செவ்வாய், 18 ஏப்ரல், 2017

ஏப்ரல் 19 ( April 19 )

ஏப்ரல் 19 ( April 19 )

ஏப்ரல் 19 ( April 19 ) கிரிகோரியன் ஆண்டின் 109 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 110 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 256 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1587 - ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார்.
1775 - அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.
1810 - வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில்
கூட்டமைப்பின் ஆதரவாளர்களினார்
ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்டனர். நான்கு படையினரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1892 - ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில் தானுந்து ஒன்றை சார்ல்ஸ் டூரியா என்பவர் மசாசுசெட்சில் ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில் செலுத்தினார்.
1902 - குவாத்தமாலாவில் 7.5 ரிக்டர்
நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.
1904 - கனடாவின் டொரோண்டோ நகரத்தின் பெரும் பகுதிகள் தீயினால் அழிந்தது.
1928 - ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியுமான தொகுதி வெளிவந்தது.
1936 - பாலஸ்தீனர்களின்
ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கப்பட்டது.
1954 - உருது , மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
1971 - முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின்
சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1975 - இந்தியாவின் முதலாவது
செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
1988 - அன்னை பூபதி மட்டக்களப்பில் ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணா நோன்பிருந்து இறந்தார்.
1989 - அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1993 - ஐக்கிய அமெரிக்கா , டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்க எஃப்பிஐ இன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ் உட்பட 87 பேர் கொல்லப்பட்டனர்.
1995 - அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானாதில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
1995 - சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக
விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
1999 - ஜெர்மனியின் நாடாளுமன்றம்
பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.
2006 - நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறப்புகள்

1801 – குஸ்டாவ் பெச்னர் , செருமானியக் கவிஞர், உளவியலாளர் (இ. 1887 )
1864 – மகாத்மா அன்சுராசு , இந்திய ஆரிய சமாஜம் அமைப்பின் தலைவர், கல்வியாளர் (இ. 1938 )
1892 – கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன், உருசிய-சோவியத் வானியலாளர் (இ. 1956 )
1903 – கோ. சாரங்கபாணி , சிங்கப்பூர் ஊடகவியலாளர், தமிழ் ஆர்வலர் (இ. 1974 )
1929 – குமாரி ருக்மணி , தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2007 )
1937 – ஜோசப் எஸ்திராடா , பிலிப்பீன்சின் 13வது அரசுத்தலைவர்
1945 – மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி , கேரளக் கத்தோலிக்கப் பேராயர்
1948 – அலெக்சிய் சுதாரோபின்சுகி , உருசிய சோவியத் வானியலாளர்
1957 – முகேஷ் அம்பானி , இந்தியத் தொழிலதிபர்
1987 – மரியா சரப்போவா , உருசிய டென்னிசு வீராங்கனை

இறப்புகள்

1719 – பரூக்சியார் , முகலாயப் பேரரசர் (பி. 1685 )
1824 – ஜார்ஜ் கோர்டன் பைரன் , ஆங்கிலேய-இசுக்கொட்டியக் கவிஞர் (பி.
1788 )
1881 – பெஞ்சமின் டிஸ்ரைலி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1804 )
1882 – சார்லஸ் டார்வின் , ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1809 )
1889 – வாரன் தெ லா ரூ , பிரித்தானிய வானியலாளர், வேதியியலாளர் (பி. 1815 )
1906 – பியேர் கியூரி , நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1859 )
1944 – சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் , இந்திய அரசியல்வாதி (பி. 1852 )
1955 – ஜிம் கார்பெட் , இந்திய இராணுவ அதிகாரி, நூலாசிரியர் (பி. 1875 )
1967 – கொன்ராடு அடேனார் , செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி.
1876 )
1973 – திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி , தமிழக நாதசுவரக் கலைஞர் (பி.
1896 )
1974 – அயூப் கான் , பாக்கித்தானின் அரசுத்தலைவர் (பி. 1907 )
1988 – அன்னை பூபதி , ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932 )
1993 – டேவிட் கொரேஷ் , அமெரிக்க ஆன்மிகத் தலைவர் (பி. 1959 )
1998 – ஒக்டாவியோ பாஸ் , நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞர் (பி. 1914 )
2013 – சிவந்தி ஆதித்தன், தமிழகத் தொழிலதிபர் (பி. 1936 )
2013 – செ. குப்புசாமி , தமிழக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி.1926 )

சிறப்பு நாள்

பெரும் இனவழிப்பு நினைவு நாள் ( போலந்து )
நாட்டுப்பற்றாளர் நாள் ( தமிழீழம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக