சனி, 8 ஏப்ரல், 2017

ஏப்ரல் 9 ( April 9 )

ஏப்ரல் 9 ( April 9 )

ஏப்ரல் 9 ( April 9 ) கிரிகோரியன் ஆண்டின் 99 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 100 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 266 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1241 - மங்கோலியப் படைகள் போலந்து மற்றும் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.
1413 - ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினான்.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர் : ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர் : நோர்வே , மற்றும் டென்மார்க் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது.
1947 - டெக்சாஸ் , ஒக்லகோமா, மற்றும்
கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் கொல்லப்பட்டனர். 970 பேர் காயமடைந்தனர்.
1948 - ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள்
இஸ்ரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1953 - வார்னர் பிறதேர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான "ஹவுஸ் ஒவ் வக்ஸ்" ( House of Wax) இனை வெளியிட்டது
1959 - மேர்க்குரித் திட்டம் : ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.
1967 - முதல் போயிங் 737 பறப்பு.
1984 - யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் றொக்கட் தாக்குதலுக்கு உள்ளானது.
1984 - ஸ்ரீ லங்கா கஜபா றெஜிமென்ட் இராண்வ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.
1991 - ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.
1992 - முன்னாள் பனாமா அதிபர்
மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.
1999 - நைஜர் அதிபர் இப்ராகிம் மைனசாரா படுகொலை செய்யப்பட்டார்.
2003 - ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

பிறப்புகள்

1336 – தைமூர் , துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (இ. 1405 )
1893 – ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மொழியியலாளர் (இ. 1963 )
1899 – முசிரி சுப்பிரமணிய ஐயர் , கர்நாடக இசைப் பாடகர் (இ. 1975 )
1902 – ஓல்கா பெரோவ்ஸ்காயா, சோவியத் குழந்தைகள் எழுத்தாளர் (இ.
1961 )
1917 – பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை, இலங்கைத் தமிழ் ரோமன் கத்தோலிக்க ஆயர் (இ. 2003 )
1918 – ஜோர்ன் உட்சன் , சிட்னி ஒப்பேரா மாளிகையை வடிவமைத்த தென்மார்க்கு கட்டிடக்கலைஞர் (இ. 2008 )
1926 – ஹூக் ஹெஃப்னர் , அமெரிக்கப் பதிப்பாளர்
1929 – சரண் ராணி பாக்லீவால் , இந்திய இசைக்கலைஞர் (இ. 2008 )
1968 – ஜெய் சந்திரசேகர் , அமெரிக்க நடிகர்
1982 – ஜே பருச்செல் , கனடிய நடிகர்
1987 – ஜெசி மெக்கார்ட்னி , அமெரிக்கப் பாடகர், நடிகர்
1990 – கிறிஸ்டென் ஸ்டீவர்ட், அமெரிக்க நடிகை

இறப்புகள்

1626 – பிரான்சிஸ் பேக்கன் , ஆங்கிலேய அரசியல்வாதி, மெய்யியலாளர் (பி. 1561 )
1918 – நிக்கோ பிரொசுமானி , சியோர்சிய ஓவியர் (பி. 1862 )
1959 – பிராங்க் லாய்டு ரைட் , அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1867 )

சிறப்பு நாள்

பாக்தாது விடுதலை நாள் ( ஈராக்கிய குர்திஸ்தான் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக