ஞாயிறு, 21 மே, 2017

மே 22 ( May 22 )

மே 22 ( May 22 )

மே 22 ( May 22 ) கிரிகோரியன் ஆண்டின் 142 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 143 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 334 - மகா அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம்
பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தனர்.
1809 - வியென்னாவுக்கு அருகில்
நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.
1834 - இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.
1840 - நியூ சவுத் வேல்சுக்கு
பிரித்தானியக் குற்றவாளிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
1844 - பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
1906 - ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1915 - ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.
1915 - ஸ்கொட்லாந்தில் ஐந்து
தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர். 246 பேர் காயமடைந்தனர்.
1942 - இரண்டாம் உலகப் போர் :
மெக்சிக்கோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.
1958 - இலங்கை இனக்கலவரம் -
இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள்
சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1960 - தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும்
ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
1967 - பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
1968 - அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1972 - இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியது. சிலோன் , ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
1990 - வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.
1990 - விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
2004 - நெப்ராஸ்காவில் இடம்பெற்ற
சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.

பிறப்புகள்

1408 – அன்னமாச்சாரியார் , இந்து சமயப் பெரியார், கருநாடக இசை அறிஞர் (இ.
1503 )
1772 – இராசாராம் மோகன் ராய் , இந்திய மெய்யியலாளர் (இ. 1833 )
1813 – ரிச்சார்ட் வாக்னர் , செருமானிய இசையமைப்பாளர் (இ. 1883 )
1844 – மேரி கசாட் , அமெரிக்க ஓவியர் (இ.
1926 )
1859 – ஆர்தர் கொனன் டொயில் , பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1930 )
1867 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் , தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1946 )
1900 – தேவதாஸ் காந்தி , இந்திய விடுதலைச் செயற்பாட்டாளர், காந்தியவாதி (இ. 1957 )
1926 – தமிழ்வாணன் , தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1977 )
1933 – ஊரன் அடிகள் , தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், பத்திரிகையாசிரியர்
1935 – சி. வி. சந்திரசேகர் , தமிழக பரதநாட்டியக் கலைஞர், நடன அமைப்பாளர்
1936 – எக்கார்ட் விம்மர் , அமெரிக்கத் தீநுண்ம ஆய்வாளர்
1940 – வை. சச்சிதானந்தசிவம் , ஈழத்து ஓவியர், எழுத்தாளர் (இ. 2006 )
1940 – பி. விருத்தாசலம் , தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2010 )
1944 – வைகோ , தமிழக அரசியல்வாதி
1946 – இலியூத்மிலா வாசில்யெவ்னா சுரவ்லோவா , உருசிய-உக்ரைனிய வானியலாளர்
1948 – நெடுமுடி வேணு , இந்திய நடிகர்
1954 – சுச்சி நாக்காமுரா , நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர்
1959 – மெகபூபா முப்தி , இந்திய அரசியல்வாதி
1984 – டஸ்டின் மாஸ்கோவிட்ஸ் ,
முகநூலை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர்
1987 – நோவாக் ஜோக்கொவிச் , செர்பிய டென்னிசு வீரர்.

இறப்புகள்

337 – முதலாம் கான்ஸ்டன்டைன் , உரோமைப் பேரரசர் (பி. 272
1457 – ரீட்டா , இத்தாலியப் புனிதர் (பி.
1381 )
1545 – சேர் சா சூரி , இந்திய அரசர் (பி.
1486 )
1885 – விக்டர் ஹியூகோ , பிரான்சிய புதின எழுத்தாளர், கவிஞர் (பி. 1802 )
1967 – லாங்ஸ்ரன் ஹியூஸ் , அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1902 )
1991 – எஸ். ஏ. டாங்கே , இந்திய அரசியல்வாதி (பி. 1899 )

சிறப்பு நாள்

அடிமை ஒழிப்பு நாள் ( மர்தினிக்கு )
குடியரசு நாள் ( இலங்கை )
ஒற்றுமை நாள் ( யெமன் , 1990)
பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக