ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

மே 1 ( May 1 )

மே 1 ( May 1 )

மே 1 ( May 1 ) கிரிகோரியன் ஆண்டின் 121 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 122 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 244 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1328 - ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக
இங்கிலாந்து அங்கீகரித்தது.
ஸ்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1707 - இங்கிலாந்து மற்றும்
ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.
1778 - அமெரிக்கப் புரட்சி :
பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.
1834 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.
1840 - உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை ,
பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.
1851 - லண்டனில் பெரும் பொருட்காட்சி
விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.
1886 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும்
தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1891 - பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர்.
1898 - அமெரிக்க கடற்படையினர் மணிலா விரிகுடாவில் ஸ்பானிய கடற்படைக் கப்பலை தாக்கியழித்தனர்.
1900 - ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1915 - ஆர்.எம்.எஸ். லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 அவதும் கடசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.
1925 - சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134
மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.
1930 - புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1931 - நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
1940 - கோடை கால ஒலிம்பிக் போட்டிகள்
போர் காரணமாக நிறுத்தப்பட்டன.
1941 - இரண்டாம் உலகப் போர் : ஜெர்மனியப் படைகள் கிரேக்க தீவான கிறீட் மீது மிகப் பெரும் வான் தாக்குதலை நிகழ்த்தினர்.
1945 - சோவியத் இராணுவத்தினர்
பேர்லினில் நாடாளுமன்றக்க் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.
1946 - மேற்கு அவுஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1948 - கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டாது. கிம் உல்-சுங் அதன் முதலாவது அதிபரானார்.
1950 - குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.
1956 - இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
1960 - மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது.
1961 - கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
1977 - தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
1978 - ஜப்பானியரான நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதரானார்.
1987 - இரண்டாம் உலகப் போரின் போது
அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு ஈடித் ஸ்டெயின் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.
1989 - இந்திய அமைதி காக்கும் படையின்
வவுனியா சிறையை உடைத்து
விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.
1993 - இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.
2004 - சைப்பிரஸ் , செக் குடியரசு ,
எஸ்தோனியா , ஹங்கேரி , லாத்வியா ,
லித்துவேனியா, மால்ட்டா , போலந்து ,
சிலவாக்கியா,, சிலவேனியா ஆகிய
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
2006 - புவேர்ட்டோ ரிக்கோ அரசு நாட்டின் பணவீக்கம் காரணமாக பாடசாலைகளையும் அரச நிறுவனங்களையும் மூடியது.
2011 - அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் அமெரிக்கப் படையினரால்
பாக்கித்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார் .

பிறப்புகள்

1769 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு , ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1852 )
1852 – சான்டியாகோ ரமோன் கஸல் ,
நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (இ. 1934 )
1875 – காவ்ரீல் திக்கோவ் , சோவியத் வானியலாளர் (இ. 1960 )
1913 – பி. சுந்தரய்யா , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி (இ. 1985 )
1913 – பல்ராஜ் சாஹனீ, இந்திய திரைப்பட நடிகர் (இ. 1973 )
1919 – மன்னா தே , இந்தியப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2013 )
1927 – இராசம்மா பூபாலன் , மலேசிய விடுதலைப் போராளி, பெண்ணியவாதி, ஜான்சி ராணி படைப் போராளி, கல்வியாளர்
1944 – சுரேஷ் கல்மாடி, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி
1950 – இராய் படையாச்சி , தென்னாப்பிரிக்கத் தமிழ் அரசியல்வாதி (இ. 2012 )
1951 – கோர்டன் கிரீனிட்ச் , மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாளர்
1971 – அஜித் குமார் , தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.

இறப்புகள்

1521 – துவார்த்தே பர்போசா , போர்த்துக்கேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1480 )
1555 – இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (பி. 1501 )
1572 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி.
1504 )
1904 – அன்டனின் டுவோராக், செக் இசையமைப்பாளர் (பி. 1841 )
1945 – ஜோசப் கோயபெல்ஸ் , செருமானிய அரசுத்தலைவர் (பி. 1897 )
1959 – சுவாமி சகஜானந்தா , தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி (பி. 1890 )
1965 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910 )
1980 – ஷோபா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1962 )
1993 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கையின் 3வது அரசுத்தலைவர் (பி.
1924 )
2006 – ந. சுப்பு ரெட்டியார் , தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1916 )
2011 – அலெக்ஸ் , தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
2011 – உசாமா பின் லாதின், அல் கைடா தலைவர் (பி. 1957 )
2012 – சண்முகசுந்தரி , தமிழ்த் திரைப்பட நடிகை

சிறப்பு நாள்

மே நாள்
தொழிலாளர் தினம்

சனி, 29 ஏப்ரல், 2017

ஏப்ரல் 30 ( April 30 )

ஏப்ரல் 30 ( April 30 )

ஏப்ரல் 30 ( April 30 ) கிரிகோரியன் ஆண்டின் 120 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 121 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

313 - ரோமப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
1006 - மிகவும் ஒளி கூடிய
சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற
விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.
1483 - இந்த நாளில் புளூட்டோ
நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23 , 1503 வரை அங்கு இருந்தது.
1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15
மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.
1838 - நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.
1945 - அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர்
பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
1955 - இந்திய நடுவன் வங்கியான பாரத ரிசர்வ் வங்கியால் இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது.
1975 - வியட்நாம் போர் : கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர்.
தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
1982 - திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1991 - யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
1993 - ஜெனீவாவில் ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில்
உலகளாவிய வலையமைப்பு பிறந்தது.
1999 - ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.
2006 - ஆப்கானிஸ்தானில்
தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப்
பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பிறப்புகள்

1777 - கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் ,
கணிதவியலர் (இ. 1855 )
1870 - தாதாசாஹெப் பால்கே , இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி (இ.
1944 )
1959 - சிரீபன் கார்ப்பர், கனடாவின் 22வது பிரதமர்
1961 - ஐசேயா தாமஸ் , முன்னாள்
அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1945 - அடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஆஸ்திரிய சர்வாதிகாரி (பி. 1889 )
1961 - லோங் அடிகள் , யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து அடிகள் (பி.
1896 )

சிறப்பு நாள்

வியட்நாம் - விடுதலை நாள் ( 1975 )
மெக்சிக்கோ - சிறுவர் நாள்

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ஏப்ரல் 29 ( April 29 )

ஏப்ரல் 29 ( April 29 )

ஏப்ரல் 29 ( April 29 ) கிரிகோரியன் ஆண்டின் 119 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 120 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 246 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1672 - பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டான்.
1770 - ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டான்.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர் : நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது.
1882 - பெர்லின் நகரில் எலெக்ட்ரோமோட் எனப்படும் பேருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.
1903 - கனடாவின் அல்பேர்ட்டாவில் 30
மில்லியன் கன மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1916 - முதலாம் உலகப் போர் :
பிரித்தானிய இந்தியப் படைகள்
ஓட்டோமான் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் :
இத்தாலியில் ஜெர்மனிய இராணுவம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர் :
நெதர்லாந்தின் பல பகுதிகளிலும் உணவுப்பொதிகளை விமானத்தில் இருந்து வீசும் மானா நடவடிக்கையை
ஐக்கிய இராச்சிய வான்படையினர் ஆரம்பித்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் : ஹிட்லர் ஏவா பிரௌன் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத்து மணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் ஏப்ரல் 30இல் தற்கொலை புரிந்து கொண்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் டாக்கவ் என்ற இடத்தில் இருந்த வதை முகாமை அமெரிக்கப் படைகள் விடுவித்தனர்.
1946 - ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஹிடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
1970 - வியட்நாம் போர் : அமெரிக்க மற்றும்
தென் வியட்நாம் படைகள் வியட் கொங் போராளிகளைத் தேடி கம்போடியாவை முற்றுகையிட்டன.
1975 - வியட்நாம் போர் : கடைசி அமெரிக்க குடிமக்கள் சாய்கோன் நகரை விட்டு புறப்பட்டனர்.
1986 - லொஸ் ஏஞ்சலீஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன.
1991 - வங்காள தேசத்தில் ,
சிட்டாகொங்கில் இடம்பெற்ற
சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
1995 - நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
2005 - 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது.
2007 - வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3 மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை
எண்ணெய்க் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின.

பிறப்புகள்

1769 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு (இ. 1852 )
1818 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் (இ. 1881 )
1848 – ரவி வர்மா , இந்திய ஓவியர் (இ. 1906 )
1864 – குருதத்த வித்யார்த்தி, இந்திய சமூக சேவகர், ஆரியசமாசத்தின் தலைவர் (இ. 1890 )
1872 – பாரெசுட்டு இரே மவுள்டன் , அமெரிக்க வானியலாளர் (இ. 1952 )
1891 – பாரதிதாசன், தமிழகக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ.
1964 )
1893 – அரால்டு இயூரீ , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ.
1981 )
1899 – மு. ச. காரியப்பர், இலங்கை அரசியல்வாதி (இ. 1989 )
1901 – இறோகித்தோ , சப்பானியப் பேரரசர் (இ. 1989 )
1919 – அல்லா ரக்கா , இந்திய தபேலா கலைஞர் (இ. 2000 )
1938 – திமிலை மகாலிங்கம் , ஈழத்து எழுத்தாளர் (இ. 2010 )
1950 – பிலிப் நோய்ஸ் , ஆத்திரேலிய இயக்குநர், தயாரிப்பாளர்
1957 – மேமன்கவி , இலங்கைத் தமிழ்க் கவிஞர், எழுத்தாளர்
1968 – கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் , குரொவாசியாவின் 4வது அரசுத்தலைவர்
1970 – அன்ட்ரே அகாசி , அமெரிக்க டென்னிசு வீரர்
1973 – சுவர்ணலதா , தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2010 )
1991 – ஓவியா , தென்னிந்திய நடிகை

இறப்புகள்

1380 – சியன்னா நகர கத்ரீன் , இத்தாலிய மெய்யியலாளர், புனிதர் (பி. 1347 )
1793 – ஜான் மிச்சல் , ஆங்கிலேய நிலவியலாளர், வானியலாளர் (பி. 1724 )
1933 – அனகாரிக தர்மபால , இலங்கை பௌத்த துறவி, சிங்கள-பௌத்த தேசியவாதி (பி. 1864 )
1951 – லுட்விக் விட்கென்ஸ்டைன் , ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (பி.
1889 )
1971 – நிக்கொலாய் பரபாசொவ் , சோவியத் வானியலாளர் (பி. 1894 )
1980 – ஆல்பிரட் ஹிட்ச்காக் , ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி.
1899 )
2008 – ஆல்பர்ட் ஹாப்மன் , சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (பி. 1906 )
2015 – கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924 )

சிறப்பு நாள்

வேதிப் போரில் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு நாள் ( ஐநா )
பன்னாட்டு நடன நாள் ( யுனெசுக்கோ )
சர்வதேச வானியல் நாள்

வியாழன், 27 ஏப்ரல், 2017

ஏப்ரல் 28 ( April 28 )

ஏப்ரல் 28 ( April 28 )

ஏப்ரல் 28 ( April 28 ) கிரிகோரியன் ஆண்டின் 118 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 119 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 247 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1192 - ஜெருசலேம் மன்னன் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டான்.
1792 - பிரான்ஸ் ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
ஐக்கிய அமெரிக்காவின் அட்மிரல் டேவிட் ஃபராகுட் கூட்டமைப்பிடம் இருந்து
லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினான்.
1876 - இந்தியாவின் அரசியாக
விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
1920 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1932 - மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1945 - முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1952 - இரண்டாம் உலகப் போரின் போது
ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட
ஜப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1965 - டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.
1978 - ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது டாவூட் கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1995 - பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.
1996 - அவுஸ்திரேலியா ,
தாஸ்மேனியாவில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.
2000 - இலங்கை இராணுவத்தினருக்கெதிரான
விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.
2005 - இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம்
கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

1758 – ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் 5வது அரசுத்தலைவர் (இ.
1831 )
1774 – பிரான்சிசு பெய்லி , ஆங்கிலேய வானியலாளர் (இ. 1844 )
1900 – ஜான் ஊர்த், டச்சு வானியலாளர் (இ. 1992 )
1906 – கியேடல் , செக்-அமெரிக்கக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1978 )
1906 – பார்ட் போக் , டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1983 )
1908 – ஆஸ்கர் ஷிண்ட்லர் , செக்-செருமானியத் தொழிலதிபர் (இ. 1974 )
1923 – இரா. செழியன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர்
1924 – கென்னத் கவுண்டா , சாம்பியாவின் 1வது அரசுத்தலைவர்
1926 – ஹார்ப்பர் லீ, அமெரிக்கப் புதின எழுத்தாளர் (இ. 2016 )
1926 – எஸ். ரி. அரசு , இலங்கை நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், ஒளிப்பதிவாளர், சிற்பக் கலைஞர் (இ. 2016 )
1937 – சதாம் உசேன் , ஈராக்கின் 5வது
அரசுத்தலைவர் (இ. 2006 )
1987 – சமந்தா ருத் பிரபு , இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1854 – நத்தானியேல் வாலிக் , தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (பி. 1786 )
1918 – காவ்ரீலோ பிரின்சிப் , யூகோசுலாவிய தேசிய இயக்க உறுப்பினர், போசுனிய செர்பியர் (பி. 1894]])
1942 – உ. வே. சாமிநாதையர் , தமிழகத் தமிழறிஞர், தமிழ் சுவடி ஆய்வாளர், சேகரிப்பாளர், பதிப்பாளர் (பி. 1855 )
1945 – பெனிட்டோ முசோலினி , இத்தாலியின் 27வது பிரதமர் (பி. 1883 )
1955 – தி. வே. சுந்தரம் , இந்தியத் தொழிலதிபர் (பி. 1877 )
2000 – சாலினி இளந்திரையன் , தமிழக சொற்பொழிவாளர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (பி.
1933 )
2005 – தர்மரத்தினம் சிவராம் , இலங்கை ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1959 )
2006 – நா. சோமகாந்தன் , ஈழத்து எழுத்தாளர் (பி. 1934 )
2007 – கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர் , செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1912 )

சிறப்பு நாள்

வழக்கறிஞர் தினம் ( ஒடிசா, இந்தியா )
முஜாகிதீன் வெற்றி நாள் ( ஆப்கானித்தான் )
வேலையின் போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்.