செவ்வாய், 4 ஏப்ரல், 2017

ஏப்ரல் 5 ( April 5 )

ஏப்ரல் 5 ( April 5 )

ஏப்ரல் 5 ( April 5 ) கிரிகோரியன் ஆண்டின் 95 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 96 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடி போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
1654 – ஆங்கில - டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.
1722 – டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன்
ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார்.
1792 – அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
1804 – முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.
1818 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெர்னார்டோ ஓ'ஹிகின்சு தலைமையில்
சிலியின் விடுதலை இயக்கம் வெற்றி கண்டது. 2,000 எசுப்பானியர்களும், 1000 சிலியர்களும் உயிரிழந்தனர்.
1879 – பொலிவியா , மற்றும் பெரு மீது
சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.
1897 – கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
1930 – மகாத்மா காந்தி அரபிக் கடலின்
குஜராத் கடற்கரையோரப் பகுதியான
தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241
மைல் நடைப் பபயணத்தை முடித்தார்.
1932 – பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.
1936 – மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர் : ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின.
1944 – இரண்டாம் உலகப் போர் : கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1945 – பனிப்போர் :
யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.
1946 – 11 மாதங்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகின.
1949 – அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர்.
1955 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார்.
1956 – பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.
1956 – இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன வெற்றி பெற்றது.
1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
1964 – பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1971 – இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1976 – மக்கள் சீனக் குடியரசில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
1981 – தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
1998 – அகாசி கைக்ஜோ , உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், சப்பானில் 3.8
பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.

பிறப்புகள்

1588 – தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1679 )
1827 – ஜோசப் லிஸ்டர் , ஆங்கிலேய மருத்துவர் (இ. 1912 )
1879 – ஆர்தர் பெரிடேல் கீத்து , இசுக்காட்லாந்து இந்தியவியலாளர் (இ.
1944 )
1900 – ஸ்பென்சர் ட்ரேசி , அமெரிக்க நடிகர் (இ. 1967 )
1901 – சு. சி. பிள்ளை , இந்தியக் கணிதவியலாளர் (இ. 1950 )
1908 – ஜெகசீவன்ராம், இந்தியாவின் 4வது
துணைப் பிரதமர் (இ. 1986 )
1916 – கிரிகோரி பெக் , அமெரிக்க நடிகர், அரசியல் செயற்பாட்டாளர் (இ. 2003 )
1920 – ஆர்தர் ஹெய்லி , ஆங்கிலேய-கனடியப் போர் வீரர், எழுத்தாளர் (இ. 2004 )
1923 – எம். சாரதா மேனன் , இந்திய மனநல மருத்துவர்
1933 – க. கைலாசபதி , இலங்கை தமிழறிஞர், கல்வியாளர், ஊடகவியலாளர் (இ. 1982 )
1935 – டொனால்டு இலிண்டன்-பெல் , ஆங்கிலேய வானியலாளர்
1937 – ஜோசப் லெலிவெல்ட், அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர்
1947 – குளோரியா மகபகல்-அர்ரொயோ , பிலிப்பீன்சின் 14வது அரசுத்தலைவர்
1958 – லசந்த விக்கிரமதுங்க , இலங்கை ஊடகவியலாளர் (இ. 2009 )
1989 – லில்லி ஜேம்ஸ், ஆங்கிலேய நடிகை

இறப்புகள்

1916 – மக்சிம் கோவலவ்சுகி , உருசிய சமூகவியலாளர் (பி. 1851 )
1956 – மணிலால் காந்தி , இந்திய ஊடகவியலாளர், காந்தியவாதி (பி. 1892 )
1957 – ராம. அழகப்பச் செட்டியார் , இந்திய தொழிலதிபர் (பி. 1909 )
1962 – ஆனந்த சமரக்கோன் , சிங்கள இசைக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1911 )
1964 – டக்ளசு மக்கார்த்தர், அமெரிக்கப் படைத்துறைத் தளபதி (பி. 1880 )
1967 – ஹெர்மன் முல்லர் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1890 )
1975 – சங் கை செக், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1887 )
1976 – அங்கையன் கைலாசநாதன் , ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1946 )
1976 – ஹோவார்ட் ஹியூஸ் , அமெரிக்க பொறியியலாளர், இயக்குநர் (பி. 1905 )
1992 – சாம் வோல்ற்றன் , அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1918 )
1993 – திவ்யா பாரதி , இந்திய நடிகை (பி. 1974 )
1994 – கர்ட் கோபேன் , அமெரிக்கப் பாடகர் (பி. 1967 )
1997 – அக்லிலு லெம்மா , எத்தியோப்பிய உயிரியலாளர்
2008 – சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்கநடிகர், இயக்குநர், செயற்பாட்டாளர் (பி. 1923 )

சிறப்பு நாள்

குழந்தைகள் நாள் ( பாலத்தீனம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக