மே 24 ( May 24 )
மே 24 ( May 24 ) கிரிகோரியன் ஆண்டின் 144 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 145 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1738 - மெதடிச இயக்கம் ஜோன் உவெசுலியால் ஆரம்பிக்கப்பட்டது.
1798 - அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.
1844 - முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவெல் மோர்சு என்பவரால்
வாஷிங்டன் டிசியில் இருந்து
மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
ஐக்கிய அமெரிக்கப் படைகள்
வேர்ஜீனியாவின் அலெக்சாண்டிரியா நகரைக் கைப்பற்றினர்.
1883 - நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது.
1901 - தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர் : வடக்கு
அட்லாண்டிக் பெருங்கடலில் "பிஸ்மார்க்" என்ற ஜெர்மன் போர்க்கப்பல் "ஹூட்" என்ற
பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1956 - சுவிட்ஸர்லாந்தில் முதலாவது
யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.
1962 - அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர் அவ்ரோரா 7
விண்ணூர்தியில் மூன்று முறை
பூமியைச் சுற்றி வந்தார்.
1991 - எத்தியோப்பியாவில் இருந்து
யூதர்களை இஸ்ரவேலுக்குக் கொண்டு வரும் சொலமன் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
1993 - எதியோப்பியாவிடம் இருந்து
எரித்திரியா விடுதலை அடைந்தது.
2000 - 22 வருட முற்றுகைக்குப் பின்னர்
இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து வெளியேறினர்.
2000 - இலங்கையில் நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.
2001 - எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது
ஷெர்ப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவரே.
2002 - ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.
2006 - விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.
2007 - ஈழப்போர் : யாழ்ப்பாணத்தின்
நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.
2007 - ஈழப்போர் : கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
1686 – டானியல் ஃபேரென்ஃகைட் , போலந்து-செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1736 )
1794 – வில்லியம் ஹியூவெல் , ஆங்கிலேய மெய்யியலாளர், மதகுரு (இ.
1866 )
1819 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா (இ. 1901 )
1905 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1984 )
1913 – கண. முத்தையா , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பதிப்பாளர் (இ. 1997 )
1921 – சு. வேலுப்பிள்ளை , ஈழத்து நாடகாசிரியர், எழுத்தாளர்
1928 – ஜனா கிருஷ்ணமூர்த்தி , தமிழக அரசியல்வாதி (இ. 2007 )
1929 – கரோலின் சூமேக்கர் , அமெரிக்க வானியலாளர்
1941 – பாப் டிலான் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர்
1942 – பிரேசர் இசுட்டோடார்ட்டு , இசுக்காட்டுலாந்திய வேதியியலாளர்
1949 – ரொஜர் டிக்கின்சு, ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர்
1953 – ஆல்ஃப்ரெட் மோலினா , ஆங்கிலேய நடிகர்
1955 – ராஜேஷ் ரோஷன் , இந்திய இசையமைப்பாளர் .
இறப்புகள்
1543 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் , போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473 )
1950 – ஆர்ச்சிபால்ட் வேவல் , இந்தியாவின் 43வது தலைமை ஆளுநர் (பி. 1883 )
1981 – சி. பா. ஆதித்தனார் , தமிழக ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1905 )
1981 – ஆ. தியாகராஜா, இலங்கை அரசியல்வாதி (பி. 1916 )
2008 – சி. வேலுசுவாமி , மலேசிய எழுத்தாளர் (பி. 1927 )
2012 – பாலாம்பிகை நடராசா , இலங்கை வானொலிக் கலைஞர், இசைக்கலைஞர்
2014 – டேவிட் அலன் , ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1935 )
2016 – இரா. வை. கனகரத்தினம் , இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் (பி. 1946 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( எரித்திரியா , 1993)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக