ஏப்ரல் 17 ( April 17 )
ஏப்ரல் 17 ( April 17 ) கிரிகோரியன் ஆண்டின் 107 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 108 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 258 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
69 - பெட்ரியாக்கும் என்ற இடத்தில் இடம்பெற்ற போரின் பின்னர், விட்டேலியஸ் என்பவன் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
1492 - வாசனைப் பொருட்களை
ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பஸ் ஸ்பெயின் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
1524 - இத்தாலிய நாடுகாண் பயணி
ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
வேர்ஜீனியா கூட்டணியில் இருந்து விலகியது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
கூட்டமைப்புப் படைகள் வட கரோலினாவின் பிளைமவுத் நகரைத் தாக்கினர்.
1895 - சீன-ஜப்பான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் சீனாவுக்கும்
ஜப்பானுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது.
1941 - இரண்டாம் உலகப் போர் :
யூகொஸ்லாவியப் பேரரசு
ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1961 - அமெரிக்க உளவு நிறுவனமான
சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட
கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார்.
1969 - செக்கோசிலவாக்கியாவின்
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்
அலெக்சாண்டர் டூப்செக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1970 - அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
1971 - முஜிபுர் ரகுமான் தலைமையில்
வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1975 - கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நாம் பென்னைக் கைப்பற்றினர். கம்போடிய அரசு சரணடைந்தது.
1986 - 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம்
நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
2004 - இந்தியத் திரைப்பட நடிகை
சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.
பிறப்புகள்
44 – எவரிஸ்துஸ் (திருத்தந்தை) (இ. 107 )
1598 – ஜியோவானி ரிக்கியொலி , இத்தாலிய மதகுரு, வானியலாளர் (இ.
1671 )
1756 – தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805 )
1899 – வின்சென்ட் விகில்சுவொர்த் , பிரித்தானிய உயிரியலாளர் (இ. 1994 )
1910 – அடிகளாசிரியர் , தமிழகத் தமிழறிஞர் (இ. 2012 )
1912 – தகழி சிவசங்கரப் பிள்ளை , மலையாள எழுத்தாளர் (இ. 1999 )
1915 – சிறிமாவோ பண்டாரநாயக்கா , இலங்கையின் 6வது பிரதமர் (இ. 2000 )
1916 – ஆ. தியாகராசா , இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1981 )
1917 – வ. சுப. மாணிக்கம், தமிழகத் தமிழறிஞர், கவிஞர் (இ. 1989 )
1959 – சான் பீன் , ஆங்கிலேய நடிகர்
1966 – விக்ரம் , தமிழ்த் திரைப்பட நடிகர்
1972 – முத்தையா முரளிதரன் , இலங்கைத் துடுப்பாலர்
1979 – சித்தார்த் , தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர்
1981 – சாந்தி சௌந்திரராஜன் , தமிழக தடகள விளையாட்டு வீராங்கனை
1981 – மயூரன் சுகுமாரன் , இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (இ. 2015 )
இறப்புகள்
1680 – கத்தேரி தேக்கக்விதா , அமெரிக்கப் புனிதர் (பி. 1656 )
1790 – பெஞ்சமின் பிராங்கிளின் , அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், அரசியல்வாதி (பி. 1706 )
1859 – தாந்தியா தோபே, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1814 )
1942 – சான் பத்தீட்டு பெரென் , நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1870 )
1946 – வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (பி.
1869 )
1975 – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் , இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் (பி. 1888 )
1989 – மு. ச. காரியப்பர், இலங்கை அரசியல்வாதி (பி. 1899 )
1992 – புலியூர்க் கேசிகன் , தமிழக எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் (பி. 1923 )
1994 – ரோஜர் ஸ்பெர்ரி , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1913 )
2004 – சௌந்தர்யா , தென்னிந்திய நடிகை (பி. 1971 )
2013 – டி. கே. ராமமூர்த்தி , தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1922 )
2013 – வி. எஸ். ரமாதேவி , கருநாடக மாநிலத்தின் 13வது ஆளுநர் (பி. 1934 )
2014 – கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ,
நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (பி. 1927 )
2014 – கர்பால் சிங் , மலேசிய அரசியல்வாதி (பி. 1940 )
2015 – கி. லோகநாதன் , மலேசியத் தமிழறிஞர், உளவியலாளர் (பி. 1940 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( சிரியா , 1946)
உலக ஈமோஃபீலியா நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக