செப்டம்பர் 23 ( September 23 )
கிரிகோரியன் ஆண்டின் 266 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 267
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 99
நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1529 - ஒட்டோமான் பேரரசன் முதலாம்
சுலைமான் வியென்னா மீது
படையெடுத்தான்.
1641 – ஒரு பில்லியன் அமெரிக்க
டாலர் பெறுமதியான
பொருட்களுடன் த மேர்ச்சண்ட்
ராயல் என்ற கப்பல் மூழ்கியது.
1799 - இலங்கையில் அரச ஆணைப்படி
சித்திரவதை, மற்றும் கொடூரமான
தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம்
அமுலுக்கு வந்தது.
1821 - திரிப்பொலீத்சாவை
கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக்
கொன்றனர்.
1846 - நெப்டியூன் கோள் பிரெஞ்சு
வானியலாளர் உர்பெயின் ஜோசப்
மற்றும் பிரித்தானிய வானியலாளர்
ஜோன் அடம்ஸ் ஆகியோரால்
கண்டுபிடிக்கப்பட்டது.
1868 - புவெர்ட்டோ ரிக்கோவில்
ஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக
கிளர்ச்சி ஆரம்பமானது.
1884 - ஹேர்மன் ஹொலரித்
கணிப்பானுக்கான காப்புரிமம்
பெற்றார்.
1889 - நின்டெண்டோ கம்பனி
ஆரம்பிக்கப்பட்டது.
1932 - ஹெஜாஸ் மற்றும்
நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் சவுதி
அரேபியா என்ற பெயரில் இணைந்தன.
1941 - நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை
முகாமில் நச்சுவாயுக் கொலைகள்
முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன.
1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965
முடிவுக்கு வந்தது.
1966 - நாசாவின் சேர்வெயர் 2
விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ்
என்ற இடத்தில் மோதியது.
1980 - பாடகர் பொப் மார்லி
தனது கடைசி நிகழ்ச்சியில் கலந்து
கொண்டார்.
1983 - இலங்கை மட்டக்களப்பு
சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ்
அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத்
தப்பித்தனர்.
1986 - இலங்கை கொழும்பில் தேசிய
இயற்கை வரலாற்று நூதன சாலை
பொதுமக்களுக்குத்
திறந்துவிடப்பட்டது.
2002 - மொசிலா பயர்
பாக்ஸ் , இணைய உலாவி
வெளிவந்தது.
2004 - எயிட்டியில் சூறாவளி மற்றும்
வெள்ளம் காரணமாக 1,070 பேர்
கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
கிமு 63 – அகஸ்ட்டஸ் , ரோமப் பேரரசன் (இ.
14 )
1215 - குப்லாய் கான் , மங்கோலியப்
பேரரசன் (இ. 1294 )
1930 - ரே சார்ல்ஸ் , அமெரிக்கப்
பாடகர் (இ. 2004 )
1939 - ஹென்றி புளோஃபெல்ட் ,
ஆங்கிலேயத் துடுப்பாளர்
1941 - நவநீதம் பிள்ளை ,
தென்னாபிரிக்க நீதிபதி, முன்னாள்
ஐநா மனித உரிமை ஆணையாளர்
1957 - குமார் சானு , இந்தியப் பாடகர்
1971 - முயீன் கான் , பாக்கித்தானியத்
துடுப்பாளர்
இறப்புகள்
1939 - சிக்மண்ட் பிராய்ட் , ஆத்திரிய
மருத்துவர் (பி. 1856 )
1951 - பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட
நடிகர், பாடகர்
1968 - பியட்ரல்சினாவின் பியோ ,
இத்தாலியப் புனிதர் (பி. 1887)
1973 - பாப்லோ நெருடா , சிலி
கவிஞர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு
பெற்றவர் (பி. 1904
சிறப்பு நாள்
சவுதி அரேபியா - தேசிய நாள் ( 1932 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக