ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

செப்டம்பர் 20 ( September 20 )

செப்டம்பர் 20 ( September 20 )

கிரிகோரியன் ஆண்டின் 263 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 264
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 102
நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1187 - சலாதின் ஜெருசலேம்
மீதான தாக்குதலை ஆரம்பித்தான்.
1519 - பேர்டினண்ட் மகலன் 270 பேருடன்
ஸ்பெயின் நாட்டின் சான்லூகர் டி
பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச்
சுற்றிவரப் புறப்பட்டார்.
1633 - சூரியனைப் பூமியைச் சுற்றுவதாகத்
தெரிவித்த கலிலியோ கலிலி கத்தோலிக்க
மதகுரு மாடத்தின் முன்னால்
விசாரிக்கப்பட்டார்.
1697 - ஒன்பதாண்டுப் போரை (1688-1697)
முடிவுக்குக் கொண்டுவரும்
பொருட்டு பிரான்ஸ்,
இங்கிலாந்து , ஸ்பெயின், புனித ரோமப்
பேரரசு டச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில்
அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1847 - நீலப் பென்னி அஞ்சல் தலையை
பிரித்தானியா மொரீசியசில்
வெளியிட்டது.
1854 - பிரித்தானியா மற்றும்
பிரெஞ்சுப் படையினர் கிறிமியாவில்
இடம்பெற்ற போரில் ரஷ்யர்களைத்
தோற்கடித்தனர்.
1857 - கிழக்கிந்தியக் கம்பனிக்கு
விசுவாசமான படைகள் டெல்லியைக்
கைப்பற்றினர். சிப்பாய் எழுச்சி முடிவுக்கு
வந்தது.
1878 - த ஹிண்டு இதழ் வெளியிட
ஆரம்பிக்கப்பட்டது.
1932 - மகாத்மா காந்தி பூனே சிறையில்
உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 - உக்ரேனில் நாசி ஜேர்மனியர்கள்
இரண்டு நாட்களில் மொத்தம்
3,000 யூதர்களைக் கொன்றனர்.
1945 - மகாத்மா காந்தியும்
ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப்
படைகளை வெளியேறக் கோரினர்.
1966 - சேர்வெயர் 2 விண்கலம்
சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.
1976 - துருக்கியில் விமானம் ஒன்று
வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த
அனைத்து 155 பேரும்
கொல்லப்பட்டனர்.
1977 - வடக்கு வியட்நாம் ஐநாவில்
இணைந்தது.
1979 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில்
இடம்பெற்ற இராணுவப் புரட்சியை
அடுத்து பேரரசன் முதலாம்
பொக்காசா பதவியில் இருந்து
அகற்றப்பட்டார்.
1984 - லெபனானில் பெய்ரூட்
நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது
நடத்தப்பட்ட தானுந்துத்
தற்கொலைத் தாக்குதலில் 22 பேர்
கொல்லப்பட்டனர்.
1990 - தெற்கு ஒசேத்தியா
ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை
அறிவித்தது. எந்த நாடும்
அங்கீகரிக்கவில்லை.
1993 - துருவ செயற்கைக்கோள்
ஏவுகணையை இந்தியா ஏவியது.
பிறப்புக்கள்
1924 - அ. நாகேஸ்வர ராவ் ,
தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ.
2014 )
1940 - டாரோ ஆசோ , சப்பானிய
அரசியல்வாதி
1946 - மார்க்கண்டேய கட்சு , இந்திய
நீதிபதி
1948 - ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்,
அமெரிக்கத் திரைப்படத்
தயாரிப்பாளர், எழுத்தாளர்
இறப்புகள்
1933 - அன்னி பெசண்ட் , பெண்
விடுதலைக்குப் போராடியவர் (பி. 1847 )
1996 - பால் ஏர்டோசு , அங்கேரி நாட்டுக்
கணிதவியலாளர் (பி. 1913 )
2011 - புர்ஹானுத்தீன் ரப்பானி ,
ஆப்கானித்தானின் 10வது அரசுத்தலைவர்
(பி. 1940 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக