மே 17 ( May 17 )
மே 17 ( May 17 ) கிரிகோரியன் ஆண்டின் 137 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 138 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1498 - வாஸ்கொடகாமா இந்தியாவின்
கோழிக்கோட்டை அடைந்தார்.
1521 - பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வேர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.
1590 - டென்மார்க்கின் ஆன்
ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினாள்.
1792 - நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
1809 - பிரெஞ்சுப் பேரரசுடன்
இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.
1814 - நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
1846 - அடோல்ப் சக்ஸ் என்பவரால்
சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது.
1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர்
அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1915 - பிரித்தானியாவின் கடைசி
லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர் : ஜெர்மனி
பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரைக் கைப்பற்றியது.
1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ் கோளின்
வளிமண்டலத்துள் சென்று வீனசில் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
1974 - அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
1983 - லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
1998 - தமிழர் விடுதலைக் கூட்டணியின்
யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2006 - தமிழ்த் தொலைக்காட்சி நடிகை
ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
2009 - தமிழினப் படுகொலை நாள்.
வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட
ஈழப்போர் முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
1749 – எட்வர்ட் ஜென்னர் , ஆங்கிலேய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ.
1823 )
1836 – ஜோசப் நார்மன் இலாக்கியர் , ஆங்கிலேய அறிவியலாளர், வானியலாளர் (இ. 1920 )
1858 – மேரி அடேலா பிளேக் , ஆங்கிலேய வானியலாளர் (இ. 1944 )
1873 – ஞானியார் அடிகள் , சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, உரையாசிரியர் (இ. 1942 )
1897 – தீரேந்திர வர்மா, இந்தியக் கவிஞர், மொழியியல் ஆய்வாளர் (இ. 1973 )
1920 – பி. சாந்தகுமாரி , தென்னிந்திய நடிகை, பாடகி
1938 – கே. ஜமுனா ராணி , தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1945 – பி. சி. சந்திரசேகர் , இந்தியத் துடுப்பாளர்
1956 – கு. ஞானசம்பந்தன் , தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர்
1967 – முகம்மது நசீது , மாலைத்தீவுகளின் 4வது அரசுத்தலைவர்
1974 – செந்தில் ராமமூர்த்தி , அமெரிக்க நடிகர்
1988 – நிக்கி ரீட் , அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
1870 – இராதானாத் சிக்தார் , வங்காள கணிதவியலாளர் (பி. 1813 )
1961 – மைசூர் வாசுதேவாச்சாரியார் , கருநாடக இசைப் பாடகர் (பி. 1865 )
1998 – சரோஜினி யோகேஸ்வரன் , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
2007 – நகுலன் , தமிழக எழுத்தாளர்
2014 – சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் ( நோர்வே )
தற்பாலினர் வெறுப்புபிற்கு எதிரான பன்னாட்டு நாள்
விடுதலை நாள் ( காங்கோ மக்களாட்சிக் குடியரசு )
உலக உயர் இரத்த அழுத்த நாள்
உலக தகவல் சமூக நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக