செவ்வாய், 2 மே, 2017

மே 3 ( May 3 )

மே 3 ( May 3 )

மே 3 ( May 3 ) கிரிகோரியன் ஆண்டின் 123 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 124 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1494 - ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில்
கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார்.
1802 - வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது.
1814 - பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டு போர்ட்டோஃபெராய்யோ நகரை அடைந்தான்.
1815 - டொலெண்டீனோ என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் நேப்பில்ஸ் மன்னன் முராட் ஆஸ்திரியர்களால் தோற்கடிக்கப்பட்டான்.
1879 - யாழ்ப்பாணம் , கரவெட்டியில் வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். கோயில் முழுவதும் எரிந்து சாம்பரானது.
1901 - புளோரிடாவின் ஜாக்கன்ஸ்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்தனர்.
1913 - இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.
1916 - உயிர்த்த ஞாயிரன்று இடம்பெற்ற
கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட
ஐரிஷ் தலைவர்கள் டப்ளின் நகரில் தூக்கிலிடப்பட்டார்கள்.
1939 - சுபாஸ் சந்திர போஸ்
அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார்.
1941 - பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர் : ஜப்பானிய கடற்படையினர் சொலமன் தீவுகளின்
துளகி தீவைக் கைப்பற்றினர்.
1959 - முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.
1962 - டோக்கியோவில் பயணிகள்
தொடருந்துகள் சரக்கு தொடருந்துடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1973 - சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கோபுரமானது.
1979 - மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமர் ஆனார்.
1986 - கொழும்பு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர்.
1999 - ஐக்கிய அமெரிக்காவின்
ஓக்லகோமா நகரை சூறாவளி தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டும் 665 பேர் காயமும் அடைந்தனர்.
2002 - இந்தியாவின் ராஜஸ்தானில் இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - ஆர்மீனியாவின் பயணிகள் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1469 – நிக்கோலோ மாக்கியவெல்லி , இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1527 )
1896 – வே. கி. கிருஷ்ண மேனன் , இந்திய அரசியல்வாதி (இ. 1974 )
1898 – கோல்டா மேயர், இசுரேலின் 4வது பிரதமர் (இ. 1978 )
1899 – டி. எஸ். சொக்கலிங்கம், தமிழக இதழியலாளர், எழுத்தாளர், விடுதலைப் போராளி (இ. 1966 )
1903 – பிங்கு கிராசுபி , அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1977 )
1919 – பீட் சீகர், அமெரிக்கப் பாடகர் (இ. 2014 )
1933 – ஜேம்ஸ் ப்ரௌன், சோல் இசையின் தந்தை என அழைக்கப்பட்ட அமெரிக்க இசை வல்லுநர் (இ. 2006 )
1935 – சுஜாதா, தமிழக எழுத்தாளர் (இ.
2008 )
1951 – அசோக் கெலட் , இராசத்தானின் 21வது முதலமைச்சர்
1955 – ரகுபர் தாசு, சார்க்கண்ட் மாநிலத்தின் 10வது முதலமைச்சர்
1959 – உமா பாரதி, மத்தியப் பிரதேசத்தின் 16வது முதலமைச்சர்

இறப்புகள்

1410 – எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர்
1481 – இரண்டாம் முகமது , உதுமானியப் பேரரசர் (பி. 1432 )
1680 – சிவாஜி , மராட்டியப் பேரரசர் (பி.
1627 )
1934 – காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை , தமிழகக் கருநாடக இசைப் பாடகர்
1957 – டபிள்யூ. ஏ. சில்வா , இலங்கையின் சிங்கள புதின எழுத்தாளர் (பி. 1890 )
1969 – சாகீர் உசேன் , இந்தியாவின் 3வது
குடியரசுத் தலைவர் (பி. 1897 )
1971 – ஆர். நடராஜ முதலியார், தமிழகத் திரைப்படத்துறையின் முன்னோடி, ஊமைத் திரைப்படங்களைத் தயாரித்தவர் (பி. 1885 )
1981 – நர்கிசு , இந்திய நடிகை (பி. 1929 )
1986 – மாத்தளை அருணேசர் , இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1905 )
2005 – ஜெகத் சிங் அரோரா , இந்தியத் தரைப்படை அதிகாரி (பி. 1916 )
2009 – பி. ராஜம் , தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1922 )

சிறப்பு நாள்

சூரிய நாள்
உலக பத்திரிகை சுதந்திர நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக