மே 6 ( May 6 )
மே 6 ( May 6 ) கிரிகோரியன் ஆண்டின் 126 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 127 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1527 - ஸ்பானிய , மற்றும் ஜெர்மனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். 147
சுவீடன் படைகள் புனித ரோமப் பேரரசின் மன்னன் ஐந்தாம் சார்ள்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர்.
1542 - பிரான்சிஸ் சேவியர் கோவாவை அடைந்தார்.
1682 - பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் தனது கோட்டையை வேர்சாய் நகருக்கு மாற்றினான்.
1757 - பிரெடெரிக் தலைமையிலான
புரூசியப் படைகள் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்து பிராக் நகரை முற்றுகையிட்டனர்.
1840 - பென்னி பிளாக் அஞ்சற்தலை
ஐக்கிய இராச்சியத்தில் ( அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அநுமதிக்கப்பட்டது.
1853 - "த லிட்டரறி மிரர்" ( The Literary Mirror) என்னும் ஆங்கில மாதிகையை
யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.
1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.
1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
1860 - கரிபால்டி தனது தொண்டர் படைகளுடன் இரண்டு சிசிலிகளின் பேரரசைக் கைப்பற்றுவதற்காக
ஜெனோவாவில் இருந்து புறப்பட்டான்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
ஆர்கன்சஸ் அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.
1889 - ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.
1910 - ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.
1930 - இரானில் இடம்பெற்ற
நிலநடுக்கத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
1937 - ஜெர்மனியின் ஹின்டென்பேர்க் என்ற வான்கப்பல் (zeppelin) நியூ ஜெர்சியில் தீப்பிடித்து அழிந்தது.
1942 - இரண்டாம் உலகப் போர் :
பிலிப்பீன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் ஜப்பானிடம் சரணடைந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் : கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர்
பிராக் நகரில் ஆரம்பமானது.
1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார் .
1976 - இத்தாலியின் ஃபிறியூல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 989 பேர் கொல்லப்பட்டனர்.
1994 - ஐக்கிய இராச்சியத்தையும்
பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
2001 - சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மசூதி ஒன்றிற்கு சென்றார். மசூதிக்குச்சென்ற முதலாவது
திருத்தந்தை இவரேயாவார்.
பிறப்புகள்
1501 – இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (இ. 1555 )
1856 – சிக்மண்ட் பிராய்ட், ஆத்திரிய உளவியலாளர் (இ. 1939 )
1861 – மோதிலால் நேரு , இந்திய தேசிய காங்கிரசு தலைவர் (இ. 1931 )
1871 – விக்டர் கிரின்யார்டு , நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1935 )
1872 – வில்லெம் தெ சிட்டர் , டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1934 )
1896 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடன் இயற்பியலாளர் (இ. 1966 )
1904 – ஹரி மார்ட்டின்சன் , நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (இ. 1978 )
1942 – லால் தன்ஃகாவ்லா , இந்தியாவின் மிசோரம் மாநில முதலமைச்சர்
1953 – டோனி பிளேர் , ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
1961 – ஜார்ஜ் குளூனி , அமெரிக்க நடிகர், இயக்குநர்.
இறப்புகள்
1859 – அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் , செருமானிய புவியியலாளர், நாடுகாண் பயணி (பி.
1769 )
1862 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி.
1817 )
1915 – வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த் , உருசிய வானியலாளர் (பி. 1828 )
1922 – சாகு மகாராசர், மகாராட்டிரா கோல்காப்பூர் சமத்தான மன்னர் (பி. 1874 )
1952 – மரியா மாண்ட்டிசோரி , இத்தாலிய-டச்சு மருத்துவர், கல்வியாளர் (பி. 1870 )
1959 – ராக்னர் நர்க்சு , எசுத்தோனிய-அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1907 )
1963 – தியோடர் வான் கார்மன் , அங்கேரிய-அமெரிக்கக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1881 )
1979 – கார்ல் வில்லெம் ரெய்ன்முத் , செருமானிய வானியலாளர் (பி. 1892 )
1992 – மார்லீன் டீட்ரிக் , செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (பி. 1901 )
சிறப்பு நாள்
மாவீரர் நாள் ( காபோன் )
மாவீரர் நாள் ( லெபனான் , சிரியா )
ஆசிரியர் நாள் ( ஜமேக்கா )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக