செப்டம்பர் 06 (September 06)
செப்டம்பர் 6 (September 6) கிரிகோரியன் ஆண்டின் 249 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 250 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 116 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1522 - பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.
1776 - கரிபியன் தீவான குவாதலூப்பேயை சூறாவளி தாக்கியதில் 6000 பேர் கொல்லப்பட்டனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியின் படூக்கா நகரைக் கைப்பற்றினர்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் தென் கரோலினாவின் மொரிஸ் தீவில் இருந்து விலகினர்.
1873 - இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார்.
1885 - கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.
1901 - அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
1930 – ஆர்ஜெண்டீனாவின் அதிபர் ஹிப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1936 - கடைசி தாஸ்மானியப் புலி தாஸ்மானியா, ஹோபார்ட்டில் இறந்தது.
1939 - இரண்டாம் உலகப் போர்: தென்னாபிரிக்கா ஜேர்மனியுடன் போரை அறிவித்தது.
1946 - இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1932 - கனடாவின் முதலாவது தொலைக்காட்சி நிலையம், CBFT-TV, மொன்ட்றியாலில் திறக்கப்பட்டது.
1951 - தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.
1955 – துருக்கியில் இஸ்தான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாகிஸ்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.
1966 - தென்னாபிரிக்க பிரதமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் நாடாளுமன்ற அமர்வின் போது குத்திக் கொலை செய்யப்பட்டார்.
1968 - சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1970 - ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
1990 - யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
1991 - ரஷ்யாவின் லெனின்கிராட் நகரம் மீண்டும் சென் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1997 - வேல்ஸ் இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.
2006 - ஐரோப்பியத் தமிழ் வானொலி, மக்கள் தொலைக்காட்சி ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.
பிறப்புக்கள்
1968 - சாயிட் அன்வர், பாகிஸ்தானின் துடுப்பாளர்
இறப்புகள்
1998 - அகிரா குரோசாவா, ஜப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1910)
2007 - லூசியானோ பவரொட்டி, இத்தாலியப் பாடகர் (1935)
சிறப்பு நாள்
பல்கேரியா - இணைப்பு நாள் (1885)
பாகிஸ்தான் - பாதுகாப்பு நாள்
சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக