செப்டம்பர் 13 (September 13)
செப்டம்பர் 13 (September 13) கிரிகோரியன் ஆண்டின் 256 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 257 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 109 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1503 - மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற டேவிட் என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
1609 - ஹென்றி ஹட்சன் பின்னர் ஹட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார்.
1759 - கனடாவின் கியூபெக் நகருக்கருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
1788 - நியூயோர்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது.
1791 - பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான்.
1814 - பிரித்தானியர் மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
1847 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர்.
1898 - ஹனிபல் குட்வின் செலுலோயிட் புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்.
1914 - முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1923 - ஸ்பெயினில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.
1939 - கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.
1943 - சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.
1948 - இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.
1949 - இலங்கை, இத்தாலி பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐநாவில் அங்கத்துவம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.
1953 - நிக்கிட்டா குருஷேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
1968 - அல்பேனியா வார்சா ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
1971 - நியூயோர்க்கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
1989 - தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் டெஸ்மண்ட் டூட்டு தலைமையில் இடம்பெற்றது.
1993 – நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத்துக்கும் இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
1994 - யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென் முனையைக் கடந்தது.
1999 - மாஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1896 – மு. நல்லதம்பி, ஈழ்த்துத் தமிழறிஞர், இலங்கை நாட்டுப்பண்ணைத் தமிழில் மொழிபெயர்த்தவர் (இ. 1951)
1898 – கதிரவேலு சிற்றம்பலம், இலங்கை அரசியல்வாதி (இ. 1964)
1916 – ரூவால் டால், உவெல்சு-ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1990)
1932 – எம். கே. றொக்சாமி, இலங்கை இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1988)
1947 – சி. தர்மகுலசிங்கம், ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 2011)
1960 – நல்லாரி கிரண் குமார் ரெட்டி, ஆந்திராவின் 16வது முதலமைச்சர்
1969 – ஷேன் வோர்ன், ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர்
1989 – தோமா முல்லர், செருமானியக் கால்பந்து வீரர்
இறப்புகள்
1598 – எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு (b. 1526)
1929 – ஜத்தீந்திர நாத் தாஸ், இந்தியச் செயற்பாட்டாளர் (பி. 1904)
1936 – யோகான்னசு பிரான்சு ஆர்ட்மேன், செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1865)
1944 – நூர் இனாயத் கான், பிரித்தானிய சிறப்பு உளவுப் பிரிவின் இரகசிய உளவாளி (பி. 1914)
1975 – முடிகொண்டான் வெங்கடராம ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1897)
1996 – டூப்பாக் ஷகூர், அமெரிக்க ராப் இசைக்கலைஞர் (பி. 1971)
2009 – அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1932)
2010 – ஆர். சூடாமணி, எழுத்தாளர் (பி. 1931)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக