செப்டம்பர் 03 (September 03)
செப்டம்பர் 3 (September 3) கிரிகோரியன் ஆண்டின் 246 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 247 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 119 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
301 - உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது.
1189 - முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1260 - பாலஸ்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் மாம்லுக்குகள் வெற்றி பெற்றனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும்.
1783 - அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது. பாரிசில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா பிரித்தானியாவிடம் இருந்து அதிகாரபூர்வமாக விடுதலை அடைந்தது.
1798 - பெலீசின் கரையில் ஸ்பானியர்களுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஒருவாரப் போர் இடம்பெற்றது.
1801 - இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1855 - நெப்ராஸ்காவில் அமெரிக்கப் படையினர் சியூ பழங்குடியினரைத் தாக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 100 பேரைக் கொன்றனர்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் கென்டக்கி மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
1878 - தேம்ஸ் நதியில் "பிரின்சஸ் அலைஸ்" பயணிகள் கப்பல் பைவெல் அரண்மனையுடன் மோதியதில் 640 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1914 - அல்பேனிய இளவரசன் வில்லியம் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினான்.
1933 - சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் புள்ளியான பொதுவுடமை முனையை (7495 மீ) யெவ்கேனி அப்லாக்கொவ் எட்டினார்.
1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான ஜெர்மனியின் முற்றுகையை அடுத்து பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன ஜெர்மனி மீது போர் தொடுத்தன.
1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியை முதல் தடவையாக நேச நாடுகள் முற்றுகையிட்டன.
1971 - கட்டார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.
2004 - ரஷ்யாவில் பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 344 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1814 - ஜேம்ஸ் சில்வெஸ்டர், பிரித்தானிய கணிதவியலாளர்
1829 - அடோல்ஃப் ஃபிக், ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் (இ. 1901)
1948 - லெவி முவனவாசா, சாம்பியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2008)
1951 - மைத்திரிபால சிறிசேன, இலங்கை அரசியல்வாதி, 6வது அரசுத்தலைவர்
1976 - விவேக் ஒபரோய், இந்தித் திரைப்பட நடிகர்
இறப்புகள்
1658 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (பி 1599)
1999 - அப்துல் காதர் சாவுல் அமீட், இலங்கை அரசியல்வாதி (பி. 1928)
1999 - இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (பி. 1930)
2014 - ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (பி. 1930)
சிறப்பு நாள்
கட்டார் - விடுதலை நாள் (1971)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக