வெள்ளி, 30 செப்டம்பர், 2016

அக்டோபர் 1 ( October 1 )

அக்டோபர் 1 ( October 1 )

கிரிகோரியன் ஆண்டின்
274 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 275 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 331 - மகா அலெக்சாண்டர்
பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ்
மன்னனை போரில் வென்றான்.
959 - முதலாம் எட்கார்
இங்கிலாந்தின் மன்னனாக
முடிசூடினான்.
1787 - "சுவோரொவ்" தலைமையில்
ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில்
துருக்கியரைத் தோற்கடித்தனர்.
1788 - நியூவென் ஹியூ
வியட்நாமின் மன்னராகத் தன்னை
அறிவித்தார்.
1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப்
பிடித்தது.
1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத
தொண்டமானால்
வீரபாண்டிய கட்டபொம்மன் கைது
செய்யப்பட்டான்.
1800 - ஸ்பெயின் லூசியானாவை
பிரான்சிடம் தந்தது.
1814 - நெப்போலியனின் தோல்வியை
அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல்
வரைபடத்தை வரைவதற்காக
வியென்னா காங்கிரஸ் கூடியது.
1827 - இவான் பஸ்க்கேவிச் தலைமையில்
ரஷ்ய இராணுவம் ஆர்மேனியாவின்
தலைநகர் யெரெவானைப் பிடித்தது.
1843 - நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட்
பத்திரிகை லண்டனில் வெளியிட
ஆரம்பிக்கப்பட்டது.
1854 - இந்திய அஞ்சல் துறை
ஏற்படுத்தப்பட்டது.
1869 - உலகின் முதல் தபால் அட்டை
ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.
1880 - இந்தியாவுடனான
காசுக்கட்டளை இலங்கையில்
அறிமுகப்படுத்தப்பட்டது.
1880 - முதலாவது மின் விளக்கு
தொழிற்சாலையை தொமஸ்
எடிசன் ஆரம்பித்தார்.
1887 - பிரித்தானியரினால்
பலூசிஸ்தான் கைப்பற்றப்பட்டது.
1892 - இலங்கையில் இந்திய இரண்டு
அணா நாணயம்
செல்லுபடியற்றதாக்கப்பட்டது.
பதிலாக வெள்ளி நாணயம்
அறிமுகமானது.
1895 - பிரெஞ்சுப் படைகள்
மடகஸ்காரின் அண்டனனாரிவோ நகரைக்
கைப்பற்றினர்.
1898 - ரஷ்யாவின் முக்கிய
நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம்
நிக்கலாஸ் மன்னனால்
வெளியேற்றப்பட்டனர்.
1910 - லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் கட்டடம்
பெரும் குண்டுவெடிப்பினால்
தகர்க்கப்பட்டது. இதில் 21 பேர்
கொல்லப்பட்டனர்.
1918 - முதலாம் உலகப் போர்: அரபுப்
படைகள் சிரியாவின் டமாஸ்கஸ் நகரைக்
கைப்பற்றினர்.
1931 - ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம்
திறக்கப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர் :
நேப்பில்ஸ் கூட்டுப் படைகளிடம் வீழ்ந்தது.
1949 - மா சே துங்கினால் மக்கள் சீனக்
குடியரசு அறிவிக்கப்பட்டது.
1953 - ஆந்திரா மாநிலம்
உருவாக்கப்பட்டது.
1960 - சைப்பிரஸ் , மற்றும் நைஜீரியா
ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை
பெற்றன.
1961 - கிழக்கு மற்றும் மேற்கு கமரூன்
ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு
ஆகியது.
1965 - இந்தோனேசியாவில் நிகழ்ந்த
கம்யூனிசப் புரட்சி ஜெனரல்
சுகார்ட்டோவினால் முறியடிக்கப்பட்டது.
1969 - கொன்கோர்ட் விமானம்
முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது.
1971 - வால்ட் டிஸ்னி உலகம்
புளோரிடாவில் அமைக்கப்பட்டது.
1975 - சிஷெல்ஸ் சுயாட்சியைப்
பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட்
தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற
பெயரைப் பெற்றது.
1977 - பிரேசில் கால்பந்தாட்ட வீரர்
பெலே இளைப்பாறினார்.
1978 - துவாலு ஐக்கிய
இராச்சியத்திடம் இருந்து விடுதலை
பெற்றது.
1979 - ஐக்கிய அமெரிக்கா
பனாமா கால்வாயை பனாமாவுக்கு
மீள் அளித்தது.
1982 - சொனி நிறுவனம்
முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு
சாதனத்தை (CDP-101) வெளியிட்டது.
1992 - விடுதலைப் புலிகள் கட்டைக்காடு
இராணுவக் காவலரணைத் தாக்கி
பெருந்தொகையான
ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
1994 - பலாவு ஐநாவிடம் இருந்து
விடுதலை பெற்றது.
2001 - ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத்
தகர்க்க தற்கொலைப் படையினர்
நடத்திய கார் வெடிகுண்டு
தாக்குதலில் 26 பேர்
கொல்லப்பட்டனர்.
2005 - பாலியில் நடந்த
குண்டுவெடிப்பில் 23 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - பாண்டிச்சேரி மாநிலத்தின்
பெயர் புதுச்சேரி என மாற்றம்
பெற்றது.
பிறப்புகள்
1847 – அன்னி பெசண்ட் , ஆங்கிலேய-
இந்திய செயற்பாட்டாளர் (இ. 1933 )
1896 – லியாகத் அலி கான் ,
பாக்கித்தானின் 1வது பிரதமர் (இ. 1951 )
1904 – ஏ. கே. கோபாலன் , இந்தியக்
கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1977)
1924 – ஜிம்மி கார்ட்டர் ,
அமெரிக்காவின் 39வது
அரசுத்தலைவர் , அமைதிக்கான நோபல் பரிசு
பெற்றவர்
1927 – சிவாஜி கணேசன் , தமிழ்த் திரைப்பட
நடிகர் (இ. 2001 )
1928 – சூ சுங்ச்சி , சீனாவின் 5வது
பிரதமர்
1932 – அரங்க முருகையன் , தமிழறிஞர்,
எழுத்தாளர் (இ 2009 )
1936 – கே. எஸ். சிவகுமாரன் , ஈழத்து
எழுத்தாளர், திறனாய்வாளர்
1941 – செ. யோகநாதன், ஈழத்து
எழுத்தாளர் (இ. 2008 )
1956 – தெரசா மே , ஐக்கிய
இராச்சியத்தின் பிரதமர்
1958 – ஆந்தரே கெய்ம் , உருசிய-டச்சு
இயற்பியலாளர்
இறப்புகள்
1404 – ஒன்பதாம் போனிஃபாஸ்
(திருத்தந்தை) (பி. 1356 )
1973 – பாபநாசம் சிவன் , கருநாடக,
தமிழிசை அறிஞர் (பி. 1890)
2008 – பூர்ணம் விஸ்வநாதன் , தமிழக
நாடக, திரைப்பட நடிகர்
2012 – எரிக் ஹாப்ஸ்பாம் , எகிப்திய-
ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1917)
2013 – டாம் கிளான்சி , அமெரிக்க
எழுத்தாளர் (பி. 1947 )
2014 – ராபர்ட் செரா ,
வெனிசுவேலாவின் அரசியல்வாதி
(பி. 1987 )
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் ( எல் சால்வடோர் ,
குவாத்தமாலா , இலங்கை)
விடுதலை நாள் (சைப்பிரசு) , 1960)
விடுதலை நாள் ( நைஜீரியா , 1960)
விடுதலை நாள் ( பலாவு, 1994)
விடுதலை நாள் ( துவாலு , 1978)
அனைத்துலக முதியோர் நாள்
உலக சைவ நாள்
மக்கள் சீனக் குடியரசு தேசிய நாள

வியாழன், 29 செப்டம்பர், 2016

செப்டம்பர் 30 ( September 30 )

செப்டம்பர் 30 ( September 30 )

கிரிகோரியன் ஆண்டின் 273 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 274
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 92
நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1399 - நான்காம் ஹென்றி
இங்கிலாந்தின் மன்னனாக முடி
சூடினான்.
1744 - பிரான்ஸ், மற்றும் ஸ்பெயின்
இணைந்து சார்டீனியா பேரரசை
தோற்கடித்தனர்.
1791 - மோட்ஸார்ட்டின் கடைசி ஒப்பேரா
வியென்னாவில் அரங்கேறியது.
1840 - நெப்போலியன்
பொனபார்ட்டின் எஞ்சிய உடல்
பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு
அடக்கம் செய்யப்பட்டது.
1860 – பிரித்தானியாவின் முதலாவது
அமிழ் தண்டூர்தி ( tram ) சேவை ஆரம்பமானது.
1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே
தீவின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
1882 - உலகின் முதலாவது நீர்மின்
திறன் ஐக்கிய அமெரிக்காவின்
விஸ்கொன்சின் மாநிலத்தில்
அமைக்கப்பட்டது.
1888 - கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது,
மற்றும் நான்காவது
கொலைகளைச் செய்தான்.
1895 - மடகஸ்கார் பிரெஞ்சு
பாதுகாக்கப்பட்ட அரசாக
அறிவிக்கப்பட்டது.
1901 - ஹியூபேர்ட் செசில் பூத்
தூசுறிஞ்சிக்கான காப்புரிமம்
பெற்றார்.
1935 – அரிசோனா , நெவாடா
மாநிலங்களுக்கிடையே ஊவர் அணை
திறக்கப்பட்டது.
1938 - செக்கோசிலவாக்கியாவின்
சுடெட்டென்லாந்துப் பகுதியை
ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு
வழங்குவதற்கான உடன்படிக்கையில்
பிரித்தானியா , பிரான்ஸ் , ஜேர்மனி ,
மற்றும் இத்தாலி ஆகியன அதிகாலை 2:00
மணிக்கு கையெழுத்திட்டன.
1938 – "பொதுமக்களின்
இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே
குண்டுத்தாக்குதல்" நடத்தப்படுவது
நாடுகளின் அணியினால் தடை
செய்யப்பட்டது.
1945 - இங்கிலாந்தில்
தொடருந்து விபத்தில் 43 பேர்
கொல்லப்பட்டனர்.
1947 - பாகிஸ்தான், யேமன் ஐநாவில்
இணைந்தன.
1949 - சோவியத்தினரின் தரைவழித் தடையை
அடுத்து மேற்கு ஜெர்மனிக்கு 2.3
மில்லியன் தொன் உணவுப்
பொருட்கள் வான்வெளி
மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு
வந்தது.
1965 - இந்தோனேசியாவில்
இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின்
புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ
முறியடித்து சுமார் ஒரு மில்லியன்
கம்யூனிஸ்டுகளைக் கொன்று
குவித்தார்.
1966 - "பெக்குவானாலாந்து"
பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை
அறிவித்து பொட்சுவானாக்
குடியரசு ஆகியது.
1967 - இலங்கை வானொலி ,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப்
பெயர் மாற்றப்பட்டது.
1993 - இந்தியாவின் மத்தியப்
பிரதேசத்தின் லட்டூர் மற்றும்
ஒஸ்மனாபாத் நகரங்களில்
இடம்பெற்ற நிலநடுக்கத்தில்
ஆயிரக்கணக்கானோர்
கொல்லப்பட்டனர்.
1995 - தமிழகத்தின் திருச்சி
மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.
2001 - இந்தியக் காங்கிரசின் மூத்த
தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய
அமைச்சருமான மாதவராவ் சிந்தியா
விமான விபத்தில்
கொல்லப்பட்டார்.
2003 - தமிழ் விக்கிப்பீடியா
ஆரம்பிக்கப்பட்டது.
2007 - இந்திய சதுரங்க வீரர்
விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில்
இடம்பெற்ற உலக சதுரங்கப்
போட்டிகளில் வெற்றி பெற்று புதிய
உலகச் சாம்பியன் ஆனார்.
பிறப்புகள்
1207 – ரூமி, பாரசீகக் கவிஞர் (இ. 1273 )
1550 – மைக்கேல் மாயிஸ்ட்லின் ,
செருமானிய வானியலாளர்,
கணிதவியலாளர் (இ. 1631 )
1864 – சுவாமி அகண்டானந்தர் ,
சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ.
1937 )
1870 – சான் பத்தீட்டு
பெரென் , நோபல் பரிசு பெற்ற
பிரான்சிய-அமெரிக்க
இயற்பியலாளர் (இ. 1942 )
1900 – எம். சி. சாக்ளா, இந்திய உயர்
நீதிமன்ற நீதிபதி (இ. 1981 )
1928 – எலீ வீசல், அமைதிக்கான நோபல்
பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க
எழுத்தாளர் (இ. 2016 )
1931 – எம். ஏ. எம். ராமசாமி ,
தொழிலதிபர், அரசியல்வாதி (இ.
2015 )
1941 – கமலேஷ் சர்மா,
பொதுநலவாய நாடுகளின் 5வது
பொதுச் செயலாளர்
1964 – மோனிக்கா பெலூச்சி ,
இத்தாலிய நடிகை
1980 – மார்டினா ஹிங்கிஸ் ,
சுவிட்சர்லாந்து டென்னிசு
வீராங்கனை
1986 – ஒலிவியர் ஜிரூட் , பிரான்சியக்
கால்பந்தாட்ட வீரர்
1986 – மார்ட்டின் கப்டில் , நியூசிலாந்து
துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
420 – ஜெரோம் , உரோமானியப் புனிதர்
(பி. 347 )
1897 – லிசியே நகரின் தெரேசா ,
பிரான்சியப் புனிதர் (பி. 1873)
1974 – இராய.
சொக்கலிங்கம் , தமிழறிஞர்,
கவிஞர் (பி. 1898 )
1985 – சார்லஸ் ரிக்டர், அமெரிக்க
இயற்பியலாளர் (பி. 1900 )
2004 – காமினி பொன்சேகா ,
சிங்கள நடிகர், இயக்குநர், அரசியல்வாதி
(பி. 1936 )
2008 – ஜோசுவா பெஞ்சமின்
ஜெயரத்தினம் , சிங்கப்பூர்
அரசியல்வாதி (பி. 1926 )
2010 – சந்திரபோஸ் , தமிழ்த் திரைப்பட
இசையமைப்பாளர், பாடகர், நடிகர்
2011 – ரால்ஃப் ஸ்டைன்மன், நோபல் பரிசு
பெற்ற கனடிய=அமெரிக்க
மருத்துவர் (பி. 1943 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( போட்சுவானா , 1966)
பன்னாட்டு
மொழிபெயர்ப்பு நாள்.

புதன், 28 செப்டம்பர், 2016

செப்டம்பர் 29 ( September 29)

செப்டம்பர் 29 ( September 29 )

கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 273
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93
நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 480 - தெமிஸ்டோகில்ஸ்
தலைமையிலான கிரேக்கக் கடற்படை பேர்சியப்
படையை சலாமிஸ் என்ற இடத்தில்
தோற்கடித்தது.
1227 - புனித ரோமப் பேரரசன் இரண்டாம்
பிரெடெரிக் சிலுவைப் போரில்
பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை
ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம்
செய்தார்.
1567 - பிரான்சில் இரண்டாம் சமயப்
போர் ஆரம்பமானது.
1833 - மூன்று வயதுள்ள இரண்டாம்
இசபெல்லா ஸ்பெயின்
அரசியாக முடிசூடினாள்.
1848 - ஹங்கேரியப் படையினர்
குரொவேசியர்களை
பாகொஸ்ட் என்ற இடத்தில்
இடம்பெற்ற ஹங்கேரிப் புரட்சிப் போரில்
தோற்கடித்தனர்.
1850 - இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன்
கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை
ஒன்பதாம் பயஸ் மீண்டும் அமைத்தார்.
1885 - உலகின் முதலாவது மின்சார
திராம் வண்டி இங்கிலாந்தில்
பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.
1911 - இத்தாலி ஒட்டோமான்
பேராட்சிக்கெதிராகப் போர்
தொடுத்தது.
1916 - ஜோன் ரொக்பெல்லர்
உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார்.
1918 - முதலாம் உலகப் போர்: பல்கேரியா
கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை
ஏற்படுத்தியது.
1938 - செக்கோசிலவாக்கியாவின்
சுடெட்டென்லாந்துப் பகுதியை
ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு
வழங்குவதற்கான உடன்படிக்கையில்
பிரித்தானியா , பிரான்ஸ் , ஜேர்மனி ,
மற்றும் இத்தாலி ஆகியன
கைச்சாத்திட்டன.
1941 - உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது
33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால்
கொல்லப்பட்டனர்.
1962 - கானடாவின் முதலாவது
செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.
1971 - அரபுக் கூட்டமைப்பில் ஓமான்
இணைந்து கொண்டது.
1972 - ஜப்பான் மக்கள் சீனக்
குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து,
சீனக் குடியரசுடனான உறவை முறித்துக்
கொண்டது.
1991 - எயிட்டியில் இராணுவப் புரட்சி
இடம்பெற்றது.
1993 - மகாராஷ்டிரா மாநிலத்தில்
ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர்
கொல்லப்பட்டனர்.
1998 - இலங்கை, பலாலி
விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை
நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார்
பயணிகள் விமானம் புறப்பட்டு 10
நிமிடங்களில் காணாமல் போனது.
2003 - சூறாவளி ஜுவான் கனடாவின்
ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப்
பேரழிவை விளைவித்தது.
பிறப்புகள்
1492 – மூன்றாம் சாமராச உடையார் ,
மைசூர் மன்னர் (இ. 1553 )
1547 – மிகெல் தே
செர்வாந்தேஸ், எசுப்பானியக்
கவிஞர் (இ. 1616 )
1571 – கரவாஜியோ, இத்தாலிய ஓவியர்
(இ. 1610 )
1725 – ராபர்ட் கிளைவ் , ஆங்கிலேய
அரசியல்வாதி (இ. 1774 )
1758 – ஹோரஷியோ நெல்சன்,
ஆங்கிலேயத் தளபதி (இ. 1805 )
1809 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய
இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898 )
1881 – லுட்விக் வான் மீசசு , ஆத்திரிய-
அமெரிக்க பொருளியலாளர்
(இ. 1973 )
1892 – ந. சிவராஜ் , நீதிக்கட்சித் தலைவர்
(இ. 1964]])
1901 – என்ரிக்கோ பெர்மி , நோபல் பரிசு
பெற்ற இத்தாலிய-அமெரிக்க
இயற்பியலாளர் (இ. 1954 )
1904 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி ,
சோவியத் எழுத்தாளர் (இ. 1936)
1912 – சி. சு. செல்லப்பா,
எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (இ.
1998 )
1920 – அரங்க. சீனிவாசன் , தமிழகக்
கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)
1926 – திருமெய்ஞானம்
நடராஜசுந்தரம் பிள்ளை , தமிழக
நாதசுவரக் கலைஞர் (இ. 1981 )
1928 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின்
முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இ.
2012 )
1929 – சையது அலி கிலானி, ஜம்மு
காசுமீர் அரசியல்வாதி
1936 – சில்வியோ பெர்லுஸ்கோனி,
இத்தாலியின் 50வது பிரதமர்
1940 – கரு ஜயசூரிய , இலங்கை
அரசியல்வாதி
1943 – லேக் வலேசா , போலந்தின் 2வது
அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு
பெற்றவர்
1947 – மா. சுதர்சன நாச்சியப்பன்,
தமிழக அரசியல்வாதி
1951 – மிசெல்
பாச்செலெட் , சிலியின் 34வது
அரசுத்தலைவர்
1956 – செபாஸ்டியன் கோ,
ஆங்கிலேய தட கள விளையாட்டாளர்
1961 – ஜூலியா கிலார்ட்,
ஆத்திரேலியாவின் 27வது பிரதமர்
1964 – ந. சிவராஜ் , நீதிக்கட்சித் தலைவர்
(பி. 1892]])
1970 – ரசல் பீட்டர்சு, கனடா நடிகர்
1975 – இசுட்டீவ் கிளார்க், ஆத்திரேலியத்
துடுப்பாளர்
1986 – நிதேந்திர சிங் ராவத் , இந்திய
மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்
இறப்புகள்
1910 – அ. சிவசம்புப் புலவர் , ஈழத்துப்
புலவர் (இ. 1910)
1913 – ருடோல்ப் டீசல், டீசல்
பொறியைக் கண்டுபிடித்த
பொறியியலாளர் (பி. 1858)
1961 – பி.சீனிவாசராவ் , தமிழக
அரசியல்வாதி (பி. 1906 )
1969 – சி. டபிள்யூ. டபிள்யூ.
கன்னங்கரா , இலங்கையில்
இலவசக்கல்வித் திட்டத்தை
அறிமுகப்படுத்தியவர் (பி. 1884 )
சிறப்பு நாட்கள
உலக இருதய தினம்.

திங்கள், 26 செப்டம்பர், 2016

செப்டம்பர் 28 ( September 28)

செப்டம்பர் 28 ( September 28)

கிரிகோரியன் ஆண்டின் 271 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 272
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 94 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 48 - இகிப்திய
மன்னன் தலமியின் ஆணையை
அடுத்து மாவீரன் பாம்பீ
படுகொலை செய்யப்பட்டான்.
935 - புனித வென்செஸ்லாஸ்
அவரது சகோதரனால் படுகொலை
செய்யப்பட்டார்.
1066 - முதலாம் வில்லியம்
இங்கிலாந்தை
முற்றுகையிட்டான்.
1448 - முதலாம் கிறிஸ்டியன்
டென்மார்க் மன்னனாக
முடிசூடினான்.
1687 - கிரேக்கத்தின் பழங்காலக்
கட்டிடம் பார்த்தினன்
குண்டுவெடிப்பில்
சேதமடைந்தது.
1708 - ரஷ்யாவின் முதலாம் பீட்டர்
மன்னன் சுவீடன் படைகளை
லெஸ்னயா என்ற இடத்தில்
இடம்பெற்ற போரில்
தோற்கடித்தான்.
1791 – பிரான்ஸ் ஐரோப்பாவில்
யூதர்களை அடிமைத்தளையில்
இருந்து விடிவித்த முதலாவது
நாடானது.
1795 - யாழ்ப்பாணத்தை ஜெனரல்
ஸ்டுவேர்ட் தலைமையிலான
பிரித்தானியப் படைகள்
கைப்பற்றினர்.
1867 - டொரோண்டோ
ஒண்டாரியோவின்
தலைநகரமாகியது.
1867 - ஐக்கிய அமெரிக்கா
மிட்வே தீவைக் கைப்பற்றியது.
1889 - நிறை மற்றும்
அளைவைகளுக்கான பொது
மாநாட்டில் மீட்டரின் நீளமானது
பனிக்கட்டியின் உருகுநிலையில்
10 விழுக்காடு இரிடியம் கலந்த
பிளாட்டினம் கலவையின் கோள்
ஒன்றின் இரண்டு
கோடுகளிற்கிடையேயான
நீளத்துக்கு சமனாக
அறிவிக்கப்பட்டது.
1895 - யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரியின் தற்போதைய கட்டிடம்
கட்டப்பட்டது.
1928 - அலெக்சாண்டர் பிளெமிங்
பெனிசிலினைக்
கண்டுபிடித்தார்.
1939 - நாசி ஜேர்மனியும்
சோவியத் ஒன்றியமும் போலந்து
நாட்டை தமக்குள் பங்கு போட
உடன்பட்டன.
1939 - இரண்டாம் உலகப் போர் :
போலந்தின் தலைநகர் வார்சா
ஜேர்மனியிடம் வீழ்ந்தது.
1944 - இரண்டாம் உலகப் போர் :
சோவியத் இராணுவப் படைகள்
எஸ்தோனியாவில் இருந்த
நாசிகளின் குளூகா
வதைமுகாமை விடுவித்தனர்.
1950 – இந்தோனேசியா ஐநாவில்
இணைந்தது.
1958 - பிரெஞ்சு ஐந்தாவது
குடியரசு அமைக்கப்பட்டது.
1960 – மாலி, செனெகல் ஆகிய
நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1961 - டமாஸ்கசில் இடம்பெற்ற
இராணுவப் புரட்சியின் பின்னர்
எகிப்து , சிரியா ஒன்றியமான
ஐக்கிய அரபுக் குடியரசு
முடிவுக்கு வந்தது
1993 - புலோப்பளைச் சமர் :
கிளாலிப் பாதையை மூடும்
இலக்குக் கொண்ட "யாழ்தேவி
இராணுவ நடவடிக்கை"
விடுதலைப் புலிகளால்
முறியடிக்கப்பட்டது.
1994 - பால்ட்டிக் கடலில் சுவீடன்
சென்று கொண்டிருந்த
எஸ்தோனியப் பயணிகள் கப்பல்
மூழ்கியதில் 852 பேர்
கொல்லப்பட்டனர்.
1995 - பொப் டெனார்ட் மற்றும்
சில கூலிப் படைகள் கொமரோஸ்
தீவுகளைக் கைப்பற்றினர்.
2005 - ஐரோப்பிய ஒன்றியம்
விடுதலைப் புலிகளைத் தடை
செய்தது.
பிறப்புக்கள்
கிமு 551 - கன்ஃபூசியஸ் , சீனப்
பகுத்தறிவாளர் (இ. கிமு 479)
1852 - ஹென்றி முவாசான்,
பிரெஞ்சு வேதியியல் அறிஞர்
(இ. 1907 )
1929 - லதா மங்கேஷ்கர் , இந்தியப்
பின்னணிப் பாடகி
1934 - பிரிஜிட் பார்டோ ,
பிரெஞ்சு நடிகை, பாடகி
1947 - ஷேக் ஹசீனா ,
வங்காளதேசத்தின் முன்னாள்
பிரதமர்
1982 - அபினவ் பிந்திரா , இந்திய
ஒலிம்பிக் வீரர்
1982 - எமெக்கா ஓகஃபோர்,
அமெரிக்க கூடைப்பந்து
ஆட்டக்காரர்
இறப்புகள்
1895 - லூயி பாஸ்டர் , பிரெஞ்சு
அறிவியலாளர் (பி. 1822)
1953 - எட்வின் ஹபிள், அமெரிக்க
வானியலாளர் (பி. 1889)
1956 - வில்லியம் போயிங்,
அமெரிக்க வான்வெளி
முன்னோடி (பி. 1881 )
1970 - கமால் அப்துல் நாசர்,
எகிப்திய அதிபர் (பி. 1918 )
1978 - பாப்பரசர் முதலாம்
அருளப்பர் சின்னப்பர், (பி. 1912 )
1989 - பேர்டினண்ட் மார்க்கொஸ்,
பிலிப்பீன்ஸ் அதிபர் (பி. 1917 )
1994 - கே. ஏ. தங்கவேலு , தமிழ்
நகைச்சுவை நடிகர்
சிறப்பு நாள்
உலக வெறிநோய் நாள்
தாய்வான் - ஆசிரியர் நாள்
( கன்பூசியஸ் பிறந்த நாள்)
பசுமை நுகர்வோர் நாள்.

செப்டம்பர் 27 ( September 27)

செப்டம்பர் 27 ( September 27)

கிரிகோரியன் ஆண்டின் 270 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 271
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 95 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1066 - இங்கிலாந்தின் முதலாம்
வில்லியமும் அவனது
படையினரும் சோம் ஆற்றின்
வாயிலில் இருந்து புறப்பட்டனர்.
நோர்மானியர் இங்கிலாந்தைக்
கைப்பற்றுதல் ஆரம்பமானது.
1529 – முதலாம் சுலைமான்
வியென்னா நகரை
முற்றுகையிட்டான்.
1540 – இயேசு சபைக்கு
திருத்தந்தை மூன்றாம் பவுல்
ஒப்புதல் தந்தார்.
1590 - ஏழாம் ஏர்பன் திருத்தந்தை
பதவியேற்ற 13 நாள் இறந்தார்.
இவரே மிகக்குறுகிய காலம்
திருத்தந்தையாக இருந்தவர்.
1777 - பென்சில்வேனியாவின்
லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள்
மட்டும் ஐக்கிய அமெரிக்காவின்
தலைநகராக இருந்தது.
1821 - மெக்சிகோ,
எசுப்பானியாவிடம் இருந்து
விடுதலை அடைந்தது.
1825 – உலகின் முதலாவது
பயணிகள் தொடருந்து
இங்கிலாந்தில் சேவைக்கு
விடப்பட்டது.
1854 - "எஸ்.எஸ். ஆர்க்டிக்" நீராவிக்
கப்பல் அட்லாண்டிக் கடலில்
மூழ்கியதில் 300 பேர்
கொல்லப்பட்டனர்.
1893 - சிகாகோவில் இடம்பெற்ற
உலகச் சமயங்களின் பாராளுமன்ற
மாநாடு முடிவடைந்தது.
1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற்
தடவையாக E=mc² என்ற
சமன்பாட்டை
அறிமுகப்படுத்தினார்.
1916 - எதியோப்பியாவில்
இடம்பெற்ற அரண்மனைப்
புரட்சியை அடுத்து இயாசு
மன்னர் பதவியை இழந்தான்.
1928 - ஐக்கிய அமெரிக்கா சீனக்
குடியரசை அங்கீகரித்தது.
1937 - கடைசி பாலிப் புலி
கொல்லப்பட்டது.
1938 – ஆர்.எம்.எசு. குயின்
எலிசபெத் பயணிகள் கப்பல்
கிளாஸ்கோவில் வெள்ளோட்டம்
விடப்படட்து.
1939 - இரண்டாம் உலகப் போர் :
வார்சா ஜெர்மனியிடம்
சரணடைந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனி , ஜப்பான், இத்தாலி
ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில்
பேர்லின் நகரில்
கையெழுத்திட்டன.
1944 – இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் கெசெல் நகர் மீது
கூட்டுப்படைகளால்
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்
அமெரிக்கப் படைகளுக்குப்
பெரும் இழப்பை ஏற்படுத்திய
தாக்குதல் ஆகும்.
1956 – அமெரிக்க வான்படைக்
கப்டன் மில்பேர்ன் ஆப்ட் மக் 3 ஐத்
தாண்டிய முதல் நபர் என்ற
பெயரைப் பெற்றார். சிறிது
நேரத்தின் பின்னர் விமானம்
கட்டுக்கடங்காமல் வீழ்ந்து
நொறுங்கியதில் அவர் ஆப்ட்
கொல்லப்பட்டார்.
1959 - ஜப்பானின், ஹொன்ஷூ
நகரில் இடம்பெற்ற புயலில் 5000
பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1961 – சியேரா லியோன்
ஐநாவில் இணைந்தது.
1964 – ஜான் எஃப். கென்னடியை
லீ ஹாவி ஒசுவால்ட் என்பவன்
வேறு எவரினதும் தூண்டுதல்
இன்றிக் கொலை செய்ததாக
வாரன் ஆணையம் அறிக்கை
வெளியிட்டது.
1977 - ஒண்டாரியோவில் 300 மீட்டர்
உயர தொலைக்காட்சிக் கோபுரம்
ஒன்றில் சிறு விமானம் ஒன்று
மோதியதில் அதில் பயணம் செய்த
அனைவரும் கொல்லப்பட்டனர்.
கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
1983 - இலங்கையின் கிழக்கே
மட்டக்களப்பில் சிறை உடைப்பில்
பல தமிழ் அரசியல் கைதிகள் தப்பி
ஓடினர்.
1983 - ரிச்சார்ட் ஸ்டோல்மன் க்னூ
செயற்றிட்டத்தைப் பகிரங்கமாக
அறிவித்தார்.
1994 - மியான்மாரில் இராணுவ
ஆட்சியை எதிர்க்க
மக்களாட்சிக்கான தேசிய
அமைப்பை ஓங் சான் சூ கீ
உருவாக்கினார்.
1993 - அப்காசியாவில்
சுகுமியில் ஜார்ஜியப்
பொதுமக்கள் ஆயிரக்கணக்கில்
தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
1996 - ஆப்கானிஸ்தானில்
முகமது ஓமார் தலைமையிலான
தலிபான் தீவிரவாதிகள் காபூல்
நகரைக் கைப்பற்றி அதிபர்
புரானுடீன் ரபானியை
ஆட்சியிலிருந்து விரட்டினர்.
முன்னாள் அதிபர் முகமது
நஜிபுல்லா காபூல் நகர
மின்சாரக் கம்பத்தில் மக்கள்
முன்னிலையில்
தூக்கிலிடப்பட்டுக்
கொல்லப்பட்டார்.
1997 - செவ்வாய்
தளவுளவியுடனான தொடர்புகள்
துண்டிக்கப்பட்டன.
1998 - கிளிநொச்சி நகரம்
விடுதலைப் புலிகளினால்
ஓயாத அலைகள் இரண்டு
நடவடிக்கை மூலம் வெற்றி
கொள்ளப்பட்டது.
1998 - கூகிள் தேடுபொறி
ஆரம்பிக்கப்பட்டது.
2002 - கிழக்குத் தீமோர் ஐக்கிய
நாடுகள் சபையில் இணைந்தது.
பிறப்புகள்
1696 – அல்போன்ஸ் மரிய
லிகோரி , இத்தாலிய ஆயர்,
புனிதர் (இ. 1787 )
1814 – டானியல் கிர்க்வுட் ,
அமெரிக்க வானியலாளர் (இ. 1895 )
1925 – ராபர்ட் எட்வர்ட்சு, English
physiologist and academic, நோபல் பரிசு
பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ.
2013 )
1907 – பகத் சிங் , இந்திய
விடுதலைப் போராட்ட வீரர் (இ.
1931 )
1924 – தேவன் யாழ்ப்பாணம் ,
ஈழத்து எழுத்தாளர் (இ. 1982 )
1925 – ராபர்ட் எட்வர்ட்சு,
பிரித்தானிய உயிரியலாளர் (இ.
2013 )
1926 – ஜி. வரலட்சுமி ,
தென்னிந்திய நடிகை, பாடகி (இ.
2006 )
1932 – ஒலிவர் வில்லியம்சன்,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப்
பொருளியலாளர்
1932 – யஷ் சோப்ரா ,
பாக்கித்தானி-இந்திய இயக்குநர்
(இ. 2012 )
1933 – நாகேஷ், நகைச்சுவை
நடிகர் (இ. 2009 )
1953 – அம்ருதானந்தமயி, இந்திய
குரு, ஞானி
1972 – கிவ்வினெத் பேல்ட்ரோ ,
அமெரிக்க நடிகை, தொழிலதிபர்
1981 – பிரண்டன் மெக்கல்லம் ,
நியூசிலாந்து துடுப்பாளர்
1982 – லில் வெய்ன், அமெரிக்க
ராப் இசைக் கலைஞர், நடிகர்
1984 – காயத்ரி ஜெயராமன்,
இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1590 – ஏழாம் அர்பன்
(திருத்தந்தை) (பி. 1521)
1660 – வின்சென்ட் தே பவுல் ,
பிரெஞ்சு புனிதர் (பி. 1581)
1833 – இராசாராம் மோகன் ராய் ,
இந்திய சீர்திருத்தவாதி (பி. 1772 )
1933 – காமினி ராய் , வங்காளக்
கவிஞர், பெண்ணியவாதி (பி.
1864 )
1972 – சீர்காழி இரா. அரங்கநாதன் ,
இந்தியக் கணிதவியலாளர் (பி.
1892 )
1975 – டி. ஆர். சேஷாத்ரி , தமிழக
வேதியலறிஞர் (பி. 1900)
1996 – முகமது நஜிபுல்லா,
ஆப்கானித்தானின் 7வது
அரசுத்தலைவர் (பி. 1947 )
2008 – மகேந்திர கபூர் , இந்தியப்
பாடகர் (பி. 1934 )
2011 – வில்சன் கிரேட்பாட்ச் ,
செயற்கையாக
உட்பொருத்தக்கூடிய
இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த
அமெரிக்கப் பொறியாளர் (பி. 1919)
சிறப்பு நாள்
உலக சுற்றுலா நாள்.