாத்தமாலா )
உலக எலும்புப்புரை நாள்
உலகப் புள்ளியியல் நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக