செப்டம்பர் 07 (September 07)
செப்டம்பர் 07 (September 07) கிரிகோரியன் ஆண்டின் 250 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 251 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 115 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
70 - ரோமப் பேரரசின் இராணுவம் தளபதி டைட்டஸ் தலைமையில் ஜெருசலேமைக் கைப்பற்றியது.
878 - லூயி, திக்குவாயர் (லூயி தி ஸ்தாமரர்) மேற்கு பிரான்சியாவின் அரசனாக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூட்டப்பட்டார்.
1159 - மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
1191 - சலாகுத்தீனை இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அற்சுப்பில் நிகழ்ந்த சண்டையில் தோற்கடித்தார்.
1228 - புனித ரோமப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.
1539 - குரு அங்காட் தேவ் சீக்கியர்களின் இரண்டாவது குருவானார்.
1812 - நெப்போலியன் ரஷ்யாவின் முதலாம் அலெக்சாண்டரின் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான்.
1821 - வெனிசுவேலா, கொலம்பியா, பனாமா மற்றும் எக்குவாடோர் ஆகியவற்றை உள்ளடக்கிய கிரான் கொலம்பியாக் குடியரசு உருவானது. சிமோன் பொலிவார் இதன் தலைவர் ஆனார்.
1822 - பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1860 - லேடி எல்ஜின் நீராவிக்கப்பல் மிச்சிகன் வாவியில் மூழ்கியதில் 400 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகரில் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1929 - பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
1942 - உக்ரேனில் 8,700 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
1943 - டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய 55 பேர் கொல்லப்பட்டனர்.
1950 - ஸ்கொட்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 116 பேர் காப்பாற்றப்பட்டனர்.
1953 - நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியத்தின் மத்திய குழு தலைவரானார்.
1965 - இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.
1977 - பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.
1978 - கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
1978 - பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் லண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1986 - தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கன் திருச்சபையின் முதலாவது கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டூட்டு நியமிக்கப்பட்டார்.
1986 - சிலியின் அதிபர் ஆகுஸ்டோ பினொச்செ கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.
1988 - ஆப்கானிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அஹாட் மொஹ்மண்ட் சோவியத்தின் சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.
1998 - கூகிள் ஆரம்பிக்கப்பட்டது.
1999 - ஏதன்சில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.
1999 - இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.
2004 - சூறாவளி ஐவன் கிரனாடாவைத் தாக்கியதில் 39 பேர் கொல்லப்பட்டு 90 விழுக்காடு கட்டிடங்கள் சேதமாயின.
பிறப்புகள்
1533 - முதலாவது எலிசபெத், இங்கிலாந்தின் அரசி, (இ. 1603)
1913 - அப்துல் காதர் லெப்பை, இலங்கை கவிஞர் (இ. 1984)
1929 - ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)
1953 - மம்முட்டி, மலையாள ந்டிகர்
1984 - பர்வீஸ் மவுரூவ், இலங்கையின் துடுப்பாளர்
1984 - மாலிங்க பண்டார, இலங்கையின் துடுப்பாளர்
இறப்புகள்
1949 - எல்ரன் மாயோ, ஆஸ்திரேலிய உளவியலாளர் (பி. 1880)
1997 - மொபுட்டு செசெ செக்கோ, சயீரின் குடியரசுத் தலைவர் (பி. 1930)
2014 - சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1929)
சிறப்பு நாள்
பிரேசில் - விடுதலை நாள் (1822)
மொசாம்பிக் - வெற்றி நாள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக