மே 16 ( May 16 )
மே 16 ( May 16 ) கிரிகோரியன் ஆண்டின் 136 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 137 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம்
இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.
1811 - கூட்டுப் படைகள் ( ஸ்பெயின் ,
போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா )
பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.
1916 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள
சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.
1920 - ரோமில் ஜோன் ஒஃப் ஆர்க்
திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.
1932 - பம்பாயில் இந்துக்களுக்கும்
முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1960 - கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியோடோர் மைமான் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.
1966 - சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.
1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வெள்ளிக் கோளில் இறங்கியது.
1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
1975 - ஜூன்கோ டபெய் , எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.
1992 - எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து
பூமிக்குத் திரும்பியது.
2004 - 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர்
கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியா க் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.
2006 - தமிழ்நாட்டில் அனைத்து
சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
2006 - நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிறப்புகள்
1845 – இலியா மெச்னிகோவ், நோபல் பரிசு பெற்ற உக்ரைனிய-பிரான்சிய உயிரியலாளர் (இ. 1916 )
1904 – எஸ். ஆர். கனகநாயகம் , இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் பி. 1989 )
1925 – நான்சி கிரேசு உரோமன் , அமெரிக்க வானியலாளர்
1931 – கே. நட்வர் சிங் , இந்திய அரசியல்வாதி
1935 – வீ. செல்வராஜ் , மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 2000 )
1950 – யொஹான்னஸ் ஜியார்க் பெட்நோர்ட்ஸ் , நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர்
1953 – பியர்ஸ் புரோஸ்னன் , அயர்லாந்து-அமெரிக்க நடிகர்.
இறப்புகள்
1620 – வில்லியம் ஆடம்சு ஆங்கிலேய கடற்படை அதிகாரி (பி. 1564 )
1830 – ஜோசப் ஃபூரியே, பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1768 )
1934 – அரிசுடார்க் பெலோபோல்சுகி , உருசிய வானியலாளர் (பி. 1854 )
1947 – பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு ,
நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1861 )
1948 – முகமது ஹபிபுல்லா , இந்திய அரசியல்வாதி, ஆட்சியாளர் (பி. 1869 )
2004 – கமலா மார்க்கண்டேய , இந்திய ஆங்கில எழுத்தாளர் (பி. 1924 )
2007 – கு. கலியபெருமாள் , தமிழக சமூக, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1924 )
2010 – அனுராதா ரமணன் , தமிழக எழுத்தாளர் (பி. 1947 )
2013 – ஹைன்றிக் ரோரர் , நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1933 )
2014 – அமலெந்து டே , இந்திய-வங்காள வரலாற்றாசிரியர் (பி. 1929 )
சிறப்பு நாள்
ஆசிரியர் நாள் ( மலேசியா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக