செப்டம்பர் 18 ( September 18 )
கிரிகோரியன் ஆண்டின் 261 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 262
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 104
நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
96 - டொமிஷியன்
கொலை செய்யப்பட்டதை அடுத்து
நேர்வா ரோமப் பேரரசன் ஆனான்.
1502 - கிறிஸ்தோபர் கொலம்பஸ்
தனது நான்காவது கடைசியுமான
கடற்பயணத்தின் போது கொஸ்டா
ரிக்காவில் தரையிறங்கினார்.
1635 - புனித ரோமப் பேரரசன் இரண்டாம்
பேர்டினண்ட் பிரான்ஸ் மீது போர்
தொடுத்தான்.
1739 - பெல்கிரேட் நகரம் ஒட்டோமான்
பேரரசிடம் கையளிக்கப்பட்டது.
1759 - கியூபெக் நகரை பிரித்தானியர்
கைப்பற்றினர்.
1809 - லண்டனில் ரோயல் ஒப்பரா
மாளிகை திறக்கப்பட்டது.
1810 - சிலியில் முதலாவது அரசு (junta)
அமைக்கப்பட்டது.
1812 - மொஸ்கோவில் பரவிய தீ
நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு
அணைந்தது. பெட்ரொவ்ஸ்கி
அரண்மனையில் இருந்து நெப்போலியன்
கிரெம்ளினுக்கு வந்தான்.
1851 - நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன்
முதலில் வெளியிடப்பட்டது.
1895 – புக்கர் டி. வாஷிங்டன் தனது
புகழ்பெற்ற 'அட்லாண்டா
மத்தியஸ்தம்’ என்ர
சொற்பொழிவை
ஆற்றினார்.
1906 -
ஹொங்கொங்கில்
ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால்
10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1911 - ரஷ்யப் பிரதமர் பீட்டர் ஸ்டோலிப்பின்
கீவ் ஒப்பரா மாளிகையில் சுடப்பட்டார்.
1914 - முதலாம் உலகப் போர்:
தென்னாபிரிக்கப் படைகள்
ஜெர்மனியின் தென் மேற்கு
ஆபிரிக்காவில் தரையிறங்கினர்.
1919 - நெதர்லாந்தில்
பெண்களுக்கு வாக்குரிமை
வழங்கப்பட்டது.
1922 – உலக நாடுகள் அணியில்
ஹங்கேரி இணைந்தது.
1924 - மகாத்மா காந்தி இந்து -
முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள்
உண்ணாநோன்பைத்
தொடங்கினார்.
1932 - நடிகை பெக் எண்ட்விசில்
ஹாலிவுட் சின்னத்தின் "H" எழுத்தில்
இருந்து குதித்து தற்கொலை
செய்து கொண்டார்.
1934 – சோவியத் ஒன்றியம் உலக
நாடுகள் அணியில் இணைந்தது.
1939 - இரண்டாம் உலகப் போர் : இக்னேசி
மொஸ்கிக்கி தலைமையிலான
போலந்து அரசினர் ருமேனியாவுக்கு தப்பினர்.
1943 - இரண்டாம் உலகப் போர் :
பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில்
சொபொபோர் என்ற
இடத்தில் யூதர்கள் படுகொலை
செய்யப்பட்டனர்.
1943 - இரண்டாம் உலகப் போர் :
டென்மார்க் யூதர்களை
வெளியேற்ற ஹிட்லர் உத்தரவிட்டார்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல்
ஜப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத்
தாக்கியதில் டச்சு , ஆஸ்திரேலிய ,
பிரித்தானியப் போர்க்கைதிகள் உட்பட 5,600 பேர்
கொல்லப்பட்டனர்.
1959 - வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர
அனுப்பப்பட்டது.
1960 - பிடெல் காஸ்ட்ரோ ஐநா
கூட்டத்தொடரில் பங்குபற்ற
நியூயோர்க் நகரை அடைந்தார்.
1961 - ஐநாவின்
பொதுச்செயலர் டாக்
ஹமாஷெல்ட் கொங்கோவில்
அமைதிக்கான பேச்சுவார்த்தையில்
பங்கேற்றபோது விமான விபத்தில்
உயிரிழந்தார்.
1962 - ருவாண்டா , புருண்டி ,
ஜமெய்க்கா ஆகியன ஐநாவில்
இணைந்தன.
1964 - வியட்நாம் மக்கள் இராணுவம்
தென் வியட்நாமினுள் நுழைந்தது.
1968 - இந்திய உளவுத்துறை நிறுவனம்
றா அமைப்பு உருவாக்கப்பட்டது.
1972 - இடி அமீனினால் விரட்டப்பட்ட
முதல் தொகுதி உகாண்டா
மக்கள் ஐக்கிய இராச்சியத்தை
வந்தடைந்தனர்.
1974 - சூறாவளி
ஹொண்டூராசைத் தாக்கியதில்
5,000 பேர் கொல்லப்ப்பட்டனர்.
1976 - பெய்ஜிங் நகரில் மா சே
துங்கின் இறுதி நிகழ்வுகள்
இடம்பெற்றன.
1977 - வொயேஜர் 1 பூமியையும்
சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
1980 - சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த
விண்வெளி வீரருடனும் ஒரு
ரஷ்யருடனும் விண்வெளி
சென்றது.
1982 - லெபனானில் கிறிஸ்தவ
துணை இராணுவத்தினர் 600
பாலஸ்தீனரைக் கொன்றனர்.
1988 - பர்மாவில் அரசியலமைப்பு
நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு
ஆதரவானோர் ஆயிரக்கணக்கில்
கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி
முடிவுக்கு வந்தது.
1990 – லிக்டன்ஸ்டைன் நாடு ஐநாவில்
இணைந்தது.
1997 - 50.3 விழுக்காடு வேல்ஸ் மக்கள்
சுயாட்சிக்கு ஆதரவாக
வாக்களித்தனர்.
2006 - கிழக்கிலங்கை, அம்பாறையில் 11
முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை
செய்யப்பட்டனர்.
2007 - மியான்மாரில் பௌத்த பிக்குகள்
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து
கொண்டனர்.
பிறப்புகள்
53 – திராயான், உரோமைப் பேரரசர் (இ.
117 )
1709 – சாமுவேல் ஜோன்சன் , ஆங்கிலேயக்
கவிஞர் (இ. 1784 )
1765 – பதினாறாம் கிரகோரி (திருத்தந்தை)
(இ. 1846 )
1908 – விக்தர் அம்பர்த்சுமியான்,
சார்ச்சிய-ஆர்மீனிய வானியலாளர்
(இ. 1996 )
1925 – இரா. சாரங்கபாணி , தமிழ்ப்
பேராசிரியர், தமிழறிஞர் (இ. 2010 )
1928 – பண்டரிபாய்,
தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ.
2003 )
1949 – விஷ்ணுவர்தன் , இந்தியத் திரைப்பட
நடிகர், பாடகர் (இ. 2009)
1961 – ஜேம்ஸ் கண்டோல்பினி ,
அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
(இ. 2013 )
1968 – உபேந்திரா, இந்திய நடிகர்,
பாடகர்
1971 – லான்சு ஆம்ஸ்டிராங் ,
அமெரிக்க மிதிவண்டி வீரர்
1973 – ஜேம்ஸ் மார்ஸ்டன் ,
அமெரிக்க நடிகர்
1976 – ரொனால்டோ, பிரேசில்
கால்பந்தாட்ட வீரர்
1979 – வினய் , தென்னிந்தியத்
திரைப்பட நடிகர்
[1986]] – பல்ஜிந்தர் சிங் , இந்திய தடகள
வீரர்
1989 – அசுவினி பொன்னப்பா ,
இந்திய இறக்கை பந்தாட்ட வீரர்
இறப்புகள்
1783 – லியோனார்டு ஆய்லர் , சுவிசு
கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி.
1707 )
1945 – இரட்டைமலை சீனிவாசன் , ஆதி
திராவிடர் இயக்கத் தலைவர் (பி. 1859 )
1958 – பக்வான் தாஸ் , இந்திய இறை
மெய்யியலாளர், அரசியல்வாதி (பி.
1869 )
1961 – டாக் ஹமாஷெல்ட்,
ஐநாவின் 2வது பொதுச்
செயலர் , அமைதிக்கான நோபல் பரிசு
பெற்ற சுவீடியர் (பி. 1905 )
1966 – வித்துவான் க. வேந்தனார்,
ஈழத் தமிழறிஞர் (பி. 1918 )
1970 – ஜிமி ஹென்றிக்ஸ் ,
அமெரிக்க பாடகர் (பி. 1942 )
1978 – ஆபிரகாம் கோவூர் , இலங்கை,
மலையாள உளவியலாளர் (பி. 1898)
1992 – முகம்மது இதயத்துல்லா ,
இந்தியாவின் 6வது குடியரசுத் துணைத்
தலைவர் (பி. 1905 )
2011 – டி. கே. கோவிந்த ராவ் கருநாடக
இசைக் கலைஞர் (பி. 1929 )
சிறப்பு நாள்
சிலி - விடுதலை நாள் ( 1810 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக