திங்கள், 1 மே, 2017

மே 2 ( May 2 )

மே 2 ( May 2 )

மே 2 ( May 2 ) கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1568 - ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த
முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினாள்.
1808 - மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1814 - முதலாவது மெதடிஸ்த ஆயர்
தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.
1876 - பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது.
1885 - புல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தான்.
1889 - எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன்
இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
1928 - அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான
மிக்கி எலியின் படத்தினை வரைந்தார்.
1933 - இட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.
1945 - இரண்டாம் உலகப் போர் :
பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக
சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர்.
1952 - உலகின் முதலாவது ஜெட் விமானம் , டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும்
ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.
1964 - வியட்நாம் போர் : சாய்கோன் நகரில்
அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.
1964 - 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.
1982 - போக்லாந்து போர் :
பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
2002 - கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
2004 - நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள்
கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர்.
2006 - குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1729 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் (இ. 1796 )
1806 – கத்தரீன் லபோரே , பிரான்சிய அருட்சகோதரி, புனிதர் (இ. 1876 )
1843 – எலைஜா மெக்காய் , கனடிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1929 )
1859 – செரோம் கே. செரோம், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1927 )
1881 – அலெக்சாண்டர் கெரென்சுகி , உருசியாவின் 10வது பிரதமர் (இ. 1970 )
1921 – சத்யஜித் ராய் , இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1992 )
1927 – ந. சஞ்சீவி , தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1988 )
1935 – கு. சின்னப்ப பாரதி , தமிழக புதின எழுத்தாளர், அரசியல்வாதி
1943 – கே. என். கோவிந்தாச்சார்யா , இந்திய அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர்
1969 – பிறயன் லாறா , திரினிதாது துடுப்பாளர்
1972 – டுவெயின் ஜான்சன் , அமெரிக்க-கனடிய மற்போர் வீரர், நடிகர்
1975 – டேவிட் பெக்காம், ஆங்கிலேயக் காற்பந்து வீரர்
1982 – இசைப்பிரியா , தமிழீழ ஊடகவியலாளர் (இ. 2009 )
2015 – சார்லட், கேம்பிரிட்ச் இளவரசி, ஐக்கிய இராச்சியத்தின் 4வது
முடிக்குரியவர்.

இறப்புகள்

373 – அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார் , எகிப்திய ஆயர், புனிதர் (பி. 298 )
1519 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக்கலைஞர் (பி. 1452 )
1915 – கிளாரா இம்மெர்வார், செருமானிய வேதியியலாளர் (பி. 1870 )
1979 – கியூலியோ நட்டா , நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (பி.
1903 )
1997 – பாவ்லோ பிரையர் , பிரேசில் மெய்யியலாளர் (பி. 1921 )
2005 – வீ கிம் வீ , சிங்கப்பூரின் 4வது
குடியரசுத் தலைவர் (பி. 1915 )
2009 – கே. பாலாஜி , தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்

சிறப்பு நாள்

தேசிய கல்வி நாள் ( இந்தோனேசியா )
ஆசிரியர் நாள் ( ஈரான் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக