மே 13 ( May 13 )
மே 13 ( May 13 ) கிரிகோரியன் ஆண்டின் 133 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 134 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1619 - டச்சு அரசியல்வாதி ஜொகான் வன் ஓல்டென்பார்னவெல்ட் ஹேக் நகரில் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
1648 - டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
1765 - யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான்.
1787 - ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11
கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டார்.
1830 - எக்குவாடோர் விடுதலை அடைந்தது.
1846 - ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.
1861 - பெரும் வால்வெள்ளி ஒன்று
ஆஸ்திரேலியாவில் அவதானிக்கப்பட்டது.
1880 - நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது
தொடருந்தை சோதித்தார்.
1888 - பிரேசில் அடிமைமுறையை இல்லாதொழித்தது.
1913 - நான்கு இயந்திரங்களினால் ஆன முதலாவது விமானத்தை ஈகர் சிபோர்ஸ்கி என்ற ரஷ்யர் இயக்கினார்.
1940 - இரண்டாம் உலகப் போர் :
நெதர்லாந்தினுள் நாசி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்ஹெல்மேனியா
பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன்
கனடாவுக்கும் தப்பி ஓடினர்.
1943 - இரண்டாம் உலகப் போர் : வட
ஆபிரிக்காவில் ஜெர்மனிய மற்றும்
இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.
1952 - இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
1954 - சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின்
போராட்டம் இடம்பெற்றது.
1960 - உலகின் ஏழாவது உயர மலையான
தவுளகிரியின் உச்சியை
சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.
1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.
1969 - மலேசியாவில் கோலாலம்பூரில்
சீனர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.
1981 - ரோமில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1996 - வங்காள தேசத்தில் வீசிய கடும்
புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.
1997 - இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1998 - இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில்
சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.
1998 - இந்தியா மேலும் இரண்டு
அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.
2005 - உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர்
போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - அல்லைப்பிட்டி படுகொலைகள், 2006 : யாழ்ப்பாணம் , அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.
2006 - திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.
2007 - திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணகத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.
பிறப்புகள்
1221 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி , உருசிய இளவரசர், புனிதர் (இ. 1263 )
1754 – யாக்கூப் ஆஃப்னர் , செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (இ. 1809 )
1792 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை) (இ.
1878 )
1841 – இராபர்ட் இசுடேன்சு , பிரித்தானியத் தொழிலதிபர், வள்ளல் (இ.
1936 )
1857 – ரொனால்டு ராஸ் , நோபல் பரிசு பெற்ற இந்திய-ஆங்கிலேய மருத்துவர் (இ.
1932 )
1882 – ஜோர்ஜெஸ் பிராக், பிரான்சிய ஓவியர் (இ. 1963 )
1883 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு ,
பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவர் நோயியலாளர் (இ. 1962 )
1905 – பக்ருதின் அலி அகமது , இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (இ. 1977 )
1916 – சச்சிதானந்த ராவுத்ராய், இந்திய ஒரிய மொழிக் கவிஞர் (இ. 2004 )
1918 – பாலசரஸ்வதி, இந்திய நடனக் கலைஞர் (இ. 1984 )
1948 – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் , இலங்கை உரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர்
1956 – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் , இந்திய மதகுரு
இறப்புகள்
1835 – ஜான் நாசு , ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1752 )
1878 – ஜோசப் ஹென்றி , அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1797 )
1898 – பி. ஆர். ராஜமய்யர் , தமிழக எழுத்தாளர் (பி. 1872 )
1930 – பிரிட்ஜோப் நான்ஸன் , நோபல் பரிசு பெற்ற நோர்வே அறிவியலாலர் (பி.
1861 )
1961 – கேரி கூப்பர் , அமெரிக்க நடிகர் (பி.
1901 )
1978 – வி. தெட்சணாமூர்த்தி , ஈழத்துத் தவில் கலைஞர் (பி. 1933 )
2000 – தாராபாரதி , தமிழகக் கவிஞர் (பி. 1947 )
2001 – ஆர். கே. நாராயண் , இந்தியப் புதின எழுத்தாளர் (பி. 1906)
2005 – ஜார்ஜ் டாண்ட்சிக் , அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1914 )
சிறப்பு நாள்
ரொட்டுமா நாள் ( ரொட்டுமா )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக