மே 9 ( May 9 )
மே 9 ( May 9 ) கிரிகோரியன் ஆண்டின் 129 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 130 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1502 - கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504)
ஸ்பெயினில் இருந்து தொடங்கினார்.
1671 – ஐரிஷ் இராணுவ அதிகாரியான
தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில்
ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.
1874 - குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி (omnibus) பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1901 - அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம்
மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது.
1914 - துடுப்பாட்டத்தில் 3000 முதற்தர
விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையை ஜாக் ஹேர்ண் பெற்றார்.
1919 - இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது.
அரிசிப் பாவனை மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.
1920 - போலந்து இராணுவம் உக்ரேனின்
கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது.
1927 - கன்பராவில்
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.
1933 - மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
1936 - இத்தாலி அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா ,
எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாடு உருவாகியது.
1940 - இரண்டாம் உலகப் போர் : டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனிய யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை
பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர்.
1942 - இரண்டாம் உலகப் போர் : உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள்
நாசிகளினால் கொல்லப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் : சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
1945 - இரண்டாம் உலகப் போர் : பெர்லினில் கடைசி ஜெர்மன் படைகள் சோவியத் தளபதி
கியோர்கி சூக்கொவ் இடம் சரணடைந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் :
யூகொஸ்லாவியாவில் நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர் : ஜெர்மனிய இராணுவத் தளபதி ஹேர்மன் கோரிங்
அமெரிக்க இராணுவத்தால் கைப்பற்றப்பட்டான்.
1945 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட
நோர்வேயின் அதிபராக இருந்த விட்குன் உயிஸ்லிங் நோர்வேயில் கைது செய்யப்பட்டார்.
1945 - இரண்டாம் உலகப் போர் : சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன.
1945 - இரண்டாம் உலகப் போர் : கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.
1945 - கிழக்குப் போர்முனை : இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.
1955 - பனிப்போர் : மேற்கு ஜெர்மனி
நேட்டோவில் இணைந்தது.
1956 - உலகின் 8-வது உயரமான
மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.
1980 - புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
1985 - காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1987 - போலந்து பயணிகள் விமானம்
வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183 பேர் கொல்லப்பட்டனர்.
1988 - கன்பராவில்
அவுஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
2002 - ரஷ்யாவில் காஸ்பீஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
2004 - செச்னியா அதிபர் அகமது காதீரொவ் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2007 மே 09ம் தேதி தினகரன் தமிழ் நாளிதழில் வெளியான சர்வே காரணமாக
திராவிட முன்னேற்ற கழகத்தில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1408 – அன்னமாச்சாரியார் , தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர் (இ. 1503 )
1540 – மகாராணா பிரதாப் , உதய்பூர் இராச்சிய அரசர் (இ. 1597 )
1828 – அன்ட்ரூ மறீ , தென்னாப்பிரிக்க எழுத்தாளர், கிறித்துவப் பாதிரியார் (இ.
1917 )
1837 – ஆடம் ஓப்பெல் , ஓபெல் நிறுவனத்தை நிறுவிய செருமானியப் பொறியியலாளர் (இ. 1895 )
1866 – கோபால கிருஷ்ண கோகலே , இந்தியப் பொருளியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1915 )
1874 – ஹாவர்ட் கார்ட்டர் , ஆங்கிலேயத் தொல்லியலாளர் (இ. 1939 )
1921 – சோபி சோல் , செருமானிய செயற்பாட்டாளர் (இ. 1943 )
1954 – மல்லிகா சாராபாய் , இந்திய சமூக ஆர்வலர்
1955 – டி. ராஜேந்தர் , தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், இசைக் கலைஞர், அரசியல்வாதி
1988 – சேசன் பெரியசாமி , மொரிசியசு இசைக்கலைஞர்.
இறப்புகள்
1805 – பிரெடிரிக் சில்லர் , செருமானியக் கவிஞர், வரலாற்றாளர் (பி.
1759 )
1931 – ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் ,
நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1852 )
1941 – தமிழவேள் உமாமகேசுவரனார் , தமிழகத் தமிழறிஞர், வழக்குரைஞர் (பி.
1883 )
1976 – ஆதி நாகப்பன் , மலேசிய எழுத்தாளர், ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1926 )
1986 – டென்சிங் நோர்கே , நேப்பால மலையேறி (பி. 1914 )
2014 – ஜானகி ஆதி நாகப்பன் , மலேசிய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1925 )
2014 – சாரல்நாடன், இலங்கை மலையக எழுத்தாளர்
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( குயெர்ன்சி , யேர்சி )
ஐரோப்பா நாள் ( ஐரோப்பிய ஒன்றியம் )
வெற்றி நாள் ( சோவியத் ஒன்றியம் ,
அசர்பைஜான் , பெலருஸ் , பொசுனியா எர்செகோவினா , சியார்சியா , இசுரேல் ,
கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா ,
உருசியா , செர்பியா , தஜிகிஸ்தான் ,
துருக்மெனிஸ்தான் , உக்ரைன் ,
உசுபெக்கிசுத்தான், ஆர்மீனியா )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக