மே 8 ( May 8 )
மே 8 ( May 8 ) கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1450 - இங்கிலாந்தில் கென்ட் நகரில்
ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1821 - கிரேக்க விடுதலைப் போர் :
கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகராக வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1886 - ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட
மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.
1902 - கரிபியன் , மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1914 - பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 - இரண்டாம் உலகப் போர் : கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த
பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1945 - அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் : ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
1984 - லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளை நிறுத்தப்போவதாக
சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
2007 - புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
1521 – பீட்டர் கனிசியு , டச்சு-சுவிட்சர்லாந்து மதகுரு, புனிதர் (இ.
1597 )
1737 – எட்வார்ட் கிப்பன் , ஆங்கிலேய அரசியல்வாதி, வரலாற்றாளர் (இ. 1794 )
1786 – ஜான் வியான்னி, பிரான்சியப் புனிதர் (இ. 1859 )
1828 – ஹென்றி டியூனாண்ட் ,
செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய சுவிட்சர்லாந்து தொழிலதிபர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1910 )
1884 – ஹாரி எஸ். ட்ரூமன் , ஐக்கிய அமெரிக்காவின் 33வது அரசுத்தலைவர் (இ. 1972 )
1895 – புல்ட்டன் சீன், அமெரிக்கப் பேராயர் (இ. 1979 )
1899 – பிரீட்ரிக் கையக் , நோபல் பரிசு பெற்ற ஆத்திரியப் பொருளியலாளர் (இ.
1992 )
1916 – சின்மயானந்தா , இந்திய சமயத் தலைவர் (இ. 1993 )
1924 – சு. வித்தியானந்தன், இலங்கைக் கல்விமான், தமிழறிஞர் (இ. 1989 )
1926 – டேவிட் ஆட்டன்பரோ , ஆங்கிலேய சூழலியலாளர்.
இறப்புகள்
685 – இரண்டாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 635 )
1794 – அந்துவான் இலவாசியே , பிரான்சிய வேதியியலாளர், உயிரியலாளர் (பி. 1743 )
1891 – எலனா பிளவாத்ஸ்கி , பிரம்மஞான சபையைத் தோற்றுவித்த உருசிய-ஆங்கிலேயர் (பி. 1831 )
1951 – மு. நல்லதம்பி , ஈழத்துப் புலவர்
1972 – பாண்டுரங்க வாமன் காணே , இந்தியவியலாளர், சமக்கிருத அறிஞர் (பி.
1880 )
1988 – ராபர்ட் ஏ. ஐன்லைன் , அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1907 )
2008 – சி. நாகராஜா , இலங்கை வழக்கறிஞர், யாழ்ப்பாண மாநகர முதல்வர் (பி. 1931 )
சிறப்பு நாள்
வெண்தாமரை நாள் ( பிரம்மஞானம் )
உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்
உலக தாலசீமியா நோய் தினம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக