மே 4 ( May 4 )
மே 4 ( May 4 ) கிரிகோரியன் ஆண்டின் 124 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 125 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 241 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1493 - திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை ஸ்பெயினுக்கும்
போர்த்துக்கல்லுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
1494 - கிறிஸ்தோபர் கொலம்பஸ்
ஜமெய்க்காவில் கால் பதித்தார்.
1626 - டச்சு பயணி பீட்டர் மின்யூயிட்
மான்ஹட்டன் தீவை அடைந்தார்.
1799 - நான்காம் மைசூர்ப் போர் : திப்பு சுல்தான் பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது.
1814 - பிரான்ஸ் மன்னன் முதலாம் நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட நிலையில் எல்பா தீவை அடைந்தான்.
1855 - அமெரிக்க நாடுகாண் பயணி
வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றும் நோக்கில் 60 பேருடன் சான் பிரான்சிஸ்கோவை விட்டுப் புறப்பட்டார்.
1886 - ஹேமார்க்கெட் கலகம் :
சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
1904 - பனாமா கால்வாய் கட்டுமானம்
ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1912 - ரோட்ஸ் என்ற கிரேக்கத் தீவை
இத்தாலி ஆக்கிரமித்தது.
1919 - மே நான்கு இயக்கம் : சீனாவின் பகுதிகள் ஜப்பானுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தலைநகர் பெய்ஜிங்கில்
தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்
போராட்டம் இடம்பெற்றது.
1924 - பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1930 - பிரித்தானியக் காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1942 - இரண்டாம் உலகப் போர் :
ஜப்பானினால் முதல் நாள் ஆக்கிரமிக்கப்பட்ட துளகி தீவின் ( சொலமன் தீவுகள் ) மீது அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் இருந்த நியூவென்காம் வதை முகாமை
பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் : வடக்கு ஜெர்மனி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
1949 - அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான
பிரித்தானியர்களால் கோலாலம்பூர் , புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
1949 - இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில் டொரினோ உதைபந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
1973 - சியேர்ஸ் கோபுரம் , சிகாகோவில் உள்ள வானளாவி, கட்டி முடிக்கப்பட்டது.
1979 - மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
1982 - போக்லாந்து போர் :
பிரித்தானியாவின் போர்க்கப்பல் ஒன்று
ஆர்ஜெண்டீனாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கிலக்காகியதில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1994 - இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபினுக்கும், பாலஸ்தீன அதிபர் யாசர் அரபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி காசாக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
2000 - லண்டனின் முதலாவது நகரத் தந்தையாக கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார்.
2002 - நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1767 – தியாகராஜர் , கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847 )
1777 – லூயி ஜாக் தெனார் , பிரான்சிய வேதியியலாளர் (இ. 1857 )
1825 – தாமசு என்றி அக்சுலி , ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1895 )
1909 – ஆ. மு. சரிபுத்தீன் , இலங்கைத் தமிழறிஞர், புலவர் (இ. 2000 )
1922 – யுஜினி கிளார்க், அமெரிக்க உயிரியலாளர் (இ. 2015 )
1928 – ஓசுனி முபாரக் , எகிப்தின் 4வது அரசுத்தலைவர்
1929 – திக்கிரி அபேயசிங்க , இலங்கை சிங்கள வரலாற்றாளர் (இ. 1985 )
1929 – ஆட்ரி ஹெப்பர்ன் , பிரித்தானிய நடிகை (இ. 1993 )
1940 – ராபின் குக், அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர்
1942 – சாம் பிட்ரோடா , இந்திய தொழில் முனைவாளர், கண்டுபிடிப்பாளர்
1945 – என். ராம் , இந்திய இதழியலாளர்
1958 – கெய்த் ஹேரிங் , அமெரிக்க ஓவியர் (இ. 1990 )
1981 – அலெக்சாண்டர் கெரென்சுகி , உருசிய அரசியல்வாதி (இ. 1970 )
1983 – திரிசா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1799 – திப்பு சுல்தான் , மைசூர் பேரரசர் (பி. 1750 )
1879 – முத்து குமாரசாமி , இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர் (பி. 1834 )
1912 – நெட்டி இசுட்டீவன்சு , அமெரிக்க மரபணுவியலாளர் (பி. 1861 )
1949 – எஸ். ஏ. கணபதி, மலாயா தொழிற்சங்கத் தலைவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1925 )
1972 – காயிதே மில்லத் , தமிழக முசுலிம் அரசியல் தலைவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1896 )
1997 – டபிள்யூ. தகநாயக்க , இலங்கையின் 5வது பிரதமர் (பி. 1902 )
2011 – கி. கஸ்தூரிரங்கன் , தமிழக இதழாளர், எழுத்தாளர் (பி. 1933 )
சிறப்பு நாள்
அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்
இறந்தவர்கள் நினைவு நாள் ( நெதர்லாந்து )
ஸ்டார் வார்சு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக