மே 7 ( May 7 )
மே 7 ( May 7 ) கிரிகோரியன் ஆண்டின் 127 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 128 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 238 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1697 - சுவீடனில் ஸ்டொக்ஹோம் நகரின் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது.
1840 - மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் கொல்லப்பட்டனர்.
1895 - ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது
வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1915 - முதலாம் உலகப் போர் :
ஜெர்மனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல்
பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.
1920 - போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் க்கைப்பற்றினர். இவர்கள் பின்னர் ஒரு மாதத்தின் பின்னர்
செம்படைகளினால் வெளியேற்றப்பட்டனர்.
1920 - சோவியத் ரஷ்யா ஜோர்ஜியாவை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.
1927 - நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோட்ல் ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில்
கையெழுத்திட்டார்.
1946 - சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1948 - ஐரோப்பியப் பேரவை உருவாக்கப்பட்டது.
1952 - ஒருங்கிணைந்த மின்சுற்று தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
1954 - வியட்நாமில் "தியன் பியன் பு" சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
1992 - நாசாவின் என்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1999 - கினி-பிசாவுநாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் அரசுத் தலைவர் ஜொவாவோ பெர்னார்டோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2002 - சீனாவின் விமானம் ஒன்று மஞ்சள் கடலில் வீழ்ந்ததில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - ரோமப் பேரரசின் ஹெரோட் மன்னனின் கல்லறை ஜெருசலேம் நகருக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
2007 - முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்று
தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் ( the Polarstern ), கண்டுபிடித்துள்ளதாக
ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2007 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த
வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.
பிறப்புகள்
1711 – டேவிடு யூம் , இசுக்கொட்டிய பொருளியலாளர், வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1776 )
1814 – ராபர்ட் கால்டுவெல் , அயர்லாந்து திராவிட மொழியியலாளர் (இ. 1891 )
1819 – ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ , உருசிய வானியலாளர் (இ. 1905 )
1833 – ஜொகான்னெஸ் பிராம்ஸ் , செருமானிய இசையமைப்பாளர் (இ. 1897 )
1840 – பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி , உருசிய இசைமைப்பாளர் (இ. 1893 )
1861 – இரவீந்திரநாத் தாகூர் , நோபல் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1941 )
1880 – பாண்டுரங்க வாமன் காணே , இந்திய இந்தியவியலாளர், சமக்கிருந்த அறிஞர் (இ. 1972 )
1883 – தமிழவேள் உமாமகேசுவரனார் , தமிழகத் தமிழறிஞர் (இ. 1941 )
1901 – கேரி கூப்பர் , அமெரிக்க நடிகர் (இ.
1961 )
1919 – இவா பெரோன் , அர்ச்செந்தீன நடிகை (இ. 1952 )
1927 – ரூத் பிராவர் ஜாப்வாலா , செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் (இ.
2013 )
1935 – அ. மா. சாமி , தமிழக எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர்
1949 – சு. திருநாவுக்கரசர் , தமிழக அரசியல்வாதி
1968 – கிருஷ்ணா டாவின்சி , தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012 )
1971 – தாமசு பிக்கெட்டி, பிரான்சிய பொருளியலாளர்
1989 – அதர்வா , தமிழகத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
1617 – டேவிட் பாப்ரிசியசு , செருமானிய வானியலாளர், இறையியலாளர் (பி. 1564 )
1825 – அந்தோனியோ சாலியரி , இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1750 )
1964 – பி. கண்ணாம்பா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1910 )
1990 – சாம் தம்பிமுத்து , இலங்கை அரசியல்வாதி (பி. 1932 )
2011 – வில்லார்டு பாயில் , நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர் (பி. 1924 )
2015 – அமலெந்து குகா, இந்திய வரலாற்றாசிரியர், கல்வியாளர், நூலாசிரியர் (பி. 1924 )
சிறப்பு நாள்
வானொலி நாள் ( உருசியா ,
பல்காரியா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக