புதன், 21 செப்டம்பர், 2016

செப்டம்பர் 22 ( September 22)

செப்டம்பர் 22 ( September 22)

கிரிகோரியன் ஆண்டின் 265 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 266
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 100 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1499 - சுவிட்சர்லாந்து
விடுதலை பெற்று தனி
நாடாகியது.
1692 - ஐக்கிய அமெரிக்காவில்
சூனியக்காரர்களின் கடைசித்
தொகுதியினர்
தூக்கிலிடப்பட்டனர்.
1711 - டஸ்கரோரா பழங்குடிகள்
வட கரொலைனாவில்
பாம்லிக்கோ ஆற்றுப் படுகையில்
குடியேற்றவாசிகளைத் தாக்கி
130 பேரைக் கொன்றனர்.
1784 - அலாஸ்காவின் கோடியாக்
என்ற இடத்தில் ரஷ்யா தனது
குடியேற்றத்தை ஆரம்பித்தது.
1877 - யாழ்ப்பாணம் கத்தோலிக்க
கார்டியன் பத்திரிகையின்
ஆசிரியராக தமிழறிஞர் அருளப்ப
முதலியார் நியமிக்கப்பட்டார்.
1888 - நஷ்னல் ஜியோகிரபிக்
மகசின் ( National Geographic Magazine )
முதலாவது இதழ் வெளிவந்தது.
1893 - அமெரிக்காவில்
தயாரிக்கப்பட்ட தானுந்து முதன்
முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
1896 - பிரித்தானியாவின் அரச
வம்சத்தில் அதிக காலம் ஆட்சியில்
இருந்த பெருமையை
விக்டோரியா மகாராணி
பெற்றார்.
1908 - பல்கேரியா
விடுதலையை அறிவித்தது.
1914 - ஜேர்மனியின் எம்டன்
நாசகாரிக் கப்பல் இரவு 9:30
மணிக்கு சென்னைத்
துறைமுகத்தையும் மற்றும் நகரப்
பகுதிகளையும் குண்டுவீசித்
தாக்கியது. மொத்தம் 130
குண்டுகளை அது வீசியது.
1934 - வேல்சில் சுரங்கம் ஒன்றில்
இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266
பேர் கொல்லப்பட்டனர்.
1941 - யூதர்களின் புத்தாண்டில்
உக்ரேனின் வின்னிட்சியா நகரில்
6,000 யூதர்கள் நாசி
ஜேர்மனியரினால்
கொல்லப்பட்டனர். இவர்கள்
அனைவரும் முதல் நாட்களில்
கொல்லப்பட்ட 24,000 யூதர்களில்
உயிர் தப்பியோராவர்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ரஷ்ய இராணுவம்
எஸ்தோனியாவின் தலைநகர்
தாலின் நகரினுள் நுழைந்தனர்.
1955 - ஐக்கிய இராச்சியத்தில்
ஐடிவி தொலைக்காட்சி சேவை
ஆரம்பிக்கப்பட்டது.
1960 - மாலிக் கூட்டமைப்பில்
இருந்து செனெகல் விலகியதை
அடுத்து சுடானியக் குடியரசு
மாலி எனப் பெயர் மாற்றம்
பெற்றது.
1965 - இந்திய-பாகிஸ்தான் போர்,
1965 : இந்தியாவுக்கும்
பாகிஸ்தானுக்கும் இடையில்
காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற
போர் ஐநாவின் போர் நிறுத்த
அழைப்பை ஏற்று முடிவுக்கு
வந்தது.
1970 - மலேசியாவின் பிரதமர்
துங்கு அப்துல் ரகுமான் தனது
பதவியை விட்டு விலகினார்.
1975 - ஐக்கிய அமெரிக்காவின்
அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் கொலை
முயற்சி ஒன்றில் இருந்து
தப்பினார்.
1980 - ஈரான் - ஈராக் போர்: ஈராக்
ஈரானை முற்றுகையிட்டது.
1993 - ஜோர்ஜியாவின் பயணிகள்
விமானம் ஒன்று சுகுமி என்ற
இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு
வீழ்த்தப்பட்டதில் 108 பேர்
கொல்லப்பட்டனர்.
1995 - [[நாகர்கோயில் பாடசாலை
சிறார்களின் படுகொலை, யாழ்
நாகர்கோயில் பாடசாலை மீது
12:50 மணிக்கு இலங்கை
விமானப்படையினர் நடத்திய
குண்டுவீச்சில் 30 மாணவர்கள்
கொல்லப்பட்டனர்.
1997 - அல்ஜீரியாவில் 200 கிராம
மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 - MSN தமிழ் , ஹிந்தி
பீட்டாவிற்கு விடைகொடுத்து
இறுதிப் பதிப்பை
ஆரம்பித்ததோடு, மலையாளம்,
தெலுங்கு , கன்னடம் ஆகிய
மொழிகளிலும் பதிப்பை
ஆரம்பித்தது.
பிறப்புகள்
1930 - பி.பி.ஸ்ரீநிவாஸ் ,
பழம்பெரும் திரைப்பட பின்னணி
பாடகர், (இ. 2013 )
1791 - மைக்கேல் பரடே, ஆங்கில
அறிவியலாளர் (இ. 1867 )
இறப்புகள்
1539 - குரு நானக் தேவ் , சீக்கிய
மதத்தைத் தோற்றுவித்தவர் (பி.
1469 )
2009 - எஸ். வரலட்சுமி , நடிகை,
பாடகி (பி. 1927 )
2009 - ஆர். பாலச்சந்திரன் ,
பேராசிரியர், கவிஞர்
சிறப்பு நாள்
பல்கேரியா - விடுதலை நாள்
( 1908 )
மாலி - விடுதலை நாள் ( 1960 )
தானுந்து அற்ற நாள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக