மே 23 ( May 23 )
மே 23 ( May 23 ) கிரிகோரியன் ஆண்டின் 143 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 144 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1430 - ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில்
பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள்.
1568 - நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1805 - நெப்போலியன் பொனபார்ட்
இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
1813 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார்
வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று "விடுவிப்பாளர்" எனத தன்னை அறிவித்தார்.
1846 - மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.
1865 - வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
1915 - முதலாம் உலகப் போர் : இத்தாலி
ஆஸ்திரியா - ஹங்கேரி மீது போரை அறிவித்தது.
1929 - மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் "கார்னிவல் கிட்" வெளி வந்தது.
1949 - ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.
1951 - திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.
1958 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
1998 - புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
பிறப்புகள்.
1707 – கரோலஸ் லின்னேயஸ் , சுவீடிய உயிரியலாளர், மருத்துவர் (இ. 1778 )
1848 – ஓட்டொ லிலியென்தால், செருமானிய விமானி, பொறியியலாளர் (இ. 1896 )
1883 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் , அமெரிக்க நடிகர் (இ. 1939 )
1908 – ஜான் பார்டீன் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1991 )
1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009 )
1922 – பாலா தம்பு , இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இ. 2014 )
1951 – அனத்தோலி கார்ப்பொவ் , உருசிய சதுரங்க வீரர்
1951 – அன்டோனிசு சமராசு , கிரேக்கத்தின் 185வது பிரதமர்
1967 – ரகுமான், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.
இறப்புகள்
230 – முதலாம் அர்பன் (திருத்தந்தை)
1423 – எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (பி. 1328 )
1895 – பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், கனிமவியலாளர் (பி.
1798 )
1906 – ஹென்ரிக் இப்சன் , நோர்வே இயக்குநர், நாடகாசிரியர் (பி. 1828 )
1937 – ஜான் டி. ராக்பெல்லர் , அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1839 )
1945 – ஹைன்ரிச் ஹிம்லர் , செருமானிய இராணுவத் தளபதி, அரையல்வாதி (பி.
1900 )
1973 – கம்பதாசன் , தமிழகக் கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1916 )
1981 – உடுமலை நாராயணகவி, தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1899 )
1996 – குரோனிது இலியூபார்சுகி , உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1934 )
2001 – பா. ராமச்சந்திரன் , தமிழக அரசியல்வாதி (பி. 1921 )
2008 – பார்கவி ராவ் , இந்திய எழுத்தாளர் (பி. 1955 )
2015 – ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர், கணிதவியலாளர் (பி.
1928 )
2016 - பி. ஆர். தேவராஜ் , தமிழ்த் திரைப்பட இயக்குநர்.
சிறப்பு நாள்
தொழிலாளர் தினம் ( ஜமேக்கா )
உலக ஆமைகள் நாள்
மாணவர்கள் தினம் ( மெக்சிகோ )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக