செப்டம்பர் 24 ( September 24)
கிரிகோரியன் ஆண்டின் 267 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 268
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 98 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
622 - முகமது நபி மெக்காவில்
இருந்து மதினாவுக்கு
இடம்பெயர்ந்தார் ( ஹிஜ்ரா ).
1664 - நெதர்லாந்து நியூ
ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக்
கொடுத்தது.
1674 – பேரரசர் சிவாஜியின்
இரண்டாவது முடிசூட்டு விழா
(தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.
1789 – அமெரிக்க உச்சநீதி மன்றம்
நிறுவப்பட்டது.
1799 - கட்டபொம்மனும் இன்னும் 6
பேரும் புதுக்கோட்டை அரசன்
விஜயரகுநாத தொண்டைமானால்
கைது செய்யப்பட்டுப் பின்னர்
செப் 29இல் ஆங்கிலேயரிடம்
ஒப்படைக்கப்பட்டனர்.
1840 - இலங்கை வங்கி
அமைக்கப்பட்டது.
1841 - புருணை சுல்தான்
சரவாக் மாநிலத்தை
பிரித்தானியாவுக்குக்
கொடுத்தான்.
1869 - கறுப்பு வெள்ளி : ஜேய்
கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு
செல்வந்தர்களின் சூழ்ச்சியை
முறியடிக்க அமெரிக்கா
பெருமளவு தங்கத்தை
விற்பனைக்கு விட்டதில், தங்க
விலை சரிந்தது.
1898 - யாழ்ப்பாணம், இணுவிலில்
பெண்களுக்கான மக்லியொட்
மருத்துவமனையை அமெரிக்க
மிசன் அமைத்தது.
1906 – வயோமிங்கில் உள்ள பேய்க்
கோபுரம் அமெரிக்காவின்
முதலாவது தேசிய நினைவுச்
சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1948 - ஹொண்டா நிறுவனம்
அமைக்கப்பட்டது.
1968 – சுவாசிலாந்து ஐநாவில்
இணைந்தது.
1973 - கினி-பிசாவு
போர்த்துக்கலிடம் இருந்து
விடுதலையை அறிவித்தது.
1979 – உலகின் முதலாவது
மின்னஞ்சல் சேவையை
கம்பியூசேர்வ் ஆரம்பித்தது.
1990 - சனிக் கோளில் பெரும்
வெண் புள்ளி ஒன்று
தொடர்ச்சியாக
அவதானிக்கப்பட்டது.
பிறப்புகள்
1501 – கார்டானோ, இத்தாலியக்
கணிதவியலாளர், வானியலாளர்
(இ. 1576 )
1564 – வில்லியம் ஆடம்சு,
ஆங்கிலேய மாலுமி (இ. 1620 )
1777 – இரண்டாம் சரபோஜி,
தஞ்சாவூர் மராத்திய
இராச்சியத்தின் அரசர் (இ. 1832]])
1861 – பிகாஜி காமா , இந்தியச்
செய்றபாட்டாளர் (இ. 1936 )
1896 – எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட் ,
அமெரிக்க எழுத்தாளர் (இ. 1940 )
1902 – ரூஃகூல்லா மூசவி
கொமெய்னி, மதத்தலைவர்,
அரசியல்வாதி, ஈரானின் 1வது
அரசுத்தலைவர் (இ. 1989)
1936 – சிவந்தி ஆதித்தன், இந்தியத்
தொழிலதிபர் (இ. 2013 )
1937 – பாரதி மணி , தமிழக
எழுத்தாளர், நடிகர்
1941 – தெ. ஞானசுந்தரம் , தமிழ்ப்
பேராசிரியர், நூலாசிரியர்
1950 – மொகிந்தர் அமர்நாத் ,
இந்தியத் துடுப்பாளர்
1976 – ஸ்டீபனி மக்மஹோன் ,
அமெரிக்க மற்போர் வீராங்கனை
1985 – இலினோர் காட்டன்,
கனடிய-நியூசிலாந்து
எழுத்தாளர்
1989 – பியா உர்ட்சுபாக்,
பிலிப்பீனிய அழகி
இறப்புகள்
366 – லிபேரியஸ் (திருத்தந்தை)
1834 – பிரேசிலின் முதலாம்
பெட்ரோ (பி. 1798)
1904 – நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்,
நோபல் பரிசு பெற்ற
தென்மார்க்கு மருத்துவர் (பி.
1860 )
2006 – பத்மினி, தென்னிந்திய
நடிகை (பி. 1932 )
2007 – முருகேசு சுவாமிகள் ,
இலங்கை இந்து ஆன்மீகவாதி (பி.
1933 )
2009 – நாத்திகம் இராமசாமி ,
இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி.
1932 )
2012 – திலகன், மலையாளத்
திரைப்பட நடிகர் (பி. 1938 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( கினி-
பிசாவு , 1973)
குடியரசு நாள் ( டிரினிடாட்
மற்றும் டொபாகோ )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக