மே 19 ( May 19 )
மே 19 ( May 19 ) கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1535 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.
1536 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி "ஆன் பொலெயின்" வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1604 - கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்டது.
1649 - இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.
1848 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் :
கலிபோர்னியா , நெவாடா , யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $ 15
மில்லியன்களுக்க்குக் கொடுக்க
மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
1897 - ஐரிய எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டு
இங்கிலாந்தின் ரெடிங் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ்
கோளைத் தாண்டி, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி ஆனது.
1971 - சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.
1978 - விடுதலைப் புலிகள் மீதான தடை
ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
1991 - அனைத்து மக்கள் வாக்கெடுப்பில்
குரொவேசியர்கள் தமது விடுதலைக்காக வாக்களித்தனர்.
பிறப்புகள்
1762 – யோஃகான் ஃவிக்டெ , செருமானிய மெய்யியலாளர் (இ. 1814 )
1824 – நானா சாகிப், இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் (இ.
1857 )
1881 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் , துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (இ.
1938 )
1890 – ஹோ சி மின் , வியட்நாமின் 1வது அரசுத்தலைவர் (இ. 1969 )
1910 – நாத்தூராம் கோட்சே , மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (இ. 1949 )
1912 – கிருஷ்ண குமாரசிங் பவசிங் , இந்திய அரசியல்வாதி (இ. 1965 )
1913 – நீலம் சஞ்சீவ ரெட்டி , இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1996 )
1914 – கே. டி. கே. தங்கமணி , இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடி, அரசியல்வாதி (இ. 2001 )
1925 – போல் போட் , கம்போடியாவின் 29வது பிரதமர், இராணுவத் தலைவர் (இ.
1998 )
1925 – மல்கம் எக்ஸ் , அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1965 )
1933 – எட்வர்ட் டி போனோ , மால்ட்டா மருத்துவர், நூலாசிரியர்
1934 – பி. லீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2005 )
1934 – ரஸ்கின் பாண்ட் , இந்திய எழுத்தாளர், கவிஞர்
1964 – முரளி , தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2010 )
1984 – தேச. மங்கையர்க்கரசி , தமிழக இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர்.
இறப்புகள்
1296 – ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை) (பி. 1215 )
1536 – ஆன் பொலின், இங்கிலாந்தின் அரசி, எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி (பி. 1501 )
1864 – நாதனீல் ஹாதோர்ன் , அமெரிக்க எழுத்தாளர் (பி. 1804 )
1895 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர், மெய்யியலாளர் (பி. 1853 )
1898 – வில்லியம் கிளாட்ஸ்டோன் , ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1809 )
1904 – ஜம்சேத்ஜீ டாட்டா , இந்தியத் தொழிலதிபர் (பி. 1839 )
1935 – டி. ஈ. லாரன்சு, பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1888 )
1952 – பெங்களூர் நாகரத்தினம்மா , கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (பி. 1878 )
1985 – பி. சுந்தரய்யா , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மார்க்சிய அரசியல்வாதி (பி. 1913 )
1996 – ஜானகி இராமச்சந்திரன் , தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழக அரசியல்வாதி (இ. 1924 )
1994 – ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ் , அமெரிக்காவின் 37வது முதல் சீமாட்டி , ஊடகவியலாளர் (பி. 1929 )
2007 – ஆ. பு. வள்ளிநாயகம் , தமிழக எழுத்தாளர், இதழாளர் (பி. 1953 )
2009 – க. வேலாயுதம் , ஈழத்து எழுத்தாளர் (பி. 2017 )
சிறப்பு நாள்
இனவழிப்பு நினைவு நாள் ( கிரேக்கம் )
ஓ சி மின் பிறந்தநாள் ( வியட்நாம்)
மால்க்கம் எக்சு நாள் ( ஐக்கிய அமெரிக்கா)
கல்லீரல் அழற்சி சோதனை நாள் (ஐக்கிய அமெரிக்கா)
அன்னையர் நாள் ( கிர்கிசுத்தான்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக