ஏப்ரல் 6 ( April 6 )
ஏப்ரல் 6 ( April 6 ) கிரிகோரியன் ஆண்டின் 96 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 97 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 269 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம்
கிரேக்கர்களால் பதியப்பட்டது.
1782 - தாய்லாந்து மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான்.
முதலாம் ராமா மன்னனாக முடி சூடினான்.
1814 - நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் தமது கடைசிச் சமரை வடக்கு வேர்ஜீனியாவில் நடத்தினர்.
1869 - செலுலோயிட் கண்டுபிடிக்கப்பட்டது.
1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர்
முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக
கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.
1917 - முதலாம் உலகப் போர் : ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.
1936 - ஐக்கிய அமெரிக்கா ,
ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தை
ஜெர்மனி முற்றுகையிட்டது.
1965 - "ஏளி பேட்" ( Early Bird ) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.
1968 - இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.
1973 - பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1994 - ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டாவில் இனப்படுகொலைகள் ஆரம்பமானது.
1998 - இந்தியாவைத் தாக்கக்கூடியதான
நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.
2005 - குர்தியத் தலைவர் ஜலால் தலபானி
ஈராக் அதிபரானார்.
பிறப்புகள்
1483 – ராபியேல் சான்சியோ , இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520 )
1815 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை , தமிழகத் தமிழறிஞர் (இ. 1876
1901 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி , இத்தாலிய செயற்பாட்டாளர் (இ. 1925 )
1909 – ராம. அழகப்பச் செட்டியார் , தமிழகத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1957 )
1928 – ஜேம்ஸ் டூயி வாட்சன் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
1931 – சுசித்ரா சென் , வங்காளத் திரைப்பட நடிகை (இ. 2014 )
1933 – பி. கே. நாயர் , இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (இ. 2016 )
1936 – டி. எம். ஜயரத்ன , இலங்கை அரசியல்வாதி
1938 – கோ. நம்மாழ்வார் , தமிழக இயற்கை ஆர்வலர் (இ. 2013 )
1950 – கருப்பையா வேலாயுதம் , இலங்கை மலையக அரசியல்வாதி (இ. 2015 )
1956 – திலீப் வெங்சர்கார், இந்தியத் துடுப்பாளர்
1963 – ராஃபாயெல் கொறேயா , எக்குவதோரின் 54வது அரசுத்தலைவர்
1973 – பிரசாந்த் , தமிழ்த் திரைப்பட நடிகர்
இறப்புகள்
1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (பி. 1157 )
1520 – ராபியேல் சான்சியோ , இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (பி. 1483 )
1528 – ஆல்பிரெஃக்ட் டியுரே , செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (பி. 1471 )
1829 – நீல்சு என்றிக்கு ஏபெல் , நோர்வே கணிதவியலாளர் (பி. 1802 )
1961 – ஜூல்ஸ் போர்டெட் , நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய மருத்துவர் (பி. 1870 )
1963 – ஆட்டோ சுத்ரூவ , உக்ரைனிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1897 )
1971 – இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி , உருசிய-அமெரிக்க இசையமைப்பாளர் (பி. 1882 )
1974 – விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே, இந்துத்துவவாதி (பி. 1910 )
1984 – சா. பஞ்சு , தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1915 )
1992 – இல. செ. கந்தசாமி, தமிழகத் தமிழறிஞர், இதழாளர் (பி. 1939 )
1992 – ஐசாக் அசிமோவ் , அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1920 )
2001 – தேவிலால் , இந்திய அரசியல்வாதி (பி. 1914 )
2008 – ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே , இலங்கை அரசியல்வாதி (பி. 1953 )
2011 – கல்பகம் சுவாமிநாதன் , தமிழக வீணை இசைக்கலைஞர், கல்வியாளர் (பி.
1922 )
2011 – சுஜாதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1952 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக