திங்கள், 26 செப்டம்பர், 2016

செப்டம்பர் 26 ( September 26 )

செப்டம்பர் 26 ( September 26 )

கிரிகோரியன் ஆண்டின் 269 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 270
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 96
நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1255 - அசிசியின் புனித கிலாராவுக்கு
புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
1580 - சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி
வந்தார்.
1687 – ஏத்தன்சு நகரத்தை முற்றுகையிட்ட
ஒட்டோமான் படையினரிடம் இருந்து நகரைக்
கைப்பற்ற மரோசினி தலைமையிலான
வெனிசியப் படையினர் குண்டுத்
தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின்
பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது.
1777 - பிரித்தானியப் படைகள்
பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக்
கைப்பற்றினர்.
1783 – மாசசூசெட்சில் ஆயுதக்
கிளர்ச்சி ஷேய்சின் கிளர்ச்சி ஆரம்பம்.
1907 - நியூசிலாந்து , நியூபவுண்லாந்து
இரண்டும் பிரித்தானியப் பேரரசின்
டொமினியன்களாயின.
1918 – முதலாம் உலகப் போர்:
அமெரிக்க வரலாற்றிலேயே அதிக
இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன்
தாக்குதல் பிரான்சில் ஆரம்பம்.
1934 – ஆர்.எம்.எசு. குயீன் மேரி
நீராவிக்கப்பல் வெள்ளோட்டம்
விடப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர் :
மார்கெட் கார்டன் நடவடிக்கை
தோல்வியடைந்தது.
1950 - ஐக்கிய நாடுகள் படைகள் வட
கொரியாவிடமிருந்து சியோல் நகரை
மீண்டும் கைப்பற்றினர்.
1950 - இந்தோனீசியா ஐநாவில்
இணைந்தது.
1954 - ஜப்பானில் இடம்பெற்ற
புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்கியதில்
1,172 பேர் கொல்லப்பட்டனர்.
1960 – ஐக்கிய அமெரிக்காவில்
முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப்
போட்டியிடும் வேட்பாளர்களின்
தொலைக்காட்சி நேரடி விவாதம்
ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜோன் எஃப்.
கென்னடிக்கும் இடையில்
இடம்பெற்றது.
1960 - பிடெல் காஸ்ட்ரோ சோவியத்
ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை
அறிவித்தார்.
1962 - யேமன் அரபுக் குடியரசு
அமைக்கப்பட்டது.
1973 – அத்திலாந்திக் மேலான தனது
முதலாவது இடைநிறுத்தல் இல்லாத
பயணத்தை கொன்கோர்ட் விமானம்
பறந்து காட்டியது.
1983 – அணுவாயுதம் ஒன்று
ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித்
தவறு என்பதை சோவியத் இராணுவ
அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ்
கண்டுபிடித்து அணுவாயுதப்
போரொன்று இடம்பெறுவதைத்
தவிர்த்தார்.
1984 - ஐக்கிய இராச்சியம்
ஹொங்கொங்கை
சீனாவிடம் கையளிக்க ஒப்புக்
கொண்டது.
1987 - தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய
உறுப்பினர் லெப்டினன் கேணல்
திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து
கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா
உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
1997 - இந்தோனேசிய விமானம்
மெடான் அருகே
விபத்துக்குள்ளாகியதில் 234 பேர்
கொல்லப்பட்டனர்.
1997 – இத்தாலியில் இடம்பெற்ற
நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிசு
தேவாலயத்தின் ஒரு பகுதியைச்
சேதப்படுத்த்யது.
2002 - செனெகல் நாட்டு
கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில்
ஆயிரத்துக்கும் அதிகமானோர்
கொல்லப்பட்டனர்.
2007 - வியட்நாமில் பசாக் ஆற்றின்
குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த
பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60
தொழிலாளர்கள்
கொல்லப்பட்டு
நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
2008 – சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த
இவெசு ரொசி ஆங்கிலக்
கால்வாயை ஜெட் இயந்திரம்
பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த
முதலாவது மனிதர் என்ற பெயரைப்
பெற்றார்.
பிறப்புகள்
1820 – ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ,
இந்திய மெய்யியலாளர், ஓவியர் (இ.
1891 )
1833 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில
அரசியல்வாதி (இ. 1891 )
1849 – இவான் பாவ்லோவ் , நோபல் பரிசு
பெற்ற உருசிய மருத்துவர் (இ. 1936 )
1867 – வின்சர் மெக்கே ,
அமெரிக்க இயங்குபடக் கலைஞர் (இ.
1934 )
1886 – ஆர்ச்சிபால்ட் ஹில், நோபல் பரிசு
பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ. 1977 )
1890 – பாபநாசம் சிவன் , கருநாடக
இசை அறிஞர் (இ. 1973 )
1897 – ஆறாம் பவுல் (திருத்தந்தை) (இ.
1978 )
1908 – பெரியசாமி தூரன் ,
கருநாடக இசை அறிஞர் (இ. 1987)
1913 – திருக்குறள் வீ. முனிசாமி ,
தமிழறிஞர் (இ. 1994 )
1923 – தேவ் ஆனந்த், இந்திய நடிகர்,
இயக்குநர் (இ. 2011 )
1926 – வ. விஜயபாஸ்கரன் , தமிழக
இதழாசிரியர், எழுத்தாளர் (இ. 2011 )
1932 – மன்மோகன் சிங் , இந்ஹியாவின்
13வது பிரதமர்
1934 – ஏர்னெஸ்ட் மக்கின்டயர் ,
இலங்கைத் தமிழ் ஆங்கில நாடகாசிரியர்
1965 – பெத்ரோ
பொரொசென்கோ,
உக்ரைனின் 5வது அரசுத்தலைவர்
1966 – பூரி ஜெகன்நாத் , இந்தியத்
திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்
1979 – டாவி ரோயிவாசு ,
எசுத்தோனியாவின் 16வது பிரதமர்
1981 – செரீனா வில்லியம்ஸ் ,
அமெரிக்க டென்னிசு வீராங்கனை
இறப்புகள்
1922 – இலெவ்
அலெக்சாண்ட்ரோவிக் சுகேவ் , உருசிய
வேதியியலாளர் (பி. 1873 )
1954 – தேசிக விநாயகம்பிள்ளை , கவிமணி
(பி. 1876 )
1959 – எஸ். டபிள்யூ. ஆர். டி.
பண்டாரநாயக்கா, இலங்கையின் 4வது
பிரதமர் (இ. 1899 )
1978 – மன்னே சீகுபான், நோபல் பரிசு
பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (பி.
1886 )
1987 – திலீபன், தமிழீழ விடுதலைப்
புலிகளின் உறுப்பினர் (பி. 1963 )
2010 – குளோரியா ஸ்டுவர்ட்,
அமெரிக்க நடிகை (பி. 1910 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக