வெள்ளி, 23 செப்டம்பர், 2016

செப்டம்பர் 25 ( September 25)

செப்டம்பர் 25 ( September 25)

கிரிகோரியன் ஆண்டின் 268 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 269
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 97 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1513 – ஸ்பானிய நாடுகாண்
பயணி பாஸ்கோ நூனியெத் தே
பால்போவா பசிபிக்
பெருங்கடலை முதன் முதலில்
கண்ட ஐரோப்பியர் .
1690 – ஐக்கிய அமெரிக்காவின்
முதலாவது செய்திப்பத்திரிகை
( Publick Occurrences Both Foreign and
Domestick ) முதலும் கடைசித்
தடவையாகவும் வெளிவந்தது.
இது அரசினால் தடை
செய்யப்பட்டது.
1789 – அமெரிக்கக் காங்கிரஸ்
அரசியலமைப்பிற்கு மனித
உரிமைகளுக்கான 10 திருத்தங்கள்
உட்பட 12 திருத்தங்களைக்
கொண்டு வந்தது.
1846 - ஐக்கிய அமெரிக்கப்
படைகள் சாச்செரி டெய்லர்
தலைமையில் மெக்சிக்கோவின்
மொண்டெரே நகரைக்
கைப்பற்றினர்.
1906 – கரையிலிருந்து படகை
வழி நடத்தும் முறை ஸ்பெயினில்
இயக்கிக் காட்டப்பட்டது. இதுவே
தொலை இயக்கியின் பிறப்பு
எனக் கருதப்படுகிறது.
1956 – அத்திலாந்திக்
பெருங்கடலைக் கடந்த முதலாவது
தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1
நிறுவப்பட்டது.
1957 - ஐக்கிய அமெரிக்காவில்
ஆர்கன்சஸ் மாநிலத்தில் உள்ள
பாடசாலை ஒன்றில் 9 கருப்பின
மாணவர்கள் 300
இராணுவத்தினர்களின்
பாதுகாப்புடன் பாடசாலை
சென்றனர்.
1959 - இலங்கைப் பிரதமர் எஸ்.
டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
சோமராம தேரர் என்ற புத்த பிக்கு
ஒருவரினால் சுடப்பட்டுப்
படுகாயமடைந்து அடுத்த நாள்
இறந்தார்.
1962 - அல்ஜீரிய மக்கள் சனநாயகக்
குடியரசு அமைக்கப்பட்டது.
1978 - கலிபோர்னியாவில் சான்
டியாகோ நகரில் இரண்டு
விமானங்கள் மோதிக்கொண்டதில்
144 பயணிகள் கொல்லப்பட்டனர்.
1983 - வட அயர்லாந்தில் 38 ஐரியக்
குடியரசு இராணுவக் கைதிகள்
சிறையை உடைத்து தப்பினர்.
1992 - யாழ்ப்பாணம், பூநகரியில்
62 இராணுவக் காவலரண்கள்
விடுதலைப் புலிகளினால்
தாக்கி அழிக்கப்பட்டன.
2002 - குஜராத் மாநிலத்தில்
இந்துக் கோயில் ஒன்றில்
இடம்பெற்ற வன்முறையில் 32 பேர்
கொல்லப்பட்டதை அடுத்து அங்கு
ஆயிரக்கணக்கான
இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
பிறப்புக்கள்
1897 – வில்லியம் ஃபாக்னர் ,
அமெரிக்க எழுத்தாளர், நோபல்
பரிசு பெற்றவர் (இ. 1962)
1899 - உடுமலை நாராயணகவி ,
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்,
நாடக எழுத்தாளர் (இ. 1981 )
1968 - வில் ஸ்மித் , அமெரிக்க ராப்
இசைப் பாடகர்
1976 - சான்சி பிலப்ஸ்,
அமெரிக்காவின் கூடைப்பந்து
ஆட்டக்காரர்
இறப்புகள்
1978 - ருக்மணி தேவி , சிங்களத்
திரைப்பட நடிகை (பி. 1923
1986 - நிக்கலாய்
செமியோனொவ் , ரஷ்ய
வேதியியலாளர், நோபல் பரிசு
பெற்றவர் (பி. 1896 )
2003 - எட்வர்ட் செயிட் , ஆங்கில
ஒப்பாய்வுத்துறை அறிஞர் (பி.
1935 )
சிறப்பு நாள்
மொசாம்பிக் - பாதுகாப்புப்
படையினர் நாள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக